Wednesday, August 18, 2010

உமாசங்கருக்கு ஆதரவாக....


அறைக்குள் மிகவும் பாதுகாப்பாக அமர்ந்து வினவு போன்ற சமூக தளங்களைப் படித்து விட்டு,அநியாயங்களுக்கு எதிராக பின்னூட்டங்கள் போடக் கூட பயந்து, முன் எச்சரிக்கையாக யாரோ எடுத்த திரைப்படங்களில் மொக்கையாகக் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் என் போன்ற ஆட்கள் மத்தியில் சர்வ வல்லமை பொருந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் புரிகிறார் என்றால், உமாசங்கர் தான் உண்மையான கதாநாயகன்.

உமாசங்கரை அசால்ட்டாகத் தூக்கி எறியலாம் என்று நினைத்த அரசாங்கம் கூட, அவருடைய நெஞ்சுரத்தையும், அவருக்கு இருக்கும் ஆதரவையும் பார்த்து விட்டு “நாங்கள் ஒன்றும் பெரிய நடவடிக்கைகள் எடுக்க வில்லை. வெறும் தற்காலிகப் பணிநீக்கம் தான்” என்று இறங்கி வந்து அறிக்கை விட்டிருப்பதே அவருக்குக் கிடைத்த வெற்றி தான்.

தமிழகம் ஓரளவிற்கு முன்னேறியிருப்பதற்கான பல காரணங்களில் ஒன்று என்னைப் பொறுத்த வரை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் ஆட்சி மாற்றமும் தான்.அப்போது தான் இந்த அரசாங்கம் செய்த தவறுகளை அடுத்த அரசாங்கம் செய்ய ஓரளவிற்காவது பயப்படும்.

எண்ணற்ற இலவசத் திட்டங்களை அளித்திருந்தாலும் மின்வெட்டு, தொழிற்சுணக்கம், விலைவாசியேற்றம் என்று மக்களை எதிர்க்கட்சியை நோக்கித்தான் தள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறது ஆளும் திமுக அரசு .கோவை, திருச்சி என எதிர்க்கட்சிக்குக் கூடும் கூட்ட்மே இதற்கு சாட்சி.

இன்னும் உமாசங்கர் போன்ற நேர்மையான, நெஞ்சுரமிக்க அதிகாரிகளைக் காவு வாங்கி எதிர்க்கட்சியை நோக்கி மக்களை வேகமாகத் தள்ளிவிடும் போக்கைக் கைவிட்டால் நன்றாக இருக்கும்.

அன்புடன்

செல்வம்

5 comments:

அன்பேசிவம் said...

ungalin mana nilaiyai thelivaaka , thidamaaka munvaiththamaikku vaalththukkal.

Unknown said...

முன் எச்சரிக்கையாக யாரோ எடுத்த திரைப்படங்களில் மொக்கையாகக் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் என் போன்ற ஆட்கள் மத்தியில் சர்வ வல்லமை பொருந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் புரிகிறார் என்றால், உமாசங்கர் தான் உண்மையான கதாநாயகன்.

நீங்களும் ஹீரோதான் செல்வம்..!

Unknown said...

திருப்பூர் வலைப்பதிவர்களுக்கு வணக்கம்,

நாங்களும் வலைப்பூ(தமிழ் கூறும்) நல்லுலகத்தில்
அடியெடுத்து வைத்து விட்டோம்.

அலைப்பேசியில் ஆலோசனைகள் வழங்கிய வாய்ப்பாடி குமார், வெயிலான் ஆகியோர்க்கு நன்றிகள். (அறிமுக உபயம்:வா.மு.கோமு-வின் நண்பர் மகேந்திரன்)

தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம்.இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. உதவுங்கள்.

வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...
நன்றி..

அன்புடன்...
எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நல்லா இருக்கு!!

Rajakamal said...

very good