Sunday, August 24, 2008

தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு........மற்றுமோர் சூப்பர்சிங்கர்.....

மிக அதிகமான எதிர்பார்ப்புகளைத் தூண்டும் விதமாக விளம்பரம் செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுள் ஒன்று, "தமிழ்ப்பேச்சு.........எங்கள் மூச்சு".பேசிப் பேசியே ஆட்சியைப் பிடிக்கும் வரலாறு படைத்த தமிழகத்தின் அடுத்ததலைமுறைப் பேச்சாளர்களை / தலைவர்களை வெளிக்கொணரப் போகும் நிகழ்ச்சி என்று நினைத்தோம்.

இளைய திலகத்தின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் என்ன கொடுமை சார் இது ?

காப்பியச்சுற்று:

முதலில் நடுவர் நெல்லைக் கண்ணணின் ஆசிரியத்தனம்.சூப்பர் சிங்கரில் எப்படி நடுவர்கள் ராகம் சரியில்லை.........தாளம் சரியில்லை..........சுதி சேரவில்லை என்று சிந்துபைரவி JKB அண்ணா ரேஞ்சுக்கு சீன் போடுகிறார்களோ அதற்கு சற்றும் குறையாமல் நெல்லைக் கண்ணன் கம்பர், வள்ளுவர் என்று சீன் போடுகிறார்.

தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை பேச்சுப்போட்டி / ஒப்புவித்தல் போட்டி நடத்தும் ஆசிரியரிடம் விட்டது தவறுதான். விளைவு இந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்று மனசு சொல்லுது.......பாக்காதேன்னு புத்தி சொல்லுது.......

தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்களாக வேண்டும் என்றால், கம்பராமாயணமும், திருக்குறளும் தெரிந்தால் தான் ஆக முடியும் என்றால் அந்தக் கொடுமையை எங்கு போய் சொல்வது?????

நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால் ஒன்று புரியும். திருவள்ளுவர் திருக்குறளை சொந்தமாக எழுதித்தான் இவ்வளவு புகழ் பெற்றாரே தவிர மற்ற இலக்கியங்களை மனனம் செய்து புகழ் பெறவில்லை.இலக்கியங்களைப் பிரதி எடுக்கும் வசதி இல்லாத அந்தக் காலத்தில் வேண்டுமானால் மனனம் செய்வது புத்திசாலித்தனமாக‌ இருந்திருக்கலாம்.சாகாவரம் படைத்த இணையம் போன்ற விடயங்கள் வந்த இக்காலத்திலும் மனனம் செய்வதையே உயர்த்திப்பிடிக்கும் தமிழ்த் தொண்டர்களை என்னவென்று சொல்வது???

தமிழில் பேசும் சுற்று:


தமிழில் தற்போது வைக்கப்படும் பெயர்களில் ஒரு அழகுணர்ச்சியே இல்லாததைக் காணலாம்.

உ.ம்

1) Pen - எழுதுகோல் ‍ - Writing Instrument.

2) Computer - கணிணி ‍ - Calculating instrument.

3) Cellphone - கைபேசி

என்று தற்போது வைக்கப்பட்ட இப்பெயர்களை சங்க காலத்தில் இருந்து புழங்கும் வார்த்தைகளோடு ஒப்பிட்டால் நம் நிலைமை புரியும்.

புயல்களுக்கே அழகுணர்ச்சியோடு காத்ரீனா, ரீட்டா என்றெல்லாம் பெயர் வைக்கும் மற்றவர்களோடு ஒப்பிட்டால்,
தமிழில் பெயர் சூட்டும் விசயம் ஒரு தவறான திசையில் செல்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

இந்த விசயங்களைப் பற்றியெல்லாம் நடுவர்களாக வந்தவர்களே யோசித்து இதுவரை ஒன்றும் செய்யாத நிலையில் போட்டியில் பங்கேற்க வந்தவர்களைப் போட்டுஎடுத்தது எந்த விதத்தில் நியாயம் ? ? ?

பேச்சு என்பது ஒரு கலை. தமிழைத் தவறாகச் சந்தைப்படுத்தும் ஒரு விஷயம் இல்லை.

