Wednesday, November 28, 2007

அவ்வை சண்முகி‍ - தரமான நகைச்சுவைப் படமா???

முன்னுரை:

சாம்பார்வடை என்ற பதிவர் "நீங்கள் சிபாரிசு செய்யும் படங்கள்" என்று விடுத்திருந்த அழைப்பை ஏற்று பதிவர் கோவி.கண்ணண் அவர்கள் சிபாரிசு செய்த படங்களின் வரிசையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.அதில் அவர் குறிப்பிட்டு இருந்த படங்களில் அவ்வை சண்முகியும் ஒன்று.அக் கருத்தில் இருந்து மாறுபடுவதால் இந்தப் பதிவு.

கேள்வி‍ : அவ்வை சண்முகி தரமான நகைச்சுவைப் படமா?
என் பதில் : இல்லை.மூன்றாம் தரமான நகைச்சுவைப் படம்.

பொருள்:

படத்தைப் பற்றிக் கூறும் முன்பு படத்தின் கதையை சொல்ல வேண்டும் என்பது விதி.படத்தின் ஒன்லைன் "குழந்தைக்காக மனைவியை விட்டுப் பிரிந்த ஒரு ஆண்,பெண்ணாக மாறுவதால் ஏற்படும் குழப்பங்கள்".நன்றாகத் தான் உள்ளது(மிஸஸ் டவுட் பயரில் இருந்து சுட்டது ஆச்சே)

ஆனால் பட‌த்தை எடுத்திருக்கும் வித‌ம்.முழுக்க முழுக்க‌ ஆபாச‌ம்.இர‌ட்டை அர்த்த வ‌ச‌ன‌ங்க‌ளையும்,விர‌ச‌மான காட்சிஅமைப்புக‌ளாலும் ம‌ட்டுமே காட்சிக‌ளை நக‌ர்த்தி இருப்பார்க‌ள்.

தான் பெண்ணல்ல‌ ,ஆண் என்று மீனாவிற்கு க‌ம‌ல் சொல்லும் உச்சக் கட்ட‌ காட்சி ஒரு உச்ச‌க் க‌ட்ட‌ உதார‌ண‌ம்.இதே க‌தையை வைத்து சுரேஷ் ச‌க்க‌ர‌வ‌ர்த்தி எடுத்த‌ ச‌ன் தொலைக்காட்சி நாட‌க‌ம் (பதி சபாபதி)இதை விட‌ எவ்வள‌வோ பெட்ட‌ர்.

சுருளிராஜ‌ன்,வெண்ணிற‌ ஆடை மூர்த்தி வ‌கைய‌றாக்க‌ள் இருந்தாலும் நாம் அனைவ‌ரும் சிலாகிப்பது நாகேஷைப் பார்த்து தான்.

என்னுடைய‌ த‌ர‌மான‌ ந‌கைச்சுவைப் ப‌ட‌ங்க‌ளின் லிஸ்ட்:

1)காத‌லிக்க‌ நேர‌மில்லை.
2)இன்று போய் நாளை வா.
3)தேன்மழை.
4)ச‌பாபதி.
5)ச‌பாஷ்மீனா+வாலிப‌விருந்து=உள்ள‌த்தை அள்ளித்தா.

முடிவுரை:

இது என் க‌ருத்து. அனைவரும் ஏற்றுக் கொள்ள‌ வேண்டும் என்று இல்லை.மாறுப‌ட்ட‌ க‌ருத்துக்க‌ள் தான் வாழ்க்கையை சுவார‌சிய‌ம் ஆக்குகின்ற‌ன‌.

குறிப்பு:

1) நானும் க‌ம‌ல் ர‌சிக‌ன் தான்.
2) கோவிச்சுக்காதீங்க கோவி(இதான‌ முர‌ண்தொடை)

இக்க‌ட்டுரைக்கு எத்த‌ன‌ மார்க் கொடுப்பீங்க‌

Monday, November 26, 2007

அழகிய தமிழ்மகன்‍ -பாடலும் போலியா???

அழகிய தமிழ்மகன் கதை "போலி" கதை என்பது நாம் அறிந்ததே.அப்படத்தில் இடம் பெற்று இருக்கும் "மதுரைக்குப் போகாதடி"என்ற பாடலைக் கேட்ட அன்றிலிருந்தே மண்டைக்குள் ஒரு குரல்.ஆ! தொடர்கதையின் நாயகனுக்கு வருமே அந்த மாதிரி.

நிற்கும் போதும்,நடக்கும் போதும்,பறக்கும் போதும் யோசித்ததில் கானல் நீர் விலகியது.காட்சிப் பிழை தெளிந்தது.(courtesy - ‍பாரதி)

அந்தப் பாடலின் முதல் பகுதி சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த "பள்ளிக்கூடம் போகாமலே,நாங்க பாடம் படிக்காமலே" (வைகாசி பொறந்தச்சு)பாடல் போலவே இருப்பதைக் காணலாம்.

A.R Rahman அங்க அடிச்சு, இங்க அடிச்சு கடைசியா காபி அடிப்பதின் copyrightவைத்திருந்த தேவாவின் மெட்டையே சுட்டது காலத்தின் comedy.

