வாசல் பூராவும் கட்டவுட், பேனர்..இதென்னடா ஏதும் அரசியல் கூட்டத்துக்கு தப்பா வந்துட்டோமானு பாத்தா நம்ம எழுத்தாளர்கள் விதவிதமான போசில சிந்திச்சுக்கிட்டு இருந்தாங்க..ஆகா நாம சரியாத்தான் வந்திருக்கோம்னு நினச்சிக்கிட்டு டிக்கட் எடுத்துட்டு உள்ர போய் பாத்தா..ஏத்தே!!எத்தன கடைங்க.ஒரு நிமிசம் நாம இதில தொலஞ்சு போய்டுவோமோன்னு பயமே வந்துடுச்சு.
அப்படியே பராக்கு பாத்துக்கிட்டே முதல்ல நுழஞ்சது கிழக்கு பதிப்பகம்.எம்மாடி எத்தன வகையான புத்தகங்க!!.நம்ம சிவாஜி படத்த பத்தின ராணிமைந்தன் புத்தகத்துல ஆரம்பிச்சு எச்சக்கச்சமா அடுக்கி வச்சிருந்தாங்க."அள்ள அள்ளப் பணம் 3", "நான் சரவணண்" இந்த இரண்டு புத்தகங்களையும் வாங்கினேன்.ஸ்டாலுக்கு வெளியே சில பேர் கும்மி அடிச்சுட்டு இருந்தாங்க.பதிவர்கள் களை அவங்க கிட்ட இருந்துச்சு.
அப்புறமா நான் நுழஞ்சது ஞானபானு பதிப்பகம்.இங்கன ஞானியோட புத்தகங்க எல்லாம் மலிவுவிலைப் பதிப்பா போட்டிருந்தாங்க.மக்கள் கருத்த கேட்க இரண்டு பானையையும் வச்சிருந்தாங்க.இங்கன 3 புத்தகங்கள வாங்கிட்டு அப்படியே நடையக் கட்டினேன்.
உயிர்மை வாசல்ல மனுஷ்யபுத்திரன் உக்கார்ந்திருந்தாரு.அழகா சிரிச்சுகிட்டேயிருந்தாரு.
காலச்சுவடுலயும் நல்ல கூட்டம்.வகைவகையா நிறய புத்தகங்க இருந்துச்சு.என்ன வில தான் கொஞ்சம் ஜாஸ்தி.
அன்னம் பதிப்பகம் கி.ரா வோட எல்லா புத்தகங்களயும் போட்டிருந்தாங்க.கி.ரா ஐயா வெளியே உக்காந்திருந்தாரு.அவருகிட்ட போய் 2 நிமிசம் பேசினேன்.எங்க ஊரும் கோவில்பட்டி பக்கத்தில தான்னு சொன்னேன்.ரொம்ப சந்தோசப்பட்டாரு.நான் வாங்கி வச்சிருந்த "கோபல்ல கிராமம்" புத்தகத்தில கையெழுத்து போட்டுக் கொடுத்தாரு.
பழ.நெடுமாறன் அய்யாவும் ஸ்டாலுக்கு வெளியே உக்காந்திருந்தாரு.திடீர்னு ஒருத்தரு அய்யாவோட கால்ல சட்டுனு விழுந்தாரு.அவரு விழ வேண்டிய அவசியமே அவருக்கு இருந்த மாதிரி தெரியல.இருந்தும் அவரு விழுந்தது என்னென்னமோ மனசுக்குள்ள சொல்லிச்சு.
அம்ருதா பதிப்பகம் சிறந்த எழுத்தாளர்களோட 10 படைப்புகள் திலகவதி அவர்களால தொகுக்கப்பட்டு "முத்துக்கள் பத்து" அப்படின்னு பேர் கொடுத்து வெளியிட்டு இருந்தாங்க.நான் அசோகமித்திரன் மற்றும் வண்ணதாசன் இவங்களோட தொகுப்புகள வாங்கினேன்.
விகடன், குமுதம், ஹிந்து ஸ்டால்கள்ள நல்ல கூட்டம்.
"தமிழன் என்றோர் இனமுண்டு,தனியே அவர்க்கோர் குணமுன்டு"னு சொல்றதுக்கேற்ப கண்காட்சியிலேயே food court பகுதியில தான் நல்ல கூட்டம்.பச்சைத் தமிழனான நானும் மரபிற்கேற்ப ஒரு icecream வாங்கி சாப்பிட்டு வெளியே வந்தேன்.
வெளியே அரங்கத்தில கவியரங்கம் ஒன்று நடத்திக்கிட்டு இருந்தாங்க.வெண்ணிலா,யுகபாரதி எல்லோரும் இருந்தாங்க.தங்களோட கவிதைகளால உலகத்தையே திருத்திட ஆசப்படும் அவங்க பண்ணுணது எல்லாம் கொஞ்சம் ஓவர்.
வெண்ணிலா கவிதை வாசிச்சு முடிச்சுட்டு கிளம்பிட்டாங்க.அடுத்தவரு என்ன சொல்லறாருனு மேடையில இருந்தவங்களே கேட்கல.ஒருத்தரு கவித வாசிக்க நடுவரா இருந்தவரு மைக்கக் கூட அமைக்காம பக்கத்துல பேசிக்கிட்டே இருந்தாரு.பிரபஞ்சன் வேற உக்காந்துகிட்டு இருந்தாரு.கொடுமை.
திருஷ்டிபரிகாரங்கள்:
இவ்வளவு செலவு செஞ்ச bapasi நல்ல முறையில கழிப்பிட வசதி செய்யாம விட்டுடுச்சு.
புத்தக ரேட் எல்லாம் கூடிகிட்டே போகுது.15 ரூபாய்க்கு நான் வாங்கி படிச்ச "பூக்குட்டி" இன்னக்கி 90 ரூபாய்.படிப்பானுபவம், உலகத்தரம்னு என்னென்னமோ சொல்றாங்க.
"யாதும் ஊரே யாவருங் கேளிர்" பாட்டு பனை ஓலையில தான் எழுதியிருப்பாங்க.
கூட்டம் கம்மி.பல ஸ்டால்களில் ஒருவர் கூட இல்லை.
இருந்தாலும் ஒரு நிறைவான திருவிழா.
3 comments:
//புத்தக ரேட் எல்லாம் கூடிகிட்டே போகுது.15 ரூபாய்க்கு நான் வாங்கி படிச்ச "பூக்குட்டி" இன்னக்கி 90 ரூபாய்.படிப்பானுபவம், உலகத்தரம்னு என்னென்னமோ சொல்றாங்க.
"யாதும் ஊரே யாவருங் கேளிர்" பாட்டு பனை ஓலையில தான் எழுதியிருப்பாங்க.//
நீங்களாவது புத்தகங்கள் கொஞ்சம் வாங்கினிங்க, நான் எதுவும் வாங்காமல் ஓடி வந்துட்டேன்!அம்புட்டு புத்தகங்களை புது மணத்துடன் ஒரே இடத்தில் பார்த்ததே போதும்!(சில ஆங்கிலப்புத்தகங்கள் நல்ல வாசனையுடன் இருந்தது!)
வணக்கம் செல்வம்
சென்ற வாரம் நானும் புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டேன்.
நல்ல புத்தகங்கள் நிறைய இருந்தும் வாங்கி படிக்க யோசனை தான் ...
என்ன செய்ய "யானை விலை குதிரை... விலை இல்லா விட்டாலும் "
விலை கொஞ்சம் அதிகம் தான் ;அப்படிஇருந்தும் கூட்டத்திற்கும் ஒன்றும்
குறைச்சலில்லை ,சும்மா வேடிக்கை பார்க்க வருவார்களோ ! இல்லை நிஜமான
வாசிக்கும் ஆர்வம் தான் மக்களை அங்கு இழுக்கிறதோ...வெறும் பார்வையில் ஒன்றும் புரியவில்லை ஆனால் புத்தக சந்தையில் சினிமா தியேட்டர்களை விட கூட்டம் நிரம்பி வழிவதை காண ஒரு சின்ன சந்தோசம் வந்தது உண்மை
நானும் சில புத்தகங்கள் வாங்கினேன் .
சுந்தரராமசாமியின் - ஒரு புளிய மரத்தின் கதை
பொன்னீலனின் -பொட்டல் கதைகள்
கி. ரா. வின் -அந்தமான் நாயக்கர் ,பிஞ்சுகள் ...
தி .ஜானகி ராமனின் - அம்மா வந்தாள்
மேலும் சில புத்தகங்கள் ;வண்ணதாசன் கட்டுரைகள் எங்கே கிடைக்கும் என்பது தெரியாததால் வங்க இயலவில்லை ,கொஞ்சம் மனக்குறை தான் வாரம் தவறாமல் விகடனில் என்ன அருமையாக எழுதுகிறார் ,முடிந்தால் வண்ணதாசன் பற்றிய தகவல்களை தெரிவியுங்கள்
பாத்ரூம் வசதி நீங்கள் சொன்னதை போல சரியில்லை தான்
ஆனால் சாப்பாட்டு வசதி ஏ.ஒன் ...கூட்ட நெரிசல் டிசம்பர் சீசன் சங்கீத சபாக்களை ஞாபகப்படுத்துகின்றன ... ஐயோடா! எத்தனை வகை தீனிகள் ! அவ்வளவையும் தின்று தீர்க்க ஆட்களுக்கும் பஞ்சமில்லை நல்ல வசூல் தான் கடை போட்டவர்களுக்கும் ,இடம் வாடகைக்கு விட்டவர்களுக்கும்
பாத்ரூம் தவிர பெரிதாக குறை காண ஏதும் இல்லை
மொத்தத்தில் "கண்காட்சி கண்களுக்கு விருந்தாச்சு "
ஹர்ஷா
வாங்க ஹர்சா.வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.புத்தகச் சந்தையில் கூட்டம் என்பது மகிழ்ச்சி தரும் விஷயம் தான்.மக்களின் மனோபாவம் மாறி வருவதற்கு மாஸ் சைக்காலஜி தான் காரணம் என்று நினைக்கிறேன்.எங்கள் வீட்டில் நான் கண்டதையும் படிக்க ஆரம்பித்த போது எங்கே கெட்டுப் போய்விடுவானோ என்று பயந்திருந்தார்கள்.
இன்று அந்த நிலமை இல்லை என்பது சந்தோசமான விஷயம் தான்.
எனக்கும் வண்ணதாசன் மிகவும் பிடிக்கும்.அதிகம் படித்ததில்லை.சந்தையில் அவருடைய சிறுகதைத் தொகுப்பு வாங்கியுள்ளேன்.
Post a Comment