Sunday, May 4, 2008

தரணி - விஜய் அடுத்து இணையும் "குண்டு" (கற்பனைக்)கதை ரெடி...

"சார் அடுத்த படத்துக்கு கதை ரெடி" என்ற தரணியை டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராகப் பார்க்கிறார் விஜய்.

"ண்ணா இந்தப் படத்துக்கே வயத்துல நெருப்பக் கட்டிக்கிட்டு உட்காந்திருக்கோம்.அதுக்குள்ள அடுத்த படமா???ஒரு முடிவோட தான் இருக்கீங்க போலிருக்கு..."

"சார் இது வேற மாதிரி இருக்கும்.கேளுங்க..."

"விஜய் தலையை இடதும், வலதுமாக ஆட்டி ம் என்கிறார்.தரணி, சம்மதம் கொடுத்துவிட்டார் என்று நினைத்து கதையை ஆரம்பிக்கிறார்".

"படத்த ஓப்பன் பண்ணவுடனேயே ஒரு பிரச்சினையைக் காட்டுறோம் சார்..."

"அது என்ன பிரச்சினை????"

"அது ஒரு பிரச்சினையே இல்லை சார்."

"இப்பத்தான் பிரச்சினைன்னு சொன்னீங்க..."

"அத சொல்லல சார்.பிரச்சினை ஒரு மாட்டேர இல்ல.ஏன்னா இன்ட்டர்வெல்க்கு 30 நிமிஷம் கழிச்சுத்தான் நீங்க பிரச்சினைக்கு உள்ளேயே போறீங்க..."

"அதுவரைக்கும்....."

"இப்படியெல்லாம் குறுக்க குறுக்க கேள்வி கேட்டுட்டு இருந்தீங்கன்ன பரதன்ட்ட சொல்லி இன்னொரு படத்துக்கு பூஜை போட சொல்லிருவேன்..."

"என்னது பரதனா???...அண்ணா நீங்க சொல்லுங்கன்னா..."

"படத்தோட பேரு குண்டு...இதுல நீங்க ஒரு கோலிக் குண்டு சாம்பியன்.இரண்டாவது சீன்ல பயங்கரமா ஒரு கோலிக்குண்டு மேட்சு நடக்குது..அதுல நீங்க ஜெயிக்கிறீங்க..."

விஜய்..மனதிற்குள்(ஏதோ IPL match ரேஞ்சுக்குப் பேசுறாரே)

"நீங்க ஜெயிச்சி கப் வாங்குறீங்க...ஸ்கீரன்ல உங்கள ப்ரீஸ் பண்ணி கதை,திரைக்கதை,இயக்கம் தரணின்னு போடுறோம்."

"ஆங்...இதுல மட்டும் தெளிவா இருங்க.."

"என்ன‌து???"

அண்ணா நீங்க‌ க‌தைய மேல‌ சொல்லுங்க‌ன்னா...

"விஜ‌ய் You are insulting me...அதான் சொல்லி முடிச்சிட்டேனே..."

"என்னது சொல்லி முடிச்சுட்டீங்களா?????"

"ஆமா..."

"இது 15 நிமிஷத்துக்குத்தான ஓடும்.மீதி 2 மணி நேரத்துக்கு..."

"வித்யாசாகர்ட்ட சொல்லி 6 பாட்டு வாங்கிட்டேன்.அப்புறம் காமெடிக்கு விவேக் கிட்ட சொல்லி பெருச்சாளி, வச்சுக்கிட்டு இருக்கிறது அப்படி இப்படின்னு ஏதாவது அசிங்கமா பேசச் சொல்லி சமாளிச்சுக்கலாம்..."

"அப்ப ஹீரோயினு..."

"விஜய் நீஙக 2 படம் என் கூட பண்ணியும் என் frequency க்கு வரல.திரிசா தான் ஹீரோயின்.அத அமெரிக்காவுல இருந்து நீங்க இழுத்துக்கிட்டு ஓடி வ‌றீங்க..."

"என்ன‌து அமெரிக்காவுல‌ இருந்தா???"

"ஆமா ம‌துரை முடிச்சாச்சு, ம‌லேசியா முடிச்சாச்சு...அடுத்து அமெரிக்கா தானே..."

"கிழிஞ்ச‌து..."

"அப்புற‌ம் ஒரு முக்கிய‌மான‌ விச‌ய‌ம்.உங்க‌ளோட‌ இன்ட்ரோ சாங்குக்கு மாள‌விகா கிடையாது.ந‌மீதா தான்."

"ஏன் ???"

"ஏன்னா இந்த‌ப் ப‌ட‌த்துலேயே ஏன் மாள‌விகாவுக்குப் ப‌திலா ந‌மீதாவ‌ போட‌ல‌ன்னு ஒருத்த‌ர் த‌க‌வ‌ல் அறியும் சட்ட‌த்தின் கீழ் கேள்வி கேட்டிருக்கிறார்."

விஜ‌ய் ம‌ய‌ங்கி விழுகிறார்.

க‌ட்டாய‌ பின்குறிப்பு..

இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது இல்லை.

8 comments:

Raja said...

இதுக்கு மாட்டப்போர அந்த இலுச்ச்சவாய Producer யாருன்னு சொல்லவே இல்லையே? என்னோட ஆசை விஜய்யே சொந்தமா தயாரிக்கணும் அப்பத்தான் அந்த வலி தெரியும்.

பிரேம்ஜி said...

:-)))))

செல்வம் said...

வாங்க ராஜா...தயாரிப்பாளர்களா கிடைக்க மாட்டாங்க.அதெல்லாம் கிடைப்பாங்க..

//என்னோட ஆசை விஜய்யே சொந்தமா தயாரிக்கணும் அப்பத்தான் அந்த வலி தெரியும்.//


சே..சே விஜய் தெளிவானவரு.அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு.

செல்வம் said...

வாங்க பிரேம்ஜி..நன்றி

Sen22 said...

//என்னோட ஆசை விஜய்யே சொந்தமா தயாரிக்கணும் அப்பத்தான் அந்த வலி தெரியும்.///

இதுதான் சார் கரெக்ட்...


Senthil,
Bangalore..

செல்வம் said...

வாங்க செந்தில்...வருகைக்கு நன்றி.

யாத்திரீகன் said...

sema kaandaagi irukeenga pola.. ithanai post-ah vijay-kuruvi topic-la :-))))

செல்வம் said...

appadiyellam onnum illa yaathreegan...summa thaan