Wednesday, January 23, 2008

"கனா காணும் காலங்கள்"கதாசிரியருக்குக் கல்தா???

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் "கனா காணும் காலங்கள்".பள்ளிப் பருவத்து சம்பவங்களை மிகக் கச்சிதமாக தொடராக மாற்றியிருப்பார்கள்.

மிகைப்படுத்துதல் இருந்தாலும்,சுமார் 2 டசன் கதாபாத்திரங்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு குணாதிசியங்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு பின்புலம் என்று புகுந்து விளையாடியிருப்பார்கள்.

நடிகர்களின் நடிப்பு ஆகட்டும், கேமரா, பிண்ணணி இசை, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் சமாச்சாரங்கள் ஆகட்டும் ஒரு நேர்த்தி இருக்கும்.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக திரைக்கதையும், வசன‌ங்களும் இருக்கும்.பிரம்மா என்பவர் எழுதி வந்தார்.இப்போது பார்த்தால் திடீரென அந்த நாடகத்தின் உயரதிகாரியின் பெயர் (ரமண கிரிவாசன் executive producer)வருகிறது.

ஏற்க‌ன‌வே இய‌க்குந‌ர் பிர‌புக‌ண்ணாவிற்குப் ப‌திலாக‌ ராஜா என்ப‌வ‌ரை மாற்றினார்க‌ள்.நாட‌க‌ம் நொண்டிய‌டிக்க‌த் தொட‌ங்கிய‌து...

இப்போது க‌தாசிரிய‌ரையும் மாற்றி விட்டார்க‌ள் .... பார்ப்போம் என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்று??

(நாங்க‌ளும் ரிப்போர்ட்ட‌ர் ஆயிட்டோம்ல‌)

Monday, January 21, 2008

பிரிவோம் சந்திப்போம் - விமர்சனம்

முன்குறிப்பு:

"சரி வாடா படத்துக்குப் போகலாம்" என்றேன் தம்பியிடம்.

"என்ன படத்துக்கு?" என்றான்.

"அது வந்து,அது வந்து...பிரிவோம் சந்திப்போம்"கு போகலாம் என்றேன்.

"என்ன‌து?"

இல்ல‌டா ப‌ட‌ம் ந‌ல்லா இருக்காம்..போய்த்தான் பாப்போமே !!!

"இப்ப‌டித்தான் சொல்லி மாய‌க்க‌ண்ணாடிக்கு கூட்டிட்டுப் போன.சேர‌ன் இனிமே என் ப‌ட‌த்துக்கு வ‌ருவியா?வ‌ருவியானு செருப்பால‌யே அடிச்சுத் தொர‌த்தினாரு"

"இல்லடா இந்த‌ப் ப‌ட‌ம் அப்ப‌டி இல்லையாம்"

ஓவ‌ர் டூ பிரிவோம் ச‌ந்திப்போம்(டேய் உன‌க்கே கொஞ்ச‌ம் ஓவ‌ரா இல்ல‌)

ப‌ட‌த்தின் க‌தையை நீங்க‌ள் ப‌ல‌ ப‌திவுக‌ளில்/இட‌ங்க‌ளில் ப‌டித்திருக்க‌க் கூடும் என்ப‌தால் சி.சி.கதையாக‌ ம‌ட்டும்.

"திருமணத்திற்கு பிறகு கூட்டுக்குடும்ப‌த்தில் வாழ‌ ஆச‌ப்ப‌டும் பெண்ணிற்கும், த‌னிக்குடும்ப‌மாக‌ வாழ‌ ஆசைப்ப‌டும் ஆணிற்கும் திரும‌ண‌ம் ந‌ட‌க்கிற‌து.திரும‌ண‌த்திற்குப் பிற‌கு த‌னியே அவர்க‌ள் வாழும் போது அந்த‌ப் பெண்ணிற்கு என்ன‌ பிர‌ச்சினை ஏற்ப‌டுகிற‌து என்ப‌து தான் க‌தை..

இனி பிடித்த‌தும்,பிடிக்காத‌தும்.....

பிடித்த‌து...

