தீதும் நன்றும் பிறர் தர வாரா!!
சுஜாதா மட்டும் அந்த மாதிரி எழுதியிருக்காவிட்டால் நான் நல்ல பையனாக இருந்திருப்பேன் என்பது வடிவேலு காமெடியை விட சிறந்தது.
அவர் எழுதியிருந்தாலும்,எழுதியிராவிட்டாலும் நாம் இப்படியேதான் இருந்திருப்போம் என்பது தான் நிதர்சனம்.
சுஜாதா என்ற வார்த்தையைக் கூட கேள்விப் படாத நம் கிராமத்து மக்களின் பாலியல் கதைகளை கி.ரா அவர்கள் தொகுத்து தந்திருக்கிறார்.(நாட்டுப்புற பாலியல் கதைகள்).படித்துப் பாருங்கள்.
நாம் வாழ்க்கை முழுவதும் நல்லவராக இருப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது.பிறந்தவுடனே ஒரு அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டு இறந்த பிறகு தான் வரவேண்டும்.
நம் வாழ்க்கையில் நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்களும் சரி பாதி கலந்து தான் இருக்கும்.தேர்வு நம் கையில் தான் உள்ளது.
மெக்ஸிகோ சலவைக்காரியையும் தாண்டி, பிராமண ஆதரவையும் தாண்டி,எழுத்து வியாபாரத்தையும் தாண்டி அவருடைய எழுத்து நம் அனைவரையும் பாதித்து உள்ளது என்பதே உண்மை.
குறிப்பு:
இந்த இடுகைக்கு "தீதும் நன்றும் பிறர் தர வாரா"என்ற பெயர் தான் வைக்கலாம் என்று இருந்தேன்.எதுக்கு வம்பு?யாரும் வந்து படிக்கமாட்டார்கள் என்று தான் பெயர் மாற்றி வைத்தேன்.
(இதே விசயத்தைத் தான் அவரும் சில சமயங்களில் பின்பற்றினார்.:-))