"அஹம்பிரம்மாஸ்மி" என்று கத்திக்கொண்டு படம் நெடுக கஞ்சா இழுக்கும் ஒரு நாயகன், பார்வையற்ற பிச்சைக்காரியாக வரும் நாயகி(முக்கியமாக எல்லா படத்திலும் வரும் காதல் என்ற வஸ்துவே இருவருக்கும் இடையே இல்லை),குழந்தைகளையும்,ஊனமுற்றவர்களையும் மூலதனமாகப் போட்டு பிச்சைத்தொழில் நடத்தும் தொழிலதிப வில்லன் (இது மட்டும் ஏற்கனவே "வில்லன்" படத்தில் வந்தது)பிச்சைக்காரர்கள் பிச்சையெடுப்பது தவிர்த்த அவர்கள் வாழ்க்கை என்று யாருமே எடுக்காத யாருமே எடுக்க முடியாத ஒரு களத்தை ரணகளமாகக் (உண்மையிலேயே நேற்று திரையரங்கில் குழந்தை ஒன்று கதறிக்கொண்டிருந்தது)
கையாண்டிருக்கிறார்.
படத்தின் கதை:
ஜோசிய நம்பிக்கையில் காசியில் சிறுவயதாக இருக்கும் போது விட்ட தன் மகனைத் தேடி தென் தமிழகத்தில் இருந்து ஒரு பெரியவர் தன் மகளுடன் வருவதாகப் படம் ஆரம்பிக்கிறது.தன் மகனைக் காசியில் கால பைரவக் கூட்டத்தைச்சேர்ந்த ஒருவனாகப் (ஆர்யா) பார்த்து விக்கித்து போகிறார்.தலைமை சாமியின் உத்தரவைப் பெற்று ஆர்யா அவருடைய சொந்த ஊருக்கு வருகிறார்.ஊருக்கு வந்தாலும் தன் தாயிடமும், தங்கையிடமும் ஒட்டாமல் கால பைரவ வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறார்.
ஊரில் பிச்சைத்தொழிலைக் கொடூரமாகவும்,கோரமாகவும் நடத்தி வருகிறார் ஒருவர்.அவரிடம் வேறொரு கூட்டத்தைச் சேர்ந்த பாட்டுப் பாடி பிச்சையெடுக்கும் பூஜா வந்து சிக்குகிறார்.பூஜாவைப் பணத்திற்காக ஒருவரிடம் விற்க முயலும் போது வழக்கமான பாலாவின் கதாநாயகனால் வழக்கமான முறையில் அடிபட்டுச் சாகிறார்.
கடைசியில் பூஜா என்ன ஆனார் என்பதே கிளைமேக்ஸ்.(கடைசியில் நாம் என்ன ஆனோம் என்பது ஆண்டி கிளைமேக்ஸ் :((
ஆர்யாவிற்கு இப்படி ஒரு பாத்திரம் இனி அமையுமா? என்பது சந்தேகமே.ஆனால் என்ன ஆரம்பத்தில் அளவுக்கதிகமான ஓப்பனிங் கொடுத்து படம் முழுக்க கஞ்சா இழுக்க விட்டிருக்கிறார்கள்.அவ்வப்போது நானே கடவுள் என்று கத்துகிறார்.நீச பாஷையில் பேசாமல் தேவபாசையில் அடிக்கடி பேசுவதால் மொழிபெயர்க்க சிதம்பரம் கோயில் தீட்சிதர்களைக் கூட்டிக் கொண்டு போவது உத்தமம்.படத்தின் ஹீரோ இவர் என்று நினைத்தால் அது தவறு. மொத்தமே 10 காட்சிகளில் தான் வருவார் போலிருக்கிறது.கடைசியில் வில்லன்களைக் கொல்வதற்காகப் படம் நெடுக காத்திருந்தாற் போல் ஒரு உணர்வு.கெட்டப், உடற்மொழி அனைத்தும் ஓ.கே
அடுத்துப் பூஜா...நம் தமிழ்சினிமாவில் இப்படிப் பட்ட பாத்திரங்களையும் நடிப்பதற்குக் :கொஞ்ச்ம்..கொஞ்ச்ம்" ஆளிருப்பது ஆறுதல் அளிக்கிறது.என்ன மிகச்சிறந்த பாடகி என்று இவரைச் சொல்லிவிட்டு பழைய ஒரிஜினல் பாடல்களுக்கு வாயசைக்க விட்டுக் காமெடி பண்ணிவிட்டார்கள்.பூஜா பாடிய முறையிலேயே பாடினால் நான் கூட கண்ணே...கலைமானே பாட்டை நல்லபடியாக பாடுவேன்.ஆர்யாவிற்கு அட்வைஸ் செய்யும் போதும், உச்சக்கட்ட காட்சியின் போதும் மட்டும் சற்று படுத்துகிறார். மற்றபடி மிகச் சிறந்த,முயற்சி.
வில்லனாக வருபவர்...ராமராஜன் படத்தில் ஒருவர் வில்லனாக வருவாரே அவரை நினைவூட்டுகிறார்.தென்மாவட்டத்தமிழ் பேசி கொடுத்த கதாபாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்துள்ளார்.