பாட்டுப் போட்டியில் நன்றாகப் பாட வேண்டுமே தவிர....பாடலின் சிறப்புகளைப் பற்றிப் பட்டியல் போடக்கூடாது.அதே போல் கம்பர் என்ன சொன்னார்??? இளங்கோ என்ன சொன்னார் என்பதை விட நாம் என்ன சொல்லப் போகிறோம் என்பதே முக்கியம்.

கம்பராமாயணத்தைப் பக்கம் பக்கமாகப் பேசும் கம்பன் கழக பேச்சாளர்களை விட, அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கும் கலைஞரின் பேச்சு சிறந்தது என்பதில் யாருக்கும் (ஜெயலலிதாவிற்குக் கூட) மாற்றுக்கருத்து இருக்காது.

தமிழை உயர்த்திப் பிடிக்கும் வேலையை விட்டுவிட்டு

1) பேசுபவரின் கருத்து என்ன ????? கருத்தின் உண்மை என்ன ????
2) அதை எவ்வளவு சுவையாக கேட்கும் வண்ணம் பேசுகிறார்?????
3) எவ்வளவு சுருக்கமாகப் பேசுகிறார்?????????

போன்ற விசயங்களைக் கருத்தில் கொண்டால் உண்மையிலேயே நமக்கு மிகச் சிறந்த அடுத்த தலைமுறை பேச்சாளர்கள் கிடைப்பார்கள்..........

முக்கியக் குறிப்பு:

நண்பனோடு பேசிக்கொண்டிருந்த போது கிடைத்த‌ கருத்துக்கள் இவை.....ஹி.ஹி... நல்லா இருப்பதெல்லாம் அவன் சொன்னது....மொக்கையாக இருப்பதெல்லாம் நான் சொன்னது :-))

Monday, August 4, 2008

குசேலன் - 2 வருகிறது ஜாக்கிரதை...........

இடம் : குசேலன் 2 டிஸ்கசன் நடக்கும் இடம்

நேரம் : நம்ம எல்லோருக்கும் கெட்ட நேரம்......

இருப்பவர்கள் : விஜய், பி.வாசு, வடிவேலு, பேரரசு.

வரமறுப்பவர்கள் : பசுபதி, நயந்தாரா, ரஜினி

வாசு: என்ன எல்லோரும் வந்தாச்சா????? என்ன இது பாத்ரூம்ல யாரோ அழுகிற மாதிரி இருக்கு.

(விஜய் பாத்ரூமில் குமுறிக் குமுறி அழுது கொண்டிருக்கிறார்)

வாசு: விஜய் என்ன இது ? இன்னும் இந்தப் பழக்கம் உங்கள விட்டுப் போகலையா????? ஏன் அழறீங்க?? அட சொல்லிட்டு அழுங்க....

விஜய்: அது அது .......பூ பூபூ..........எல்லோரும் குசேலன் பாத்துட்டு இதுக்குக் குருவியே பரவாயில்லன்னு சொல்றாங்க.......எம் படத்துக்கு இப்படி திடீர்னு ஒரு பெருமை வரும்னு நான் நினைக்கவேயில்லை.......அதான்.......பூபூபூ...

வடிவேலு : ஏய் எங்கள வச்சு ஒன்னும் காமெடி....கீமெடி பண்ணலியே.........

விஜய்: ண்ணா....நான் ஏங்னா காமெடி பண்ணனும்...அதான் வாசு சார் குசேலன் படத்துல 13 ரீலு காமெடியா பின்னியிருக்காராமே.........(தனக்குள்ளேயே சிரிக்கிறார்)

வாசு: ஆஹா குசேலன் 2 எடுக்கலாம்னு பாத்தா விடமாட்டாங்க போலியே.....தம்பி விஜய் போப்பா....போ..போ....பிரபுதேவா கூப்புடுறாரு பாரு.....வில்லு வராமலா போயிடும்....அப்ப வச்சுக்கிறேன்...

வடிவேலு எங்க யாரையும் காணோம்....பசுபதி எங்க????

வடிவேலு : அய்யா!!!!! அவரு சைக்கோ கில்லருக்குப் பயந்துக்கிட்டு சென்னைய விட்டே ஓடிப் போயிட்டேன்னு சொல்ல சொன்னாருய்யா??????

வாசு : அப்ப நயந்தாரா???

