Monday, January 11, 2010

கமலும், வைணவமும்....

கமல் கஷ்டப்பட்டுத் தன்னை நாத்திகர் என்று சொல்லி வந்தாலும் இஷ்டப்பட்டு சில விஷ(ய)ங்களைத் தன் படங்களின் மூலம் சொல்லி வந்துள்ளார்.

ஆதரவாக அவரது பின்வரும் 4 படங்களைக் காண்போம்.

காதலா..காத‌லா..
க‌ம‌ல் த‌மிழ்க்க‌ட‌வுளாம் முருக‌னின் வேட‌ம‌ணிந்து ந‌டித்த‌ காம‌டி.கம‌ல் கிருஷ்ணராக வேடமேற்று, செளந்தர்யா பாமாவாகவும்,ரம்பா ருக்மணியாகவும் நடித்திருந்தாலும் அக்காட்சியை அமைத்திருக்க முடியும். ஆனால் கதை விவாத‌த்தில் கலந்து கொண்ட அறிவுஜீவிகள் நாத்திகரான கமல் முருகனை வைத்துக் காமடி செய்தால் தான் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்று கமலை ஏமாற்றிவிட்டார்கள்.

அன்பே சிவம்...
இந்த கதையின் நாயகன் கம்யூனிசம் பேசும் நாத்திகனாக இருந்த போதிலும், வில்லன் "ஓம் நமோ நாராயாணாய" என்று சொல்லாமல்,"தென்னாடுடைய சிவனே போற்றி" என்று சொல்லும் சிவபக்தராய் அமைந்தது நாத்திகரான கமலே எதிர்பாராத விஷயம்.

பம்மல் கே சம்பந்தம்...
ராயபுரம் சிவன் போல் நடிக்கத் தெரிந்த கமல் என்ற நாத்திகருக்கு ராயபுரம் விஷ்ணு போல் நடிக்கத் தெரியாது.

தசாவதாரம்...
இப் படத்திற்கு வசனம் தேவையில்லை :-))

இது போக வால் துண்டாக "உன்னைப் போல் ஒருவன்" படத்தில் தீவிரவாதியாக இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள் இருக்க, கணிப்பொறி மேதையாக வரும் மாணவன் இந்து மதத்தைச் சார்ந்தவனாக‌ இருப்பது கமல் ஒரு மிகத் தெளிவான "நாத்திகர்" என்பதையே காட்டுகிறது.

"இதைய‌ல்லாம் பார்க்காதீர்க‌ள்...சினிமாவை சினிமாவாக‌ப் பாருங்க‌ள்" என்று கூறும் ந‌ண்ப‌ர்க‌ளுக்குப் ப‌தில்...

"சினிமாவை சினிமாவாக‌ எடுங்க‌ள்"

9 comments:

Anonymous said...

அதே போல ஒரு வைணவரை வில்லானாக (வக்கீல்) தேவர்மகன் படத்தில் காண்பிப்பார்

கிள்ளிவளவன் said...

ஆம் அவர் தன்னை நாதிக்கினாக காட்டியதை விட சைவ சமயத்தின் எதிர்பாளரை தான் காட்டிருக்கிறார்.

முரளிகுமார் பத்மநாபன் said...

ஏன்யா ரொம்ப நாளைக்கு பிறகு வறீரு வரும்போதே இப்படி குதர்க்கமா பேசிட்டுதான் வருவீயளோ?

வீட்டம்மா அடி சலிச்சிடுச்சு போல வாங்க வந்து மத்தவங்க கிட்டயும் அடியவாங்குங்க..

அக்னி பார்வை said...

//சினிமாவை சினிமாவாக‌ எடுங்க‌ள்"
///

ithu super.. vaanga thala rompa naala alee kaanam?

செல்வம் said...

வாங்க அனானி...தேவர் மகனுக்குப் பிந்திய பரிணாம வளர்ச்சின்னு சொல்லலாமா?

செல்வம் said...

வாங்க கிள்ளிவளவன்...நன்றி
***************************
வாங்க முரளி....நானும், மகேஷும் ஒரு இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.ஹி..ஹி.. அவன் பேச நான் கேட்டுக்கொண்டிருந்தேன். இன்று கை நடுங்கியதால் வலையேற்றினேன்.

***************************
வாங்க‌ விநோத்...க‌ல்யாண‌ வாழ்க்கை எப்ப‌டியுள்ள‌து.ம‌ன்னிக்க‌வும் உங்க‌ள் திரும‌ண‌த்திற்கு என்னால் வர இய‌ல‌வில்லை.கார‌ண‌ம் என‌க்கும் அன்று தான் திரும‌ண‌ம். :-))

Anonymous said...

useless writting.. To need to write somthing you are just scribbling.

Tamil Songs said...

"என்னை நாத்திகனென்று சொல்லாதீர்கள் அதற்கு முற்போக்குவாதி என்ற வேறு பெயருன்டு" என சொல்ல தெரிந்த கமலுக்கு நாத்திகனுக்கு "சைவ சமய எதிர்பாளன்" என மற்றொரு பெயரும் உண்டு (அவரை பொறுத்தவரை ) என சொல்ல மனம் இல்லையோ . உங்கள் கருத்துக்களை ஒரு தீவிர கமல்ஹாசன் விசிறியாக வரேவேற்கிறேன் ...

கண்மணி.............

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in