1)"வெட்டுறதுக்கு நான் ஒன்னும் இளனி இல்லடா பளனி.."போன்ற பஞ்(சர்)டயலாக்குகள் இல்லை."ஏன் நம்ம த.. கூட..வேண்டாம் விட்டுடு" போன்ற சீண்டல்கள் இல்லை.

2)சிநேகா...மிக‌ச் சிற‌ந்த‌ ந‌டிப்பு.வ‌ந்தோமா,ஹீரோவ‌ ல‌வ் ப‌ண்ண‌மோ,டூய‌ட் பாடுன‌மா என்றில்லாம‌ல் அருமையாக‌ச் செய்து இருக்கிறார்.

3)ஆரம்பக் காட்சியிலேயே கிட்டத்தட்ட 2 டசன் கதாபாத்திரங்களை அழகாக அறிமுகப் படுத்தி அட போட வைக்கிறார் இயக்குநர்.

4)கதாபாத்திரங்களும்,அதற்கான தேர்வும்,அவர்கள் நடிப்பும் கச்சிதம்.குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் M.S.பாஸ்கர்,ஜெயராம் போன்றோர்கள்.அதிலும் ஜெயராம் மருத்துவராகப் பின்னி இருக்கிறார்.

5)நிறைய காட்சிகளைக் கவித்துவமாக எடுத்துள்ளார்.இன்விடேச‌ன் தேர்ந்தெடுப்ப‌து...ஒலிகளைப் ப‌திவு செய்வ‌து...ஜி.நாக‌ராஜ‌ன் ப‌ற்றிப் பேசுவ‌து... போன்ற‌வை.

6)கேம‌ரா அட்ட‌க்க‌ட்டு ப‌குதியை மிக‌ அழ‌காக‌ப் ப‌ட‌ம் பிடித்துள்ள‌து.

பிடிக்காத‌து....

1)ப‌ட‌த்தில் எல்லோரும் இய‌ல்பாக‌ ந‌டித்திருக்க‌ சேர‌ன் ம‌ட்டும் "அப்ப‌டின்னா என்ன?" என்று கேட்கிறார்.

2)ப‌ட‌ம் அடிக்கடி ஒரே இட‌த்தில் தேங்கி விடுகிற‌து.ந‌க‌ர‌ மாட்டேன் என்கிற‌து.இடைவேளைக்குப் பிற‌கு த‌னியே இருப்ப‌தால் சிநேகாவுக்கு வ‌ரும் பிர‌ச்சினைக‌ள் என்ற‌ ஒன்லைனையே 1 ம‌ணி நேரம் இழுத்திருக்கிறார்கள்.

3)படத்தில் மிகைப்படுத்துதல் ஜாஸ்தி.

4)நாடக சினிமா...(முன்னோர்கள் விசு,பாலச்சந்தர் போன்றோர்)

ப‌ரிந்துரை:

இதையெல்லாம் ஏற்றுக்கொண்டால் பார்க்க‌லாம்

Wednesday, January 16, 2008

பீமா - என்ன கொடுமை சார் இது? (விமர்சனம்)

ரீலிஸ் ஆன இரண்டாவது நாளே கவுன்டரில் டிக்கெட் கிடைத்தது என் பெற்றோர்கள் செய்த புண்ணியம் என்று நினைத்தேன்.அது அப்படி இல்லை என்று படம் முடிந்து வெளியே வரும் போது தான் தெரிந்தது.

ப‌ட‌த்தின் ஹீரோவாக‌ அடித்திருப்ப‌வ‌ர்...சாரி நடித்திருப்ப‌வ‌ர் சேது,அந்நிய‌ன் போன்ற‌ ப‌ட‌ங்க‌ளில் எல்லாம் ந‌டித்திருக்கும் விக்ர‌ம்.வில்ல‌னாக‌ ந‌டித்திருப்ப‌வ‌ர் பாட்ஷா ப‌ட‌த்தில் ந‌டித்த‌ ர‌குவ‌ர‌ன்.ப‌ட‌த்தை இயக்கியிருப்ப‌வ‌ர் ஆனந்த‌ம்,ர‌ன் இவ‌ற்றின் இய‌க்குன‌ர் லிங்குசாமி.இப்ப‌டியெல்லாம் மடத்தனமாக :-)) நினைத்துக் கொண்டு உள்ளே செல்லாதீர்க‌ள்!!.