முருகன் கதாபாத்திரம் ஏற்ற கிருஷ்ணமூர்த்தி, திருநங்கை கீர்த்தனா, பிச்சைக்காரர்களாக நடித்த நடிகர்கள், தமிழ்சினிமாவின் புது இன்ஸ்பெக்டர் (இவர் இன்னும் 50 படங்களிலாவது இதே கேரக்டரி வருவார் என்று நினைக்கிறேன்)என்று எல்லோரும் நன்றாகச் செய்துள்ளார்கள்.
ஆர்தர் வில்சன் கேமராவையும், சுரேஷஅர்ஸ் எடிட்டிங்கையும் கவனித்துள்ளார்கள்.
பழைய இளையராஜவை படம் முழுக்கத்தேடினாலும் கிடைக்கவில்லை.பிண்னணி இசையாக இருந்தாலும் சரி, பாடல் இசையாக இருந்தாலும் சரி மீண்டும் அந்த இளையராஜா கிடைத்து விடமாட்டாரா என்று நம்மை ஏங்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்."பிச்சைப்பாத்திரம்.." பாடல் மட்டும் டிபிக்கல் நவ இளையராஜ ஸ்டைல்.
ஜெயமோகன் நிறைய இடங்களில் (பூஜா அட்வைஸ் செய்வது,பூஜாவின் உச்சக்கட்ட காட்சி வசனம்) மொக்கையாக எழுதியிருந்தாலும்...(மலையாளத்தான்.../ஜட்ஜாக வருபவர்)என்று ஆங்காங்கே ஊசி குத்தும் வேலையை மட்டும் விடவில்லை.ஆங்காங்கே தெளிக்கப்பட்ட நகைச்சுவை வசனங்கள் மட்டுமே ஆறுதல் (அதிலும் ஜெயமோகனின் நகைச்சுவை சற்று பயப்படக்கூடியதே எம்ஜியார்...சிவாஜி குறித்து இவர் எழுதிய நகைச்சுவைக்கட்டுரைக்கு உலகமே வேறு மாதிரியாகச் சிரித்தது)
நம்மை மொத்தமாகப் போட்டு எடுத்தது பாலா தான். ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கவேண்டும் என்ற நோக்கத்தோடே எடுத்திருப்பது / படத்தில் எந்தவொரு அழகியல் உணர்ச்சியும் இல்லாதது / நிறைய தப்பாகச் சொல்லிக்கொடுப்பது (உச்சக்கட்ட காட்சி ஒரு உதாரணம்) / இவர் வியாபாரம் பண்ணவோ அல்லது கலைச்சேவை செய்யவோ நம் உணர்ச்சிகளை உபயோகிப்பது / சேர்க்கை சரியில்லாதது / திரைக்கதையில் தொடர்ச்சியின்மை / திரும்பத்திரும்ப அவர் படத்தில் இருந்தே எடுக்கப்படும் காட்சிகள் (எஸ்.ஏ.ராஜ்குமார் மாதிரி ஆகிவிடுவார் போலிருக்கிறது)இன்னும் நிறைய...
பாலா தமிழ்சினிமாவை நேசிக்கும்,சுவாசிக்கும், திறமைமிகுந்த ஒரு கடவுள்.ஆனால் இப்போது அக்கடவுள் சாபம் கொடுத்துவிட்டது. வரத்திற்காகக் காத்திருபோம்.
நான் கடவுள் பற்றிய முற்றிலும் நெகட்டிவ்வான விமர்சனம்...நாளை
9 comments:
அவர் மகளொட ஒரு டிச்கெட் எக்கிச்ராவா எடுத்து பொண்டாடியையும் கூடிகிட்டு காசிக்கு போயிருந்தா அரை மணி நெரதுல தப்பிச்சிருக்கலாம்....
\\நான் கடவுள் பற்றிய முற்றிலும் நெகட்டிவ்வான விமர்சனம்...நாளை\\
அப்போ இது பாசிட்டிவ்வான விமர்சனமா?. பாசிட்டிவ்லயே இவ்வளோ நெகடிவ் பாயிண்ட் இருந்தா? அதில எவ்வளோ இருக்கும்?
ஓ புரிஞ்சிடுச்சு. அதில நிறைகளா சொல்லப் போறீங்க.
அமீரகத்தின் இனிய வணக்கங்கள் பல.. வலைகளில் வலை விரித்து பிடித்ததில் கிடைத்த வலை ...இது.. என்னை பற்றி சொல்ல ஏதுமில்லை..ஆம் எங்கெல்லாம் போய் தேடி தெளிவடையனுமோ அப்படியெல்லாம் இருக்கின்றேன். தமிழ் சினிமா பார்த்து அதிக நாட்களாகி விட்டதால்... உங்கள் வலையில் நான் கடவுள் படிக்க வந்தேன்..பார்த்தேன்.. செல்கிறேன்...
அன்புடன் இளங்கோவன்,அமீரகம்.
செல்வம்... சாந்தி சாந்தி....
// காசிவிஸ்வநாதன் எடிட்டிங்கையும் //
சுரேஷ் அர்ஸ்
வாங்க முரளி.இப்படிக் கலாய்ப்பீங்கன்னு எதிர்பார்க்கல.
ஒரு விளம்பரம்.....
நன்றி இளங்கோவன்
விநோத் யாருங்க அது? சொல்லவேயில்ல
சாரி உணர்ச்சிவசப்பட்டுட்டேன். மாத்திட்டேன் சரவணக்குமார்.நன்றி
Post a Comment