"எங்களுக்குள் காதல் வராது , நட்பு மட்டுமே வாழ்க்கை முழுவதும் தொடரும்" என்ற நண்பர்களின் நம்பிக்கையையும், உறுதியையும் தகர்த்து அகிலிற்கும், தமன்னாவிற்கும் காதல் வருகிறது.
இது சரியா? