படத்தின் ஹீரோவாக அடித்திருப்பவர்...சாரி நடித்திருப்பவர் சேது,அந்நியன் போன்ற படங்களில் எல்லாம் நடித்திருக்கும் விக்ரம்.வில்லனாக நடித்திருப்பவர் பாட்ஷா படத்தில் நடித்த ரகுவரன்.படத்தை இயக்கியிருப்பவர் ஆனந்தம்,ரன் இவற்றின் இயக்குனர் லிங்குசாமி.இப்படியெல்லாம் மடத்தனமாக :-)) நினைத்துக் கொண்டு உள்ளே செல்லாதீர்கள்!!.
படத்தின் கதை...
சென்னையில் பணிபுரியும்(!) ஒரு நல்ல ரவுடி பிரகாஷ்ராஜ்.(காட்பாதர் மாதிரி, நாயகன் மாதிரி,பாட்ஷா மாதிரி, அப்புறம் சரி வேண்டாம் விடுங்க)
இவர் போட்டுத்தள்ள நினைக்கும் ஆட்களை இவருக்கு முன் போட்டுத் தள்ளுகிறார் விக்ரம்.யாருடா நீ? என்று பிரகாஷ் கோபமாகக் கேட்க விக்ரம் உன்கிட்ட வேலைக்கு சேரணும்னு தான் இதெல்லாம் செஞ்சேன் என்கிறார்.
வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே விக்ரமின் புஜபலபராக்கிரமத்தைப் பார்த்து "25 வருசங்களுக்கு முன்பு நான் என்னையே பார்த்த மாதிரி இருக்கு" யாருடா நீ?(வழக்கமான டயலாக்) அப்படின்னு கேட்க... பிளாஷ்பேக்.
சிறுவனான விக்ரமிற்கு தப்புகளைத் தட்டிக்கேட்கும் பிரகாஷ்ராஜ் ஒரு ஹீரோவாகத் தெரிகிறார்.ஒரு கட்டத்தில் விக்ரமின் அப்பாவை அடித்தவர்களைப் பிரகாஷ் அடிக்க, விக்ரமும் பெரியவன் ஆனவுடன் தாமும் பிரகாஷ்ராஜ் போல் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு அவரிடம் வந்து சேர்கிறார்.
இந்நிலையில் திரிசாவை ஏதேச்சையாக அவர் வீட்டு மேல்பகுதியை பிரித்து வந்து பார்க்கிறார்.இரண்டு,மூன்று சீன்களிலேயே திரிசா காதலிக்கிறார்.
பிரகாஷ்ராஜின் எதிரி ரகுவரன்.அவரும் ஒரு ரவுடி தான்.(கெட்ட ரவுடி!!).பிரகாஷ்ராஜிற்கு விக்ரம் அவருடைய பழைய காதலியையே திருமணம் செய்து வைக்கிறார்.
ரகுவரன்,பிரகாஷ்ராஜ் கும்பல் அடிக்கடி மோதிக்கொள்கிறது.இரண்டு பக்கமும் ஆட்கள் இறக்கிறார்கள்.பிரகாஷ்ராஜ் ரகுவரனைவிட பெரிதாக வளர்கிறார்.
சென்னைக்கு புது போலீஸ் கமிஷனராக வரும் ஆஷிஷ் வித்யார்த்தி எல்லா ரவுடிகளையும் என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ள உத்தரவிடுகிறார்.
விக்ரமிற்கும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு திரிசாவுடன் குடும்பம் நடத்த வேண்டும் என்று ஆசைவர...முடிவில் என்ன ஆனது என்பது தான் கிளைமாக்ஸ்.
விக்ரம் இந்தப்படம் முழுக்க யாரையாவது அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.அதற்கே நேரம் போய்விடுவதால் நடிப்பதற்கு நேரமேயில்லை.
திரிசா மூன்றாவது சீனிலேயே விக்ரமை காதலித்து விட்டு அவ்வப்போது டூயட்டிற்கு மட்டும் வருகிறார்.
ரகுவரனின் வில்லத்தனத்தைப் பார்த்து தியேட்டரில் அனைவரும் சிரிக்கிறார்கள்.படத்தில் காமெடி இல்லை என்ற குறையைத் தீர்த்து வைப்பது ரகுவரனின் வில்லத்தனம் தான்.
படத்தின் ஒரே ஆறுதல் பிரகாஷ்ராஜ் தான்.நன்றாக நடித்துள்ளார்.ஆனால் ஏற்கனவே பல முறை இதே போல் பார்த்துவிட்டதால் nothing special.