ப‌ட‌த்தின் க‌தை...

சென்னையில் ப‌ணிபுரியும்(!) ஒரு நல்ல‌ ர‌வுடி பிர‌காஷ்ராஜ்.(காட்பாத‌ர் மாதிரி, நாய‌க‌ன் மாதிரி,பாட்ஷா மாதிரி, அப்புற‌ம் ச‌ரி வேண்டாம் விடுங்க‌)
இவ‌ர் போட்டுத்த‌ள்ள‌ நினைக்கும் ஆட்க‌ளை இவ‌ருக்கு முன் போட்டுத் த‌ள்ளுகிறார் விக்ர‌ம்.யாருடா நீ? என்று பிர‌காஷ் கோப‌மாக‌க் கேட்க‌ விக்ர‌ம் உன்கிட்ட‌ வேலைக்கு சேர‌ணும்னு தான் இதெல்லாம் செஞ்சேன் என்கிறார்.

வேலைக்கு சேர்ந்த‌ கொஞ்ச‌ நாட்க‌ளிலேயே விக்ர‌மின் புஜ‌ப‌ல‌ப‌ராக்கிர‌ம‌த்தைப் பார்த்து "25 வ‌ருச‌ங்க‌ளுக்கு முன்பு நான் என்னையே பார்த்த‌ மாதிரி இருக்கு" யாருடா நீ?(வழக்கமான டயலாக்) அப்ப‌டின்னு கேட்க... பிளாஷ்பேக்.

சிறுவ‌னான‌ விக்ர‌மிற்கு த‌ப்புக‌ளைத் த‌ட்டிக்கேட்கும் பிர‌காஷ்ராஜ் ஒரு ஹீரோவாக‌த் தெரிகிறார்.ஒரு க‌ட்ட‌த்தில் விக்ர‌மின் அப்பாவை அடித்த‌வ‌ர்க‌ளைப் பிரகாஷ் அடிக்க, விக்ர‌மும் பெரியவன் ஆனவுடன் தாமும் பிர‌காஷ்ராஜ் போல் ஆக‌ வேண்டும் என்று ஆசைப்ப‌ட்டு அவ‌ரிட‌ம் வ‌ந்து சேர்கிறார்.

இந்நிலையில் திரிசாவை ஏதேச்சையாக‌ அவ‌ர் வீட்டு மேல்பகுதியை பிரித்து வ‌ந்து பார்க்கிறார்.இரண்டு,மூன்று சீன்களிலேயே திரிசா காத‌லிக்கிறார்.

பிர‌காஷ்ராஜின் எதிரி ர‌குவ‌ர‌ன்.அவ‌ரும் ஒரு ர‌வுடி தான்.(கெட்ட‌ ர‌வுடி!!).பிர‌காஷ்ராஜிற்கு விக்ர‌ம் அவ‌ருடைய‌ ப‌ழை‌ய‌ காத‌லியையே திரும‌ணம் செய்து வைக்கிறார்.

ர‌குவ‌ர‌ன்,பிர‌காஷ்ராஜ் கும்ப‌ல் அடிக்க‌டி மோதிக்கொள்கிற‌து.இர‌ண்டு ப‌க்க‌மும் ஆட்க‌ள் இற‌க்கிறார்க‌ள்.பிரகாஷ்ராஜ் ரகுவரனைவிட பெரிதாக வளர்கிறார்.

சென்னைக்கு புது போலீஸ் க‌மிஷ‌ன‌ராக‌ வ‌ரும் ஆஷிஷ் வித்யார்த்தி எல்லா ர‌வுடிக‌ளையும் என்க‌வுன்ட்ட‌ரில் போட்டுத் த‌ள்ள‌ உத்த‌ர‌விடுகிறார்.

விக்ர‌மிற்கும் எல்லாவ‌ற்றையும் விட்டுவிட்டு திரிசாவுட‌ன் குடும்ப‌ம் ந‌ட‌த்த‌ வேண்டும் என்று ஆசைவ‌ர‌...முடிவில் என்ன‌ ஆன‌து என்ப‌து தான் கிளைமாக்ஸ்.

