Thursday, March 27, 2008

பங்குச்சந்தை - ‍சில நியாமான கேள்விகள்...

சோம.வள்ளியப்பனின் அள்ள அள்ளப் பணம் (1,2)படித்தது,வீட்டில் தொலைந்துபோ என்று கொடுத்த 15000 ரூபாயை சந்தையில் முதலீடு செய்தது இதைத் தவிர எனக்கும் பங்குசந்தைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.இதற்கே "வாரன் பப்பட்"ரேஞ்சுக்குப் பேசி இப்போது வாயைத்திறந்தாலே "போதும்! அடங்கு!" என்று சொல்லப்படும் என் துர்பாக்கிய நிலை பற்றி இங்கு சொல்ல விரும்பவில்லை.:-((

வவ்வால் அவர்களின் பங்குசந்தை குறித்த சமீபத்திய பதிவினைப் படித்தேன்.அதில் அவர் "இந்தியாவின் gdp 8 சதவிகிதமாக இருக்கும் போது பங்குச்சந்தையின் வளர்ச்சி மட்டும் எப்படி 800 சதவிகிதமாக உள்ளது?" என்ற நியாயமான கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார்.

இதைப் படித்ததும் எனக்கும் பின்வரும் சந்தேகங்கள் தோன்றின.யாராவது விளக்குங்களேன் ப்ளீஸ்...

பங்கு சந்தையில் லாப / நட்டங்கள் 2 வழிகளில் வருகிறது.அவையிவை.

1)நாம் ஒரு நிறுவனத்தில் 100 ரூபாய் முதலீடு செய்கிறோம்.அவர்கள் அதை வைத்து உற்பத்தி மூலமாகவோ அல்லது சேவை மூலமாகவோ லாபம் ஈட்டுகிறார்கள்.எங்கள் Textile துறையில் 20% லாபம் வைத்து பொருளிற்கு விற்பனை விலை நிர்ணயிப்போம்.அதில் மற்ற செலவுகள் அனைத்தும் போக 9-10 % நிகர லாபம் வரும்.அதாவது 110 ரூபாய் நமக்கு கிடைக்கும்.

2)இரண்டாவது வழி அடுத்தவனை நஷ்டம் அடையச் செய்து நாம் லாபம் சம்பாதிப்பது.100 ரூபாய் பங்கு அதிகபட்சம் 110 ரூபாய் வரை போகலாம்.200 ரூபாய்க்கு எப்படிப்போகும்? பெரிய பெரிய முதலைகள் "இந்நிறுவனம் நன்றாக உள்ளது.எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக வரும் என்றெல்லாம் போங்கு ஆட்டம் ஆடி விலையை உயர்த்தி கொண்டே வருகின்றன.என்னைப் போல் அதி புத்திசாலிகள் அடடே...இப்படி ஒரு பங்கு இருப்பது நமக்குத் தெரியாம போச்சே!! என்று நினைத்து கொண்டு 200 ரூபாய் கொடுத்து வாங்குவோம்.அவ்வளவு தான்..விலை அப்படியே பேக் அடிக்க ஆரம்பிக்கும்.நம் பணம் கோவிந்தா...இது சரியா?

இது அரசாங்கத்தின் அனுமதியோடு நடத்தப் படும் சூதாட்டம் இல்லையா.நாம் முதலீடு செய்த நிறுவனம் நஷ்டம் அடைந்து அதன் காரணமாக நாம் நஷ்டம் அடைந்தால் பரவாயில்லை.ஆனால் எவனோ ஒருவன் பங்கு சந்தையில் லாபம் அடைய நாம் நஷ்டம் அடைவது என்ன நியாயம்?.

ஏற்கனவே 40% வட்டி தருகிறோம் என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட நிதிநிறுவனங்களில் எந்த கேள்வியும் கேட்காமல் முதலீடு செய்து மோசம் போன பாரம்பரியம் கொண்டவர்கள் நாங்கள்.எங்களிடம் வந்து "Fundamental Analysis, Technical Analysis "என்று பல டெக்னிக்கல் விஷயங்களப் பேசி கொள்ளையடிப்பது எந்த விதத்தில் நியாயம்?

Tuesday, March 11, 2008

வெள்ளித்திரை - திரைவிம‌ர்ச‌ன‌ம்

"From the makers of Mozhi"என்ற எதிர்பார்ப்போடு வந்திருக்கும் படம்.

பாடம் 1 :(எந்த படத்திற்கும் அதிக எதிர்பார்ப்போடு செல்லக்கூடாது)

சினிமாவில் சாதிக்கத்துடிக்கும் இரண்டு இளைஞர்கள்."என்ன செய்தாலும் சரி, நடிகனாக ஆகியே தீருவேன்" என்று பிரகாஷ்ராஜும்,"தரமான இயக்குநராகத்தான் ஆவேன்"என்று பிருத்விராஜும் சினிமா என்ற மாய உலகை சுற்றி சுற்றி வருகின்றனர்.

பிருத்வியின் கதையைத் திருடி ஹீரோவாகிறார் பிரகாஷ்.படமும் ஓடி உச்சநடிகராகிறார்.பிருத்விக்கு அவர் கதை திருடப்பட்டதால் இயக்குநராகும் வாய்ப்பு பரிபோகிறது.

இடையே ந‌டிகையான கோபிகாவிற்கும்,பிருத்விக்கும் காத‌ல்.கோபிகா த‌ன் அண்ண‌ணோடு ச‌ண்டை போட்டுக் கொண்டு பிருத்வியைத் தீடீரென‌ ம‌ண‌ம் முடிக்கிறார்.