படத்தின் வசனங்கள் எஸ்.ராமகிருஷ்னணன்.பாபாவில் தொடங்கி இந்தப் படம் வரை தனக்கு சினிமா வசங்கள் எழுத வராது என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.(சார் உங்க துணையெழுத்து படிச்சிட்டு பல நேரங்கள்ள கண்ல இருந்து தண்ணி வந்திருக்கு)ப்ச்..
"முதன்முறை" என்ற பாடல் மட்டும் பரவாயில்லை.ஒரு பாட்டிற்கு ஷெரீன் வந்து குத்தாட்டம் போடுகிறார்.நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு இங்கெல்லாம் பாடல் வரும் என்று சொன்னால் அங்கெல்லாம் பாடல் வருகிறது ஒரே சலிப்பு...
கேமரா, எடிட்டிங் எல்லாம் ஒன்றும் சொல்வதற்கில்லை..
2007 ல் ரவுடிகள் படமாக வந்து கொண்டிருந்ததே...அப்போதே வந்திருக்க வேண்டிய படம்.தமிழ்சினிமாவின் டிரெண்ட் மாறிவிட்ட இந்நிலையில் too late...
முடிவில் எல்லோரும் கொல்லப்படுகிறார்கள்.நம்மையும் சேர்த்து...
பரிந்துரை:
இதற்கு மேல் உங்கள் இஷ்டம்!!!!
பின்குறிப்பு:
படம் முடிந்து பார்க்கிங் ஏரியாவிற்கு வந்தால் அங்கு ஒருவர் என் வண்டியில் அவருடைய சாவியை நுழைத்துக் கொண்டிருந்தார்.பாஸ் என்ன இது ? என்று கேட்டதற்கு சாரி பாஸ் பீமா எபக்ட் என்றார்.
என்ன கொடுமை சார் இது??
18 comments:
படிக்கிறதுக்குச் செம ஜாலியா இருந்துச்சுங்க உங்க விமர்சனம்.
//படம் முடிந்து பார்க்கிங் ஏரியாவிற்கு வந்தால் அங்கு ஒருவர் என் வண்டியில் அவருடைய சாவியை நுழைத்துக் கொண்டிருந்தார்.பாஸ் என்ன இது ? என்று கேட்டதற்கு சாரி பாஸ் பீமா எபக்ட் என்றார்//
சிப்பு சிப்பா வருது :)
:-)) பாவம். இப்படிக் காசையும் கொடுத்து கழுத்து அறுபட்டு வெளிய வர வேண்டியிருக்கா...
//படம் முடிந்து பார்க்கிங் ஏரியாவிற்கு வந்தால் அங்கு ஒருவர் என் வண்டியில் அவருடைய சாவியை நுழைத்துக் கொண்டிருந்தார்.பாஸ் என்ன இது ? என்று கேட்டதற்கு சாரி பாஸ் பீமா எபக்ட் என்றார்.
//
:))))))))))
ஒரு பாட்டு இதுலருந்து தொல்லைக்காட்சியில போட்டாங்க. அதில விக்ரம் ஒரு 100 பேர கொன்னாரு (ஆமாங்க, ஒரே பாட்டுல). அப்பவே நெனச்சேன் இது ஊத்திக்குமுன்னு..
நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன், நேற்று இப்படத்தை பார்க்கலாம் என நினைத்து போனேன் டிக்கட் கிடைக்கவில்லை,ஆனால் டிக்கட் எல்லாம் தாரளமாக பிளாக்கில் விற்கிறார்கள் 150-200 ரூபாய் என்றார்கள் ...வேலைக்காவாது என்று சரக்கு கடைக்கு போய்ட்டேன்!
சென்னையில் குப்பை படம் போட்டாலும் கூட்டம் அப்புகிறது!
இரண்டு வருசம் இழுத்தடித்தப்போதே நினைத்தேன் சொதப்ப போறாங்கன்னு. நல்லாவே சொதப்பிட்டாங்கன்னு உங்க வண்டியிலெ இன்னொருத்தர் சாவியை நுழைக்கும் போது தெரிந்துவிட்டது.
நல்ல கச்சிதமான விமர்சனம்.
:-))
ரொம்ப நன்றிங்க
//முடிவில் எல்லோரும் கொல்லப்படுகிறார்கள்.நம்மையும் சேர்த்து//
ஹாஹா... நச்!