விக்ர‌ம் இந்த‌ப்ப‌ட‌ம் முழுக்க யாரையாவ‌து அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.அத‌ற்கே நேர‌ம் போய்விடுவ‌தால் நடிப்பதற்கு நேரமேயில்லை.

திரிசா மூன்றாவ‌து சீனிலேயே விக்ர‌மை காத‌லித்து விட்டு அவ்வ‌ப்போது டூய‌ட்டிற்கு ம‌ட்டும் வ‌ருகிறார்.

ர‌குவ‌ர‌னின் வில்ல‌த்த‌ன‌த்தைப் பார்த்து தியேட்ட‌ரில் அனைவ‌ரும் சிரிக்கிறார்க‌ள்.ப‌ட‌த்தில் காமெடி இல்லை என்ற‌ குறையைத் தீர்த்து வைப்ப‌து ர‌குவ‌ர‌னின் வில்ல‌த்த‌ன‌ம் தான்.

ப‌ட‌த்தின் ஒரே ஆறுத‌ல் பிர‌காஷ்ராஜ் தான்.ந‌ன்றாக‌ ந‌டித்துள்ளார்.ஆனால் ஏற்க‌ன‌வே ப‌ல‌ முறை இதே போல் பார்த்துவிட்ட‌தால் nothing special.

ப‌ட‌த்தின் வ‌சன‌ங்க‌ள் எஸ்.ராம‌கிருஷ்னண‌ன்.பாபாவில் தொட‌ங்கி இந்த‌ப் ப‌ட‌ம் வ‌ரை த‌ன‌க்கு சினிமா வ‌ச‌ங்க‌ள் எழுத‌ வ‌ராது என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.(சார் உங்க‌ துணையெழுத்து ப‌டிச்சிட்டு ப‌ல‌ நேர‌ங்க‌ள்ள‌ க‌ண்ல‌ இருந்து த‌ண்ணி வ‌ந்திருக்கு)ப்ச்..

"முத‌ன்முறை" என்ற‌ பாட‌ல் ம‌ட்டும் ப‌ர‌வாயில்லை.ஒரு பாட்டிற்கு ஷெரீன் வ‌ந்து குத்தாட்ட‌ம் போடுகிறார்.நீங்க‌ள் க‌ண்ணை மூடிக்கொண்டு இங்கெல்லாம் பாட‌ல் வ‌ரும் என்று சொன்னால் அங்கெல்லாம் பாட‌ல் வ‌ருகிற‌து ஒரே ச‌லிப்பு...

கேம‌ரா, எடிட்டிங் எல்லாம் ஒன்றும் சொல்வ‌த‌ற்கில்லை..

2007 ல் ர‌வுடிக‌ள் ப‌ட‌மாக‌ வ‌ந்து கொண்டிருந்த‌தே...அப்போதே வ‌ந்திருக்க‌ வேண்டிய‌ ப‌ட‌ம்.த‌மிழ்சினிமாவின் டிரெண்ட் மாறிவிட்ட‌ இந்நிலையில் too late...

முடிவில் எல்லோரும் கொல்ல‌ப்ப‌டுகிறார்க‌ள்.ந‌ம்மையும் சேர்த்து...

ப‌ரிந்துரை:

இத‌ற்கு மேல் உங்க‌ள் இஷ்ட‌ம்!!!!


பின்குறிப்பு:

ப‌ட‌ம் முடிந்து பார்க்கிங் ஏரியாவிற்கு வ‌ந்தால் அங்கு ஒருவ‌ர் என் வ‌ண்டியில் அவ‌ருடைய‌ சாவியை நுழைத்துக் கொண்டிருந்தார்.பாஸ் என்ன‌ இது ? என்று கேட்ட‌த‌ற்கு சாரி பாஸ் பீமா எப‌க்ட் என்றார்.

என்ன‌ கொடுமை சார் இது??