வடிவேலு : அத ஏன்யா கேட்குறீங்க.....ஏதோ நெட்ல கசமுசா படம் வந்திருக்குன்னுப் போய் பாத்தா நம்ம குசேலன் பட சீன் தான் ஓடுதாம்யா...அதான் அந்தப் பஞ்சாயத்துக்குப் போயிருக்காங்க.....

வாசு : சரி அவங்கள விடுங்க ......முதல்ல உங்க காமெடி பார்ட்ட சொல்லிற்றேன்.....குசேலன் 2 ல உங்க பொண்டாட்டிய நீங்க........

வடிவேலு : அய்யா....மறுபடியுமா????? நீங்க விடுங்கய்யா????நான் என்னோட டீம வச்சே எழுதிக்கிறேன்......நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய......

(ரஜினி வீட்டில்)

ரஜினி : சத்தி....சத்தி.... மறுபடியும் பிராப்ளம் ஸ்டார்ட் ஆயிடுச்சு.......வாசு குசேலன் 2 டிஸ்கசனுக்குக் கூப்பிடுறார்....

சத்தி : என்னது மறுபடியுமா???? தலைவா ஏற்கனவே எல்லோரும் எதோ எழவு விழுந்தா மாதிரி போன் மேலே போன்.....இன்னும் பார்ட் 2 வந்தா கிளிஞ்சுரும்.....

ரஜினி : அப்ப நான் வேணா...."பாடம் கத்துக்கிட்டேன்....இனிமே இப்படி நடக்காது"ன்னு விளக்கம் கொடுத்துரட்டுமா????

சத்தி : தலைவா.....தயவு செய்து கொஞ்ச நாளைக்கு நீங்க எந்த விளக்கமும் கொடுக்காதீங்க....இப்ப கொடுத்த விளக்கத்துக்கே என்ன பிச்சுப் புடுங்குறாங்க....அதனால பேசாம ஒரு எட்டுப் போய்ட்டு வந்துருங்க......

(மீண்டும் டிஸ்கசன் நடக்கும் இடம்)

பேரரசு : அண்ணே நான் எல்லாம் ரஜினிக்கு கதையே சொல்ல முடியாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன்.....ஆனா உங்க குசேலன் பாத்த பின்னாடி முடிவே பண்ணிட்டேன்...

வடிவேலு : என்னன்னு......

பேரரசு : ரஜினிய வச்சு பூஜை போட்டுறலாம்னு.....படம் பேரு "திருவேற்காடு". இது ஆடி மாசம் வேற‌. சும்மா கலெக்சன அள்ளிட்லாம்........

வடிவேலு : ஆஹா ஒரு குரூப்பாத்தான்யா அலயறாங்க......

ரஜினி பேரரசு நிற்பது போலவே காட்டிக் கொள்ளாமல் நேராக வாசுவிடம் வருகிறார்...பேரரசு ஏதோ முனுமுனுத்துக் கொண்டே சென்று விடுகிறார்.

ரஜினி : வாசு குசேலன் 2ன்னு ஒரு சப்ஜெக்ட் சொல்றேன்னீங்களே.....சொல்லுங்க.....

வாசு : "ஓப்பனிங் சீன்ல நான் உங்கள வச்சு அபூர்வராகங்கள் 2 சூட் பண்ணிக்கிட்டு இருக்கேன்"

வடிவேலு : இப்பத்தான் குசேலன் 2ன்னு சொன்னீங்க.....

வாசு : குறுக்க குறுக்க பேசுனீங்கன்னா இந்தப் படத்துல உங்களுக்கு 2 பொண்டாட்டின்னு கதை பண்ணிடுவேன் ஜாக்கிரதை..............

வடிவேலு : 2 வைபா.............

வாசு : அந்தக் காட்சில நீங்க ஒரு ஹெலிஹாப்ட்ரால முட்டிக் கதவ திறக்குறீங்க......

ரஜினி : என்னது ஹெலிஹாப்ட்ரல முட்டியா......

வாசு : அது ஒன்னும் பிரச்சினை இல்லை....சவுந்தர்யாகிட்ட சொல்லி ஆக்கர் ஸ்டுடியோல வச்சு சீ.ஜீ பண்ணிடலாம்....

வடிவேலு : யாரு ஆத்துல டால்பின் விட்டாங்களே அந்த அக்காங்களா????