Thursday, November 22, 2007

ஓசை செல்லாவிற்கு ஒரு அவசரக்கடிதம்

விடுநர்

செல்வம்
கடலையூர்
தமிழ்மணம்

பெறுந‌ர்

ஓசை செல்லா
த‌மிழ்ம‌ண‌ம்

ஐயா,


பொருள்:ந‌மீதாவிற்குத் த‌மிழ் க‌ற்றுத்த‌ர‌க்
கோரி விண்ண‌ப்ப‌ம்

இப்ப‌வும் 25௧‍.11.2007 தேதியிட்ட‌ ஞாயிற்றுக் கிழ‌மையில் க‌லைஞ‌ர் தொலைக்காட்சியில் ஒளிப‌ர‌ப்ப‌ப் போவ‌தாக‌க் காட்ட‌ப்ப‌ட்டு வ‌ரும் மானாட‌ ம‌யிலாட‌ நிக‌ழ்ச்சியின் துளிக‌ளைப் பார்க்கும் போது சிர்ப்பு,சிர்ப்பாக‌ வ‌ருவ‌தால்(பிழை என்னுடைய‌து இல்லை),இக் க‌டித‌த்தை த‌ந்தி போல் பாவித்து த‌ங்க‌த் த‌லைவி ந‌மீதாவிற்கு ந‌ல்ல‌ த‌மிழ் ந‌ல்குமாறு தாழ்மையுட‌ன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்ப‌டிக்கு
செல்வ‌ம்

Sunday, November 4, 2007

நீயா?நானா?...ஒரு கண்டணம்

நேற்று அப்பாவை பஸ் ஏத்தி விட்டு விட்டு நீயா?நானா? பார்க்கலாம் என்று வேக வேகமாக வீட்டிற்கு வரும் போது மணி 9.40.சரி முடிவையாவுது பார்க்கலாமே என்று டி.வி.ஆன் செய்தேன்.

அதில் ஒரு பெண்,தான் ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்ததற்கு தான் மிகவும் பெருமைப்படுவதாகவும்,அது போன ஜென்மத்தில் தான் செய்த புண்ணியம் என்றும் கூறிக்கொண்டிருந்தது.இதைக் கேட்டவுடன் காலம் சில நூறாண்டுகள் பின்னோக்கிச் சென்றது போல் இருந்தது.

2000 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட "யாதும் ஊரே யாவருங் கேளிர்" என்ற கருத்து தான் இன்று வரை உலக அளவில் நம்மைப் பெருமைப் படுத்துவதாக உள்ளதேயன்றி 2007ல் சொல்லப்பட்ட‌"குறிப்பிட்ட ஜாதியில் பிறந்தது தான் செய்த புண்ணியம்" என்ற கருத்து பெருமைப் படுத்துவதாக ஆகாது.

இதில் தவறு அந்தப் பெண்ணின் மீது மட்டும் இல்லை.அதன் பெற்றோர் மீதும்,சமூகத்தின் மீதும் உள்ளது.இந்த நவீன வலைப்பதிவு உலகில் கூட ஒரு மூத்த வலைப்பதிவர் இதே கருத்துடன் உள்ளது நோக்கத் தக்கது.

இவர்களுக்கு எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம் என்ற கருத்து இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்கள் போது மட்டும் தான் தோன்றும் போல் இருக்கிறது.அது முடிந்த வுடன் இப்படி பிறந்ததற்குப் பெருமைப் பட ஆரம்பித்து விடுகிறார்கள்.

திரு.கோபிநாத் அவர்கள் அந்த பெண் அப்படி பேசிய போது ஒன்றுமே சொல்லாமல் இருந்ததும் கண்டிக்கத்தக்கது.ஒரே ஒரு பெரியவர் மட்டும் நச்சென்று அந்த மேடையிலேயே கண்டித்தது ஆறுதல்.

விஜய் டி.வி. தொலைக்காட்சி உலக குமுதம் ஆகிக் கொண்டே வருகிறது.அவர்கள் டி.ஆர்.பி க்காக எதை வேண்டுமானாலும் ஒளிபரப்பலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு உள்ளது போல் தெரிகிறது.இதற்கும் என் கண்டணங்களைப் பதிவு செய்கிறேன்.

Thursday, November 1, 2007

சிம்பிள் லாஜிக்...இது தெரியாதா??

இப்போதெல்லாம் முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டன.பெற்றோர்களை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அங்கே சென்று விட்டு விட்டு,டாடா காட்டி விட்டு வந்து விடுகிறார்கள்.

தாம் பெற்ற பிள்ளைகள் மீது அதிக பாசம் வைக்கிறார்கள்.எனக்குத் தோன்றுவதெல்லாம், நம் குழந்தைகள் நம்மை உற்று கவனித்து வருகின்றன.நாம் செய்வதை அப்படியே திருப்பி செய்கின்றன.அப்படி இருக்கும் போது, நாம் நம் குழந்தைகள் மீது பாசம் வத்தால் நம் குழந்தைகள் அவர்கள் குழந்தைகள் மீது தான் பாசம் வைப்பர்கள்.

மாற்றாக நாம் நம் பெற்றோர் மீது பாசம் வைத்தால், அது அவர்கள் மனதில் பதிந்து நம் மீது பாசம் வைப்பதற்கு வாய்ப்பாக அமையும்.நாம் தான் அதற்கு இடம் கொடாமல் அடுத்த தலைமுறையினரைக் குறை கூறி வருகிறோம்.