Tuesday, January 15, 2008

புத்தகச் சந்தையில் 1/4 நாள்

போன சனிக்கிழம‌ லீவு விட்டிருந்தாங்க‌.சென்னையோட‌ ஹீரோவான டிராபிக்ஜாமுடன் முட்டி மோதித் தோத்துப்போய் கண்காட்சியை அடைஞ்சேன்.மிகச் சரியாக Exitனு போட்டிருந்த பாதையில் உள்ளே நுழைந்தேன்.அமைப்பாளர் ஒருத்தரு ஓடி வந்து "கொஞ்சமாவது அறிவிருக்கா?னு டோக்கன் போடும் ஊழியரைச் சத்தம் போட்டாரு.(சத்தியமாய் அவரத்தாங்க.:-))அத வாங்கத் தான உள்ள போறோம்னு மனசில சொல்லிக்கிட்டே உள்ள நுழஞ்சேன்.

வாசல் பூராவும் கட்டவுட், பேனர்..இதென்னடா ஏதும் அரசியல் கூட்டத்துக்கு தப்பா வந்துட்டோமானு பாத்தா நம்ம எழுத்தாளர்கள் விதவிதமான போசில சிந்திச்சுக்கிட்டு இருந்தாங்க..ஆகா நாம சரியாத்தான் வந்திருக்கோம்னு நினச்சிக்கிட்டு டிக்கட் எடுத்துட்டு உள்ர போய் பாத்தா..ஏத்தே!!எத்தன கடைங்க.ஒரு நிமிசம் நாம இதில தொலஞ்சு போய்டுவோமோன்னு பயமே வந்துடுச்சு.

அப்படியே பராக்கு பாத்துக்கிட்டே முதல்ல நுழஞ்சது கிழக்கு பதிப்பகம்.எம்மாடி எத்தன வகையான புத்தகங்க!!.நம்ம சிவாஜி படத்த பத்தின ராணிமைந்தன் புத்தகத்துல ஆரம்பிச்சு எச்சக்கச்சமா அடுக்கி வச்சிருந்தாங்க."அள்ள அள்ளப் பணம்‍ 3", "நான் சரவணண்" இந்த இரண்டு புத்தகங்களையும் வாங்கினேன்.ஸ்டாலுக்கு வெளியே சில பேர் கும்மி அடிச்சுட்டு இருந்தாங்க.பதிவர்கள் களை அவங்க கிட்ட‌ இருந்துச்சு.

அப்புற‌மா நான் நுழ‌ஞ்ச‌து ஞான‌பானு ப‌திப்ப‌க‌ம்.இங்க‌ன ஞானியோட புத்த‌க‌ங்க எல்லாம் ம‌லிவுவிலைப் ப‌திப்பா போட்டிருந்தாங்க.ம‌க்க‌ள் க‌ருத்த‌ கேட்க‌ இரண்டு பானையையும் வ‌ச்சிருந்தாங்க.இங்கன 3 புத்தகங்கள வாங்கிட்டு அப்படியே நடையக் கட்டினேன்.

உயிர்மை வாசல்ல மனுஷ்யபுத்திரன் உக்கார்ந்திருந்தாரு.அழகா சிரிச்சுகிட்டேயிருந்தாரு.

காலச்சுவடுலயும் நல்ல கூட்டம்.வகைவகையா நிறய புத்தகங்க இருந்துச்சு.என்ன வில தான் கொஞ்சம் ஜாஸ்தி.

அன்ன‌ம் ப‌திப்ப‌க‌ம் கி.ரா வோட‌ எல்லா புத்த‌க‌ங்க‌ள‌யும் போட்டிருந்தாங்க‌.கி.ரா ஐயா வெளியே உக்காந்திருந்தாரு.அவ‌ருகிட்ட‌ போய் 2 நிமிச‌ம் பேசினேன்.எங்க‌ ஊரும் கோவில்ப‌ட்டி ப‌க்க‌த்தில‌ தான்னு சொன்னேன்.ரொம்ப‌ ச‌ந்தோச‌ப்ப‌ட்டாரு.நான் வாங்கி வ‌ச்சிருந்த "கோபல்ல‌ கிராம‌ம்" புத்த‌க‌த்தில‌ கையெழுத்து போட்டுக் கொடுத்தாரு.

