Monday, April 21, 2008

அறை எண் 305 ல் கடவுள் - விமர்சனம்

கடவுளின் பவரையே லவட்டிக் கொண்டு போகும் இரண்டு மேன்சன் வாழ் இளைஞர்கள் பற்றிய கதையில் லாஜிக் என்ற வஸ்துவை எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லைதான்.

ஆபாசம்,வன்முறை இல்லாத,வித்தியாசமான‌ படத்தைக் கொடுத்ததற்காக இயக்குநர் சிம்புதேவனைப் பாராட்டலாம்.

கடவுளாகப் பிரகாஷ்ராஜ்...அழகாக செய்திருக்கிறார்.கடவுளாகவும்,பின்பு பவர் திருடப்பட்ட பிறகு சாதாரண மனிதனாகவும் பின்னியிருக்கிறார்.ஆனால் தான் கடவுள் என்பதை நிரூபிக்க அடிக்கடி விண்டோஸ் டெஸ்க்டாப் பேக்ரவுண்டு மாற்றுவது போல் அடிக்கடி பேக்ட்ராப்பை மாற்றிக் கொண்டேயிருக்கிறார்.

சந்தானம்...அநியாயத்திற்கு நடித்துள்ளார்.இப்படியே போனால் அடுத்த பேரரசு படத்தின் நாயகன் ஆகிவிடுவார் போல் இருக்கிறது.சந்தானத்திடம் நாம் எதிர்பார்க்கும் டைமிங் மிஸ்ஸிங்.:-((

கஞ்சா கருப்பு நிறைவாக செய்துள்ளார்.தன் குடும்பத்தாருடனான காட்சிகளில் கலக்கியுள்ளார்.

நம் சாப்பாட்டிற்கு ஊறுகாய் கூட கொஞ்சம் அதிகமாக வைத்திருப்போம்.அதைவிட குறைவாகத்தான் நாயகி மதுமிதாவைப் பயன்படுத்தியுள்ளார்கள்.ஜோதிர்ம‌தியும் அவ்வ‌ப்போது வ‌ந்து போகிறார்.

ராஜேஷ்,M.S பாஸ்கர்,இளவரசு,தலைவாசல் விஜய்,V.S ராகவன் என ரகளையான கேரக்டர்களை இயக்குநர் அறிமுகம் செய்கிறார்.ஆனால் அந்த அளவு இவர்களைப் பயன்படுத்தவில்லை என்பது கூடுதல் சோகம்.

குறையேதும் இல்லை....,அட அட அட என்ற இரண்டு பாடல்கள் கேட்பதற்கு நன்றாக உள்ளது.

படத்தின் மிகப் பெரிய குறை சிரிப்பு தேவனாக இருந்திருக்க வேண்டிய சிம்புத்தேவன்,அட்வைஸ் தேவனாக மாறி மொக்கை போட்டு இருப்பதுதான்.பல இடங்களில் கொத்தி விட்டார்.

கடைசி சீனில் வரும் காமெடி படம் முழுக்க வந்திருந்தால் ரசிகர்களுக்கு பம்பர் பரிசாக இருந்திருக்கும்.இப்போ கொஞ்சம் கஷ்டம் தான்.:-(((

சங்கரின் ராசி எண்ணாண 8 வரும்படி டைட்டில் வைத்தால் மட்டும் போதாது என்பதை சிம்புத்தேவன் உணர அறை எண் 305 ற்கு வர்ம் கடவுளைப் பிரார்த்திப்போம்.

பின்குறிப்பு.
85000 சம்பளம் வாங்கும் மென்பொருள் துறையினரின் கைகளை மொன்னையாக்கும் சிம்புத்தேவன் இப்படத்தை இயக்குவத்ற்கு மாதம் 3500 சம்பளத்திற்கும்,அவருடைய காட்பாதர் சங்கர் ரோபோ படத்தை இயக்குவதற்கு மாதம் 2500 சம்பளத்திற்கும் வேலை செய்துள்ளார்கள் என்ற திடுக்கிடும் உண்மை வெளியாகி உள்ளது...

கேட்கிறவன் கேனையனாக இருந்தால்............

Tuesday, April 8, 2008

யாரடி நீ மோகினி - திரை விமர்சனம்

தனுஷ் வேலைவெட்டி இல்லாத உருப்படாத இளைஞன்.அவருடைய பாசக்கார எதிரியான அப்பா ரகுவரன்.தீடீரென ஒரு நாள் வழியில் நயந்தாராவைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆகி அவர் வேலை பார்க்கும் மென்பொருள் நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்ந்துவிடுகிறார் தனுஷ்
:-)).தனக்குள் பற்றி எரியும் காதலை நயந்தாரவிடம் தனுஷ் சொல்ல "நோ" சொல்லிவிடுகிறார் நயன்.சிபாரிசுக்கு போகும் ரகுவரனையும் அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார்.ரகுவரன் இறந்துவிடுகிறார்.ம‌ன‌மாற்ற‌த்திற்காக‌ ந‌ண்ப‌ணின் திரும‌ண‌ம் ந‌ட‌க்கும் கிராம‌த்திற்குச் செல்கிறார் த‌னுஷ்.அங்கே ம‌ண‌ப்பெண் ந‌ய‌ன்....இடைவேளை.

