Tuesday, March 17, 2009

விஜய்யின் கோபமும், நம்முடைய கோபமின்மையும்

டாக்டர் விஜயை நாம் ஓட்டாவிட்டாலும் அவரே அழகியதமிழ்மகன், குருவி, வில்லு என்று தன்னைத் தானே ஓட்டிக் கொள்ளும் சர்வ வல்லமை படைத்தவர். விஜய் மீது எப்போதும் வராத எரிச்சல் (வில்லு பார்த்தாலும் கூட வேட்டைக்காரனுக்குத் தயாராகவே உள்ளோம்) சமீபத்தில் அவர் கோககோலா
விளம்பரத்தில் எல்லோரையும் கூல் செய்ய கோககோலாவைத் தரும் விளம்பரத்தைப் பார்த்ததில் இருந்து ஏற்பட்டது.

முதன்முதலில் அவர் கோககோலா விளம்பரத்தில் ஆடிய போது அவர் படத்தின் ஓப்பனிங் சாங் "அச்சம் என்பது மடமையடா" இல்லை. அவர் கொடியும் காட்டப்படவில்லை. அவர் ஈழத்தமிழர்களுக்கு உண்ணாவிரதம் இருக்க வில்லை. ஆனால் இப்போது ....சற்று பயமாகத்தான் உள்ளது.

விஜய் எப்படியும் புதியஜனநாயகம், வினவு போன்ற கட்டுரைகளைப் படிக்கப் போவதில்லை. படித்தாலும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் போவதும் இல்லை. விழிப்புணர்வு போன்ற கருமம் எல்லாம் வந்து விட்டால் இப்படி "பிரஸ்மீட்டில் காட்டுக் கத்தல் கத்த முடியாதே!"

கோககோலா நிறுவனம் அந்த பிரஸ்மீட்டில் தன் குளிர்பானத்தைக் கொடுத்து டாக்டரைக் குளிர்வித்திருக்கலாம்.

நாம் இதற்கெல்லாம் கோபமின்மையை வெளிப்படுத்தும் வரை, அவர் தன் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருப்பார்.

மற்றொரு பயம் நம் மீடியாவைப் பார்த்து. விஜயைப் போற்றி புகழும் வேலையை செய்துவரும் ஜனநாயகத்தின்
தூண் இந்த மாதிரி விசயங்களில் கப்சிப்....

வாழ்வு குறித்த பயங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது........

1 comment:

அக்னி பார்வை said...

காதலுக்கு மரியாதை வந்த போது விஜையை மிகவும் பிடித்தது.. ஆனால் புகழ் ஏற ஏற அடக்கமாக இருப்பது போல் காட்டிக்கொண்டு உள்ளே அர்சியல் செய்ய தொடங்கிவிட்டார். விளம்பரத்திற்க்கு இலவசங்கள் கொடுப்பது, பஞ்ச் டைலாக் பேசுவது... இப்பொழுது இது வரை வந்து நின்றிருக்கிறது....

சரி செல்வம் அவர் சொன்ன இன்னொறை கவனித்தீரா, வில்லு படத்தில் தேவையில்லாத காட்சிகள் எதுவும் இல்லையாம்.
:)))))))))))))