ப‌ழ‌.நெடுமாற‌ன் அய்யாவும் ஸ்டாலுக்கு வெளியே உக்காந்திருந்தாரு.திடீர்னு ஒருத்த‌ரு அய்யாவோட‌ கால்ல‌ ச‌ட்டுனு விழுந்தாரு.அவ‌ரு விழ‌ வேண்டிய‌ அவ‌சிய‌மே அவ‌ருக்கு இருந்த‌ மாதிரி தெரிய‌ல‌.இருந்தும் அவ‌ரு விழுந்த‌து என்னென்னமோ மனசுக்குள்ள‌ சொல்லிச்சு.

அம்ருதா ப‌திப்ப‌க‌ம் சிற‌ந்த‌ எழுத்தாள‌ர்க‌ளோட‌ 10 ப‌டைப்புகள் தில‌க‌வ‌தி அவ‌ர்க‌ளால‌ தொகுக்க‌ப்ப‌ட்டு "முத்துக்க‌ள் ப‌த்து" அப்ப‌டின்னு பேர் கொடுத்து வெளியிட்டு இருந்தாங்க‌.நான் அசோக‌மித்திர‌ன் ம‌ற்றும் வ‌ண்ண‌தாச‌ன் இவ‌ங்க‌ளோட‌ தொகுப்புக‌ள‌ வாங்கினேன்.

விக‌ட‌ன், குமுத‌ம், ஹிந்து ஸ்டால்க‌ள்ள‌ ந‌ல்ல‌ கூட்ட‌ம்.

"த‌மிழ‌ன் என்றோர் இன‌முண்டு,த‌னியே அவ‌ர்க்கோர் குணமுன்டு"னு சொல்றதுக்கேற்ப கண்காட்சியிலேயே food court பகுதியில தான் நல்ல கூட்டம்.பச்சைத் தமிழனான நானும் மரபிற்கேற்ப ஒரு icecream வாங்கி சாப்பிட்டு வெளியே வந்தேன்.

வெளியே அரங்கத்தில கவியரங்கம் ஒன்று நடத்திக்கிட்டு இருந்தாங்க.வெண்ணிலா,யுகபாரதி எல்லோரும் இருந்தாங்க.தங்களோட கவிதைகளால உலகத்தையே திருத்திட ஆசப்படும் அவங்க பண்ணுணது எல்லாம் கொஞ்சம் ஓவர்.

வெண்ணிலா க‌விதை வாசிச்சு முடிச்சுட்டு கிள‌ம்பிட்டாங்க‌.அடுத்த‌வ‌ரு என்ன‌ சொல்ல‌றாருனு மேடையில‌ இருந்த‌வ‌ங்க‌ளே கேட்க‌ல‌.ஒருத்த‌ரு க‌வித‌ வாசிக்க‌ ந‌டுவ‌ரா இருந்த‌வ‌ரு மைக்கக் கூட‌ அமைக்காம‌ ப‌க்க‌த்துல‌ பேசிக்கிட்டே இருந்தாரு.பிரபஞ்சன் வேற உக்காந்துகிட்டு இருந்தாரு.கொடுமை.

திருஷ்டிப‌ரிகார‌ங்க‌ள்:

இவ்வ‌ள‌வு செல‌வு செஞ்ச‌ bapasi ந‌ல்ல முறையில‌ க‌ழிப்பிட‌ வ‌ச‌தி செய்யாம விட்டுடுச்சு.

புத்த‌க‌ ரேட் எல்லாம் கூடிகிட்டே போகுது.15 ரூபாய்க்கு நான் வாங்கி ப‌டிச்ச "பூக்குட்டி" இன்ன‌க்கி 90 ரூபாய்.ப‌டிப்பானுப‌வ‌ம், உல‌க‌த்த‌ர‌ம்னு என்னென்ன‌மோ சொல்றாங்க‌.
"யாதும் ஊரே யாவ‌ருங் கேளிர்" பாட்டு ப‌னை ஓலையில‌ தான் எழுதியிருப்பாங்க‌.

கூட்ட‌ம் க‌ம்மி.ப‌ல‌ ஸ்டால்க‌ளில் ஒருவ‌ர் கூட‌ இல்லை.

இருந்தாலும் ஒரு நிறைவான திருவிழா.