மிகைப்படுத்துதல் இருந்தாலும்,சுமார் 2 டசன் கதாபாத்திரங்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு குணாதிசியங்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு பின்புலம் என்று புகுந்து விளையாடியிருப்பார்கள்.
நடிகர்களின் நடிப்பு ஆகட்டும், கேமரா, பிண்ணணி இசை, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் சமாச்சாரங்கள் ஆகட்டும் ஒரு நேர்த்தி இருக்கும்.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக திரைக்கதையும், வசனங்களும் இருக்கும்.பிரம்மா என்பவர் எழுதி வந்தார்.இப்போது பார்த்தால் திடீரென அந்த நாடகத்தின் உயரதிகாரியின் பெயர் (ரமண கிரிவாசன் executive producer)வருகிறது.
ஏற்கனவே இயக்குநர் பிரபுகண்ணாவிற்குப் பதிலாக ராஜா என்பவரை மாற்றினார்கள்.நாடகம் நொண்டியடிக்கத் தொடங்கியது...
இப்போது கதாசிரியரையும் மாற்றி விட்டார்கள் .... பார்ப்போம் என்ன நடக்கிறது என்று??
(நாங்களும் ரிப்போர்ட்டர் ஆயிட்டோம்ல)