காளை வேண்டாமுன்னு புலி சொல்லிட்டாரு, நீங்க பீமா வேண்டமுன்னு சொல்லிட்டீங்க. அப்படியே மத்த படத்துக்கும் சொல்லிடுங்க. எனக்கு நேரமும் காசும் மிச்சம்.
கடவுளே... இந்தப் பதிவை நான் சாயங்காலமே பார்த்திருக்கக் கூடாதா?
உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல, எங்களைக் காப்பத்துறதுக்காக எப்பேர்ப்பட்ட தியாகம் செஞ்சிருக்கீங்க
அட்டகாசம், அருமை, ரகளை - படத்தைப் பத்திச் சொல்லலை - உங்க விமர்சனத்தைப்பற்றி! :-))
//படம் முடிந்து பார்க்கிங் ஏரியாவிற்கு வந்தால் அங்கு ஒருவர் என் வண்டியில் அவருடைய சாவியை நுழைத்துக் கொண்டிருந்தார்.பாஸ் என்ன இது ? என்று கேட்டதற்கு சாரி பாஸ் பீமா எபக்ட் என்றார்.
//
தூள்!
பாராட்டுகள்.
வரிக்கு வரி இப்படி வாரி இருக்கீங்களே!.
அப்ப உங்க விமர்சனத்தை வைத்து பார்க்கும் போது சன் தொலைக்காட்சியில் வரும் திரைவிமர்சனம் பாணியில் சொன்னால் பீமா-கோமா . எஸ்.இராமக் கிருஷ்ணனின் துணை எழுத்து ரொம்ப அருமையான படைப்பு,அவருக்கும் போற போக்குல ஒரு "பன்ச்".
சிரிச்சு சிரிச்சு விக்கல் வந்திருச்சுங்க!!!
Nalla vimarsanam.. Thanks for saving my paNam
பிரிவோம் சந்திப்போம்தான் பொங்கல் வெளியீடுகளில் கருப்புக் குதிரையாமே. பார்த்தீர்களா?
//நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு இங்கெல்லாம் பாடல் வரும் என்று சொன்னால் அங்கெல்லாம் பாடல் வருகிறது ஒரே சலிப்பு...
//
படம் பார்த்த என் நன்பன் ஒருவர் இதே கருத்தை சொன்னார்... பணம் தண்டம் என்று பொலம்பினான்..
ஆக பீமா பாக்க வேணாம் - சரி - ஆனா எங்களுக்குப் பொழுது போகணுமே - 30 நாள் ஓடினா கடைசி நாள் அன்னிக்கு பாத்துடறோம்
வாங்க கைப்புள்ள..வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி...
...............................................
வாங்க தெகா..ஆமா கழுத்தில ரத்தம் மட்டும் தான் வரல..
...................................................
வாங்க புபட்டியன்...பாட்டில மட்டும் இல்ல படம் முழுக்க கொன்னுகிட்டுதான் இருக்காரு
...................................................
வாங்க வவ்வால்...எப்படியோ தப்புச்சிட்டீங்க
...................................................
வாங்க மஞ்சூர் ராசா...வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி
...................................................
வாங்க முபாரக்.....நன்றி
...................................................
வாங்க thamizhmaagani....நன்றி
...................................................
வாங்க கொத்ஸ்...மத்த படங்களையும் பாப்போம்ல(எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் நல்லவன்)
....................................................
வாங்க பிரகாஷ்.....நீங்களும் மாட்டிக்கிட்டீங்களா???
....................................................
வாங்க பிரபா....நான் என் கடமையத்தானே செஞ்சேன்....(தமிழ்சினிமா பாதிப்பு)
....................................................
வாங்க சுந்தர்.....ரொம்ப நன்றி
....................................................
வாங்க நடோடி இலக்கியன்....ரொம்ப நன்றி.துணையெழுத்து ஓர் அற்புதமான படைப்பு
....................................................
வாங்க blogeswari....thanks
....................................................
இல்லை அனானி இன்னும் பார்க்கலை.
....................................................
வாங்க வீ.எம்...வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.
....................................................
வாங்க சீனா....நேத்தே ரோகிணி தியேட்டரில் பாதி சீட் காலி...30 நாள் கழிச்சு இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக வேணா பார்க்கலாம்.
உங்கட விமர்சனத்தை ஆமோதிக்கிறேன். பழைய குப்பைக்கு புதிய வாசனை போட்டமாதிரி இல்ல?
தாங்க முடியலப்பா!!!!
Post a Comment