Monday, January 21, 2008

பிரிவோம் சந்திப்போம் - விமர்சனம்

முன்குறிப்பு:

"சரி வாடா படத்துக்குப் போகலாம்" என்றேன் தம்பியிடம்.

"என்ன படத்துக்கு?" என்றான்.

"அது வந்து,அது வந்து...பிரிவோம் சந்திப்போம்"கு போகலாம் என்றேன்.

"என்ன‌து?"

இல்ல‌டா ப‌ட‌ம் ந‌ல்லா இருக்காம்..போய்த்தான் பாப்போமே !!!

"இப்ப‌டித்தான் சொல்லி மாய‌க்க‌ண்ணாடிக்கு கூட்டிட்டுப் போன.சேர‌ன் இனிமே என் ப‌ட‌த்துக்கு வ‌ருவியா?வ‌ருவியானு செருப்பால‌யே அடிச்சுத் தொர‌த்தினாரு"

"இல்லடா இந்த‌ப் ப‌ட‌ம் அப்ப‌டி இல்லையாம்"

ஓவ‌ர் டூ பிரிவோம் ச‌ந்திப்போம்(டேய் உன‌க்கே கொஞ்ச‌ம் ஓவ‌ரா இல்ல‌)

ப‌ட‌த்தின் க‌தையை நீங்க‌ள் ப‌ல‌ ப‌திவுக‌ளில்/இட‌ங்க‌ளில் ப‌டித்திருக்க‌க் கூடும் என்ப‌தால் சி.சி.கதையாக‌ ம‌ட்டும்.

"திருமணத்திற்கு பிறகு கூட்டுக்குடும்ப‌த்தில் வாழ‌ ஆச‌ப்ப‌டும் பெண்ணிற்கும், த‌னிக்குடும்ப‌மாக‌ வாழ‌ ஆசைப்ப‌டும் ஆணிற்கும் திரும‌ண‌ம் ந‌ட‌க்கிற‌து.திரும‌ண‌த்திற்குப் பிற‌கு த‌னியே அவர்க‌ள் வாழும் போது அந்த‌ப் பெண்ணிற்கு என்ன‌ பிர‌ச்சினை ஏற்ப‌டுகிற‌து என்ப‌து தான் க‌தை..

இனி பிடித்த‌தும்,பிடிக்காத‌தும்.....

பிடித்த‌து...

1)"வெட்டுறதுக்கு நான் ஒன்னும் இளனி இல்லடா பளனி.."போன்ற பஞ்(சர்)டயலாக்குகள் இல்லை."ஏன் நம்ம த.. கூட..வேண்டாம் விட்டுடு" போன்ற சீண்டல்கள் இல்லை.

2)சிநேகா...மிக‌ச் சிற‌ந்த‌ ந‌டிப்பு.வ‌ந்தோமா,ஹீரோவ‌ ல‌வ் ப‌ண்ண‌மோ,டூய‌ட் பாடுன‌மா என்றில்லாம‌ல் அருமையாக‌ச் செய்து இருக்கிறார்.

3)ஆரம்பக் காட்சியிலேயே கிட்டத்தட்ட 2 டசன் கதாபாத்திரங்களை அழகாக அறிமுகப் படுத்தி அட போட வைக்கிறார் இயக்குநர்.

4)கதாபாத்திரங்களும்,அதற்கான தேர்வும்,அவர்கள் நடிப்பும் கச்சிதம்.குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் M.S.பாஸ்கர்,ஜெயராம் போன்றோர்கள்.அதிலும் ஜெயராம் மருத்துவராகப் பின்னி இருக்கிறார்.

5)நிறைய காட்சிகளைக் கவித்துவமாக எடுத்துள்ளார்.இன்விடேச‌ன் தேர்ந்தெடுப்ப‌து...ஒலிகளைப் ப‌திவு செய்வ‌து...ஜி.நாக‌ராஜ‌ன் ப‌ற்றிப் பேசுவ‌து... போன்ற‌வை.

6)கேம‌ரா அட்ட‌க்க‌ட்டு ப‌குதியை மிக‌ அழ‌காக‌ப் ப‌ட‌ம் பிடித்துள்ள‌து.

பிடிக்காத‌து....

1)ப‌ட‌த்தில் எல்லோரும் இய‌ல்பாக‌ ந‌டித்திருக்க‌ சேர‌ன் ம‌ட்டும் "அப்ப‌டின்னா என்ன?" என்று கேட்கிறார்.

2)ப‌ட‌ம் அடிக்கடி ஒரே இட‌த்தில் தேங்கி விடுகிற‌து.ந‌க‌ர‌ மாட்டேன் என்கிற‌து.இடைவேளைக்குப் பிற‌கு த‌னியே இருப்ப‌தால் சிநேகாவுக்கு வ‌ரும் பிர‌ச்சினைக‌ள் என்ற‌ ஒன்லைனையே 1 ம‌ணி நேரம் இழுத்திருக்கிறார்கள்.

3)படத்தில் மிகைப்படுத்துதல் ஜாஸ்தி.

4)நாடக சினிமா...(முன்னோர்கள் விசு,பாலச்சந்தர் போன்றோர்)

ப‌ரிந்துரை:

இதையெல்லாம் ஏற்றுக்கொண்டால் பார்க்க‌லாம்

3 comments:

Anonymous said...

romba nalla ezuthiyirukkiinga... pOy paarththuttu vanthu solREn

கருப்பன் (A) Sundar said...

பேசாம இந்தப்படத்துக்கே போயிருக்கலாமோ....

பீமா-வுல மாட்டி, சிக்கிச் சீரழிஞ்சது எனக்குத்தான தொரியும்...

Anonymous said...

மிகச்சரியான விமர்சனம். படம் கவிதை. இரண்டுமணி நேரத்திற்குள் முடிக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்.
சேரன் காட்சிகள் வந்தால் நானும் நடுக்கத்துடன் தான் பார்த்தேன். நல்லவேளையாக நம் சகிப்புதன்மையை அதிகம் சோதிக்கவில்லை. அவரை கையாண்ட இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.