ந‌ய‌னின் மிக‌ப் பெரிய‌ குடும்ப‌ம் த‌னுஷை ஏற்றுக் கொண்டார்க‌ளா?த‌னுஷ்,ந‌ய‌ன் ஜோடி இணைந்த‌தா என்ப‌து மீதிக்க‌தை.

என்ன‌ 3,4 த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ள் சேர்ந்து பார்த்தது போல் உள்ள‌தா? :-((

படம் முழுக்க இழையோடும் நகைச்சுவை படத்தின் மிகப்பெரிய பலம்.இந்த பழைய கதைக்கு செல்வராகவன் விறுவிறுப்பான திரைக்கதையும்,போரடிக்காத வசனங்களும் எழுதித் தந்துள்ளார்.

தனுஷ் பொல்லாதவனிற்கு பிறகு நடிப்பில் நல்ல முதிர்ச்சி.ஆனால் ஆங்காங்கே அவருடய‌ மாமனாரைக் காப்பியடிப்பது மட்டும் நெருடல்.

இப்ப‌ட‌த்தில் ந‌ய‌ந்தார‌வை ப‌ற்றி சொல்லாவிட்டால் புழ‌ல் சிறையில் தள்ளி விடுவார்க‌ள்.அவ்வ‌ள‌வு பாந்த‌மாக‌ இருக்கிறார்.ட‌ப்பிங் க‌லைஞ‌ரின் உத‌வியோடு ந‌ன்றாக‌ ந‌டிக்க‌வும் செய்துள்ளார்.

ர‌குவ‌ர‌ன் வ‌ழ‌க்கமான பிரெண்ட்லியான‌ அப்பா.ஆனால் வ‌ழ‌க்கமான‌ என்று சொல்ல‌ முடியாத‌ அள‌விற்கு பின்னியுள்ளார்.ப‌ட‌த்தில் அவ‌ர் இற‌க்கும் காட்சியில் ஏனோ க‌ண்க‌ளில் இருந்து த‌ண்ணீர் வ‌ந்த‌து.

த‌னுஷின் ந‌ண்ப‌ராக‌ ந‌டிப்ப‌வர், அலைபாயுதே ப‌ட‌த்தில் இருந்து த‌ன‌க்கு நிச்ச‌யிக்க‌ப்ப‌ட்ட‌ ஹீரோயினை ஹீரோவுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் வேலையை செய்து வ‌ருகிறார்.எப்போது தான் விடியுமோ பாவ‌ம் :-((

க‌ருணாஸ் ஒரு சீனில் ம‌ட்டும் சிரிக்க‌ வைத்து விட்டுப் பின் அவ்வ‌ப்போது த‌லையை ம‌ட்டும் காட்டுகிறார்.

பதினைந்து வயது பெண்ணின் காதல் எபிசோட் அபத்தம். அதிலும் அப்பெண்ணிற்கு முதலிரவுப் பாடல் கொடுத்ததெல்லாம் ஓவர்.என்ன.. முடிக்கும் போது மெச்சூராக முடித்து தங்கள் திறமையைக் காட்டியிருக்கிறார்கள்.கொடுமை..

முதல் பாதி விறுவிறுப்பு பின்பகுதியில் சற்று குறைவு தான்,

பாடல்கள் ந‌ன்றாக‌ உள்ள‌து.அத‌ற்காக‌ இப்ப‌டியா சொல்லிக்காம கொள்ளிக்காம‌ திடீர் திடீர்னு வ‌ர்றது.

ஜ‌வ‌ஹர் முத‌ல் ப‌ட‌ம் என்ற‌ சுவ‌டே தெரியாம‌ல் ந‌ன்கு இய‌க்கி உள்ளார்.

ப‌ரிந்துரை:

ஒரு முறை பார்க்கலாம்.

எச்சரிக்கை:

படத்தின் நாயகியின் குடும்பப் பிண்ணணி காரணமாக தமிழ்மணத்தில் டவுசர் கிழியும் வாய்ப்பு உள்ளது.:-))

Friday, April 4, 2008

உற்சாகமான மனிதர்கள்...உற்சாகமான தருணங்கள்...வேறென்ன சொல்ல..(பதிவர் சந்திப்பு - 30/3/2008 கொஞ்சம் லேட்டான பார்வை).

தாழ்தளப் பேருந்தில்(Automatic Door)சென்றபடியால் காந்திசிலை சிக்னலில் இறங்க முடியாமல் கண்ணகி சிலை நிறுத்தத்தில் சென்று இறங்கினேன் :-((

ஆடி அசைந்து நான் செல்வதற்குள் கூட்டம் களைகட்டத் துவங்கியிருந்தது.

கூச்சத்தோடு என்னை அறிமுகம் செய்தவுடன் வினையூக்கி உங்கள் விமர்சனங்கள் படித்துள்ளேன்...தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கம் கொடுத்தார்.

