Saturday, April 11, 2009

ஆனந்த தாண்டவம் - ‍ சுஜாதாவிற்கு அவமரியாதை

ஏற்கனவே பிரியா, கரையெல்லாம்செண்பகப்பூ, விக்ரம் என்றெல்லாம் எடுத்து சுஜாதாவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்ட தமிழ்சினிமா இன்று ஆனந்த தாண்டவம் எடுத்து நம்முடைய வயிற்றெரிச்சலையும் சேர்த்துக் கொட்டிக் கொண்டுள்ளது.

படத்தின் கதை தெரிய வேண்டுமானால் தயவு செய்து சிரமம் பார்க்காமல் "பிரிவோம் சந்திப்போம்" நாவலைப் படித்து விடுங்கள். ஏனெனில் படத்தைப் பார்த்தெல்லாம் ஒரு முடிவுக்கு வரமுடியாது.

ரஜினியாலேயே கணேஷ் கதாபாத்திரத்தை நடிக்க முடியாமல் பில்லா / ரங்கா ரேஞ்சிற்கு நடித்திருந்த‌ போது....பாவம் சித்தார்த் மட்டும் ரகு பாத்திரத்தை நடித்து விட முடியுமா என்ன? ஆனால் அவர் எதற்காக லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு
நடித்தார் என்று நேற்று இரவு முழுதும் தூங்காமல் யோசித்தும் விடை கிடைக்கவில்லை. நடிப்பா ? அப்படின்னா என்னப்பா ? எதுனா ரேசன் கடைல கலைஞர் படம் போட்டுக் கொடுக்கிறாங்களா என்று கேட்டுள்ளார்.

மதுமிதாவாக தமன்னா. கரையெல்லால் செண்பகப்பூ படத்தில் பொன்னியாக வந்து சிரிப்ரியா வந்து எப்படி கொடுமைப் படுத்தினாரோ அதைவிட ஜாஸ்தியாக கொடுமைப் படுத்தியிருக்கிறார் தமன்னா.

ரத்னாவாக ருக்மணி. ரகுவின் காதலைக் காதலித்து ரகுவையே கைப்பிடிக்கும் பாத்திரம்.

சார்லி, கிட்டி, கிருஷ்னா என்று நிறைய பேர் இருந்தும் யாரும் நம்மைக் காப்பாற்றவில்லை.

சுஜாதா வசனம் மட்டும் எழுதிய படங்களிலேயே இதை விட சிறப்பாக தன்னை வெளிப்படுத்தியிருப்பார். சுஜாதாவின் இக்கதையைத் தேர்வு செய்ததே சரியான சொதப்பல். நாவலின் எந்த பாத்திரத்தின் குணநலன்களும் நம்மை பாதிக்காத நிலையில் சுஜாதா தன் எழுத்தின் மூலம் மட்டுமே நம்மைப் பாதிப்படைய செய்யும் திறமை படைத்தவர். அதைக் காட்சிப்படுத்தும் போது வேறு எப்படி இருக்கும்? இபப்படித்தான் இருக்கும். அதிலும் மதுமிதாவின் குழந்தைத்தனத்தைக் காட்டுகிறேன் என்று சித்தார்த்தின் காதில் வந்து ஓ என்று கத்திய போதுநமக்கும் ஓ என்று அழ வேண்டும் என்பது போல் தோன்றியது.

ஜி.வி.பிரகாஷ் இப்படியே இசை அமைத்துக் கொண்டு போனால் இவர் இசைக்காகவே படம் ஓடாமல் போய்விடும் அபாயம் உள்ளது.

இயக்குநர் காந்திகிருஷ்னா இப்படம் எடுத்ததன் மூலம் நிறைய இளைஞர்களிடம் நம்பிக்கை விதையைத் தூவியுள்ளார். (இப்படியெல்லாம் எடுக்கிறாங்க...இதைவிட நல்லா நாம எடுக்கமாட்டோமா? )

மற்றபடி சுஜாதாவின் கதையை எடுத்தவர்களையும், இனி எடுக்கப்போகிறவர்களயும், அதையும் விடாமல் பார்க்கப் போகும் நம்மையும்

"பசித்த புலி தின்னட்டும்"

8 comments:

ttpian said...

அவசர அறிவிப்பு
பெரியார் மடம்,வீரமனி சுவாமிகளின்,சிறப்பு பூஜை...
சொனிஅ குடும்பத்தினர் ந்லம் வேண்டி...
சிறப்பு அழைப்பு...கருனனிதி குருக்கல்...
அனைவரும் வருக....அருல் ஆசி பெறுக....
கட்டளை விசாரனை
பெரியார் திடல்...பூஜை சங்க நிர்வாகிகல்!

அன்பேசிவம் said...

செல்வம் முந்திகிட்டிங்க செல்வம் முந்திகிட்டிங்க. நான் வயிறெரிஞ்சு சொல்றேன் இந்த பாவம் காந்தி கிருஷ்ணாவை சும்மா விடாது.

செல்வம் said...

வாங்க ttpian
ஒன்னுமே புரியல உலகத்துல...

செல்வம் said...

முரளி..மறக்க முடியாத காவியங்கள் பட்டியல்ல இதுவும் இடம் புடிச்சிருச்சு.... மாசம் ஒரு படம் மரண கடியா இருக்கனும்னு யாரும் சாபம் கீபம் கொடுத்துருக்காம்க்களான்னு தெரியல...

Boston Bala said...

---ஜி.வி.பிரகாஷ் இப்படியே இசை அமைத்துக் கொண்டு போனால் இவர் இசைக்காகவே படம் ஓடாமல் போய்விடும் அபாயம் உள்ளது.----

:) :))

செல்வம் said...

பாலா...ஸ்மைலிக்கும், ஸ்நாப்ஜட்ஜில் லிங்க் கொடுத்ததற்கும் நன்றி

Sakthi said...

இப்படீல்லாம் நான் என்னைக்கு எழுதுறது..! உங்களை போல் எனக்கு விஷயம் தெரியாது.. விஷயத்தை இப்பொழுது தான் படித்து தெரிந்து கொள்கிறேன்..!

Sakthi said...

இப்படீல்லாம் நான் என்னைக்கு எழுதுறது..! உங்களை போல் எனக்கு விஷயம் தெரியாது.. விஷயத்தை இப்பொழுது தான் படித்து தெரிந்து கொள்கிறேன்..!