அப்பாவும் இதென்னடா வம்பாப் போச்சே என்று தவணை முறையில் ஒரு Black and White டி.வி. ஒன்று வாங்கிக் கொடுத்தார்கள். டி.வி வந்ததில் இருந்து நான் தான் Antenna Operator.டி.வி யை ஆண்டெனாவுடன் connect செய்து விட்டு On செய்தால் விதவிதமாக புள்ளிகள் மட்டும் தெரிந்தது.படம் வரவில்லை.என் தம்பி ஏதோ ஒன்று சொல்லி அம்மாவிடம் அடி வாங்கினான்.பிறகு எலக்டீரிசியனைக் கூப்பிட்டு வந்து காட்டினால் அவர் தென்னை மரம் அருகே இருப்பதால் Antenna உயரம் பத்த வில்லை என்றார்.2 தென்னை மர உயர Antenna வைத்த பிறகுதான் டி.வி யில் புள்ளிகள் மறைந்து சச்சு தெரிந்தார்.ஆம் முதலில் நங்கள் பார்த்த பாடல் "ரோஜா மலரே ராஜகுமாரி" தான்.
90 களின் ஆரம்பங்களில் cable t.v பழக்கத்தில் வந்து ஒரு நாளைக்கு 3 படங்கள் போட்டார்கள். எங்கள் வீட்டில் Cable connection கொடுக்காததால் மீண்டும் டி.வி.காரர் வீட்டு சன்னலை முற்றுகை இட்டோம்.அப்போது தான் சன் டி.வி. தனது ஒளிபரப்பு சேவையை தொடங்கியது.
இடையில் ஒரு நாள் நான் Antennaவை அங்கிட்டும், இங்கிட்டும் திருப்பி திருட்டுக் கேபிளில் பாசமலர் படம் தெரிந்த போது ஜான் பெயர்டு அடைந்த சந்தோசத்தை அடைந்தோம்.
பாசமலர் பற்றி பேசிப் பேசியே அப்பாவை cable t.v connection கொடுக்க சம்மதிக்க வைத்தோம்.
சன் டி.வி அப்போது பல புதுமைகளால் ஈர்த்தது."சுரேஷ் சக்ரவர்தியின் டிக்,டிக்,டிக் கேம் சோ,பதி சபாபதி","ஜேம்ஸ் வசந்தனின் வார்த்தை விளையாட்டு","ரபி பெர்னாட்டின் நேருக்கு நேர்","டி.கே.வி ராஜனின் சினிமா குவிஸ்", "சாமியர்களின் சண்டை","வீரப்பனின் பேட்டி","இந்திய தொலைக்காச்சிகளில் முதன் முறையாக அவர்கள் போட்ட படங்கள்", "பயணிகள் ரயில்", "இந்த வாரம்... என்று கிளப்பிய ஆர்வம்", "Functionsஇன் Live coverage", "தூரன் கந்தசாமியின் குரல், "ஜென்மம் திகில் நாடகம்", "மெகா சீரியல்கள் அறிமுகம்" என்று அனைத்தும் நினைவில் நிற்பவை.
ஆனால் இன்று அவர்கள் சுய பரிசோதணை செய்து கொள்ள வேண்டும்.வெறும் சீரியல்களையும், படங்களையும் மட்டும் நம்பக் கூடாது.சீரியல் போர் அடித்து விட்டது. படம் 28 ரூபாய்க்கு விளம்பரம் இல்லாமல் பார்க்க முடிகிறது.விஜய் டி.வி.யும் தவிர்க்க முடியாத கட்டத்தை அடைந்து உள்ளது.
நீங்கள் மஸ்தானா,மஸ்தானா பண்ணுவதர்க்குள் அவர்கள் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சிற்கு சென்று விட்டார்கள்.
எனவே கலக்க போவது யாருவை காபி அடித்து அசத்தப் போவது யாரு என்று பண்ணாமல், புதிதாக உங்கள் முத்திரையோடு Programmes கொடுத்தீர்களேயானால் நாங்கள் பார்ப்பதற்க்கு தாயராக உள்ளோம்.