பதிவர் நித்யகுமாரன் அருகில் அமர்ந்து அவருடன் பேசும் போது நானாகவே "ஹி..ஹி எனக்கு இது கொஞ்சம் புதுசு.இவ்வுலகிற்கு வந்து 6 மாசம் தான் ஆகிறது" என்று சொன்னேன்.அதற்கு அவர் "நான் வந்து 2 மாசம் தான் ஆகிறது..ஒன்றும் பிரச்சினை இல்லை"என்று பதிலிறுத்தார்.

"கூட்டத்திற்கு நம் ஆதர்ஷ நாயகன் வவ்வால் வந்திருக்கிறார்",என்ற வதந்தி கிளம்பிய போது,"ஒருவேளை அவரா இருக்குமோ..ஒருவேளை இவரா இருக்குமோ...ஒருவேளை அப்படி இருக்குமோ...ஒரு வேளை இப்படி இருக்குமோ என்றெல்லாம் குழம்பி,ஒருவேளை அது நானாகவே இருக்குமோ என்ற முடிவுக்கு வரும் அளவிற்குத் தெளிவாக இருந்தேன்.:-((

"This cat ம் Milk Drink மோ "என்றவாறு மூஞ்சி வைத்திருந்த குசும்பன் வழக்கம்போல் எல்லோரையும் வாரிக்கொண்டும்,வாரப்பட்டுக் கொண்டும் இருந்தார்.

அப்போது அங்கு வந்த டோண்டு சார் சுமார் 30 அடி உயரத்தில் குதித்து தான் ஒரு 65 வயது இளைஞர் என்று நிரூபித்தார்.(3 அடியை 30 அடி என்று எக்ஸாஸ்ஜிரேட் செய்வது சங்க காலத்து மரபு :-))

மா.சிவக்குமார் இணையத்தில் மட்டுமில்லை, விசைப்பலகையிலும் தமிழை ஏற்றியே தீர வேண்டும் என்று தமிழ் ஒட்டியையும்(ஸ்டிக்கர்),மென்பொருள் குறுந்தகடு ஒன்றையும் விநியோகித்தார்.

சுகுணாவிற்கும்,அதியமானிற்கும் உலகமயமாக்கல்,சந்தைப்பொருளாதாரம்,கோககோலா,மாப்பிள்ளை விநாயகர் சோடா கம்பெனி என்றெல்லாம் விவாதம் வந்த போது நான் "ஆத்தாடி !!!" என்று எதிர்திசைக்கு வந்து விட்டேன்.

எதிர்திசையில் லக்கி கலக்கிக் கொண்டிருந்தார்.பாலகுமாரன்,சாரு,ஜெயமோகன்,சுஜாதா,பாட்ஷா,முகவரி பட வசனங்கள்,பதிவுலகம் என்று அனைவரும் கலந்துகட்டி பேசியது அந்தக் காலத்து குமுதம் படிப்பது போல் இருந்தது.

வெங்கட் என்ற நண்பரோடு பேசிக்கொண்டிருந்த போது "சுஜாதாவைப் பிடிக்காதவர்கள் இருக்கலாம்...ஆனால் படிக்காதவர்கள் இருக்கமுடியாது"என்றெல்லாம் சுஜாதாவின் இரங்கல் கூட்டத்தில் பேசினார்கள் என்று சொன்னார்.

முர‌ளிக்க‌ண்ண‌ண்,ல‌க்கிலுக்,அதிஷா ஆகியோர் குழ‌ந்தைக‌ளுக்கான‌ ஒரு ரூபாய் புத்த‌க‌ம் வெளிக்கொண்டு வ‌ருவ‌து ப‌ற்றி பேசினார்க‌ள்.மிக நல்ல முயற்சி.

பார்த்த முதல் நாளே வா..செல்வம் என்று தோள் மீது கை வைத்து உரிமையோடு அழைத்துச் சென்ற பாலா,

வீட்டிற்கு வாங்க அங்க பழகலாம் என்று அன்போடு கூப்பிட்ட அதிஷா மற்றும் அவர் நண்பர்,

பெயர் சொன்னவுடன் "நீ தானா அது??" என்று கேட்ட வரவனை,

"ஐ.டி துறை,டெக்ஸ்டைல் துறை, ஈழத்தமிழர் பிரச்சினை",என்றெல்லாம் பேசிய நண்பர் பாரி,

இருட்டில் கூட நான் கூலிங்கிளாஸ் அணிவதை நீங்கள் எல்லோரும் பார்த்தே தீர வேண்டும் என்று அடம்பிடித்த அபிஅப்பா,

சாந்த சொரூபிகளாக காட்சியளித்த உண்மைத்தமிழன்,பைத்தியக்காரன்,சுந்தர்,ஆடுமாடு என வந்திருந்த அனைவரும்

உற்சாகமான மனிதர்கள்...உற்சாகமான தருணங்கள்..வேறென்ன சொல்ல...

அடுத்த சந்திப்பை ஆவலோடு எதிர்பார்த்து......