(ரஜினி தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறார்))

கட்டாய டிஸ்கி :

இந்த சம்பவங்கள் கற்பனையே :-))

Sunday, August 3, 2008

குசேலன் -‍ ஏன் இந்த கொலை வெறி ???? விமர்சனம்

கதை:

சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கும் நண்பனை பல காரணங்களுக்காகக் காணத் தவிக்கும் ஏழை முடிதிருத்தும் நண்பன் பற்றிய கதை.

திரைக்கதை:

இந்தக் கதையையே திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி எழுதிக்கொள்ளவும்.

வசனம்:

ரஜினியின் புகழ் பரப்பும் வசனங்களைச் சொன்னால் மட்டும் போதும் படம் 100 நாட்கள் ஓடி விடும் என்று சொன்ன ஜோசியக்காரனை பி.வாசு மாற்றி விடுவது நல்லது.

பசுபதி:

அவரும் என்ன தான் செய்வார் பாவம். திருப்பி திருப்பி ஒரே காட்சியையே படமாக்கியுள்ளதால் தன் கூத்துப்பட்டறை பயிற்சி முழுவதையும் காட்டியும் எடுபடவில்லை.

மீனா:

படத்தில் ஓரளவு நன்றாக செய்துள்ள ஒரே ஜீவன்.

நயந்தாரா:

காட்டு காட்டு என்று காட்டியிருக்கிறார். அதுவும் வடிவேலு மறைந்திருந்து பார்க்கும் காட்சி ஒரு தேர்ந்தெடுத்த..........சரி அடுத்த விசயத்துக்கும் போவோம்.

வடிவேலு:

யூ டூ வடிவேலு.........சமீபத்தில் வந்த எந்தப் படங்களிலும் இந்த அளவு கொத்தியதாக ஞாபகம் இல்லை. தியேட்டரில் மொத்தம் 1 1/2 இடத்தில் மட்டுமே சிரித்தார்கள்.

லிவிங்ஸ்டன் / சந்தானபாரதி / பாஸ்கர்/வையாபுரி/சந்தானம்:

இந்த கோஸ்டியைத் தவிர்த்து இருந்தாலே பாதி சேதாரத்தைத் தவிர்த்து இருக்கலாம்.

பிரபு:

போலீஸ் ட்ரெஸ்ஸில் வந்த போது அனைவரும் அசந்தர்ப்பமாக சிரித்தார்கள். செந்தில் என்ற பழைய சந்திரமுகி பெயரை சூட்டினால் மட்டும் போதுமா. என்ன கொடுமை சார் இது ?? என்று பி.வாசுவைக் கேட்டிருக்க வேண்டாமா??

கேமரா:

அது என்ன சூப்பர்ஸ்டார் வரும் காட்சிகள் மட்டும் வீடியோகேம்ஸ் பார்ப்பது போல் உள்ளது.
Technology has improved so much???????

இசை:

வெயில் / பொல்லாதவன் போன்ற படங்களுக்கு இசையமைத்த G.V பிரகாஷ் பெயரை வைத்துக் கொண்டு குசேலன் படக் குழுவினரை யாரோ ஏமாற்றி விட்டதாக
தீவிர வதந்தி ஒன்று பரவியுள்ளது.

வாசு:

நடிகன் மாதிரி காமெடி படம் எடுத்த வாசுவா இது??? அழுத்தமான கிளைமாக்ஸ் அதனால 13 ரீல்கள் சும்மா செம காமெடியா எடுத்துருக்கோம்னு ஒரு பேட்டில இவரு சொன்ன போது கண்களில் இருந்து என்னையும் அறியாமல் நீர் வந்தது.

ரஜினி:

யாருப்பா அது. அவர் இந்தப் படத்துல இருக்காரா ??? போங்கப்பா ??? பொய் சொல்றீங்க. அண்ணாமலை - 2 , சந்திரமுகி - 2 எல்லாம் நல்ல வேளை வரவில்லை. தப்பித்தோம்.

கிளைமேக்ஸ் :

இது மட்டும் நல்லா இருந்தா போதுமா??? முதல் 2 1/4 மணி நேரம் யாரு உக்காற்றது??

ரசிகர்கள்:

இவர்களுக்கு ஒரு அன்பான எச்சரிக்கை. உங்க தலைவர் சொன்னது தான்....

வேண்டாம்.......நொந்துடுவே.....