"ந‌டிகையின் க‌ணவ‌ர்"என்ற‌ சாயல் பிருத்வி மீது விழுந்ததும் அவர் சினிமா முயற்சியில் ஒரு தொய்வு ஏற்படுகிறது.இதை உணர்ந்து கோபிகா அவரை விட்டுப் பிரிகிறார்.

ம‌ன‌ம் வெறுத்த‌ பிருத்வி த‌ன் கொள்கைக‌ளில் ச‌ம‌ர‌ச‌ம் செய்து கொண்டு பிர‌காஷ்ராஜை வைத்து க‌ம‌ர்சிய‌ல் ப‌ட‌ம் ஒன்றை ஆர‌ம்பிக்கிறார்.அதில் அவ‌ர் ச‌ந்திக்கும் பிர‌ச்சினை என்ன‌ என்ப‌தே கிளைமாக்ஸ்.

பிர‌காஷ்ராஜ் "நடிகன்" கதாபாத்திரத்தில் அருமையாக ஸ்கோர் செய்திருக்கிறார்.ஆர‌ம்ப‌க்காட்சிக‌ளில் அல‌ப்ப‌றையாக‌ ஆர‌ம்பிக்கும் பிரகாஷ்,போக‌ போக சுண‌ங்கி விடுகிறார்.

பிருத்வி அநியாய‌த்திற்கு "Under Play"செய்திருக்கிறார்.தன் கதையை ஒருவன் திருடினாலும்,மனைவியே தன்னை விட்டுப் பிரிந்தாலும் ஒரே மாதிரியான ரியாக்சன்.படம் பார்ப்பவர் மனதில் எதுவும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

பாட‌ம் 2:அதிகமான "Under play"வும் ஆபத்து.

M.S பாஸ்கர்,சரத்பாபு,சார்லி முஸ்தபாவாக வருபவர்,அனைவரும் தங்கள் அனுபவத்தை காட்டியிருக்கிறார்கள்.

வசனங்கள் படத்தின் மிகப் பெரிய பலம்.விஜி வசனங்களில் செலுத்திய கவனத்தை திரைக்கதையிலும் செலுத்தியிருக்கலாம்.

பாட‌ம் 3 :ந‌ல்ல‌ வ‌ச‌ன‌ங்க‌ள் ம‌ட்டும் ஒரு ப‌ட‌த்தை ஓட‌ வைக்காது.

G.V பிரகாஷ் இசையில் ஒரு பாடல் O.K.

சன் டி.வி பாணியில் சொல்வதானால் வெள்ளித்திரை‍ இன்னும் மின்னியிருக்காலாம்.

Wednesday, March 5, 2008

வாலமீனுக்கும்,விலங்குமீனுக்கும் - தமிழ்மணம் - லக்கிலுக் அவதூறு

அவர்கள் இருவரின் உறவுகுறித்த நையாண்டிகள் அக்கட்சி மேடைகளில் பலகாலமாக பேசப்பட்டாலும், சில வார்த்தைகளை பூடகமாகவே குறிப்பிடுவது வழக்கம். ஆனால் மிக பச்சையாக திருக்கடையூர் விவகாரம் குறித்து "வாலமீனுக்கும்,விலங்குமீனுக்கும்" என்றெல்லாம் வெற்றிகொண்டான் ரேஞ்சுக்கு எழுதியிருக்கிறார் லக்கி.

யாரோ மீது அவருக்கு ஏற்பட்டிருக்கும் அபிமானம் அவரது எழுத்தை தரமற்றதாக ஆக்கி வருகிறது என்பதை எப்போது தான் உணர்வாரோ? இந்த முறை தமிழ்மணத்தில் அவர் எழுதியுள்ள இடுகையை வாசிக்கும்போது ஒன்றுமே தோணவில்லை.

அதுமட்டுமல்லாமல் சம்பந்தமில்லாமல் அதே இடுகையில் "வாலமீனுக்கும்,விலங்குமீனுக்கும்" பாடலை லக்கி போட்டிருப்பது உச்சக்கட்ட ஆபாசம். லக்கியின் இந்த இடுகையை ஒரு சராசரி வாசகன் உடனடியாக அவர்கள் இருவரோடு இணைத்து தான் சிந்திப்பான். அவர்கள் இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் லக்கி அத்துமீறல் செய்திருக்கிறார் என்பதே தெளிவான உண்மையாகும்.

ஞாநி கிளப்பியது அவதூறா? அல்லது லக்கி இந்த கட்டுரையின் மூலம் கிளப்பியிருப்பது அவதூறா? என்பதை அக்கட்டுரை வாசித்த லட்சக்கணக்கான தமிழ்மணம் வாசகர்கள் அறியமுடியும்.

ல‌க்கியின் க‌ட்டுரையை எல்லோரும் வாசித்திருப்போம் என்ப‌தால் சுட்டி கொடுக்க‌வில்லை.

குறிப்பு:

1)இது அப்பட்டமாக காப்பியடிக்கப்பட்ட லக்கியின் கும்மி ஸ்டைல்.என்னதான் எழுதினாலும் அவர் அளவிற்கு இல்லை என்பது நிதர்சனம்.

க‌டைசியாக‌ கொசுறு கும்மி:

வ‌லைப்ப‌திவுல‌க‌த்தின் ட்ரெண்ட் செட்ட‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ ல‌க்கியின் புது ட்ரெண்ட்டிற்கு வாழ்த்துக்க‌ள்.(ஒன்னும் தெரியாத‌ பாப்பாக்க‌ளுக்கு...ல‌க்கியின் பின்னூட்ட‌ங்க‌ளைப் பார்க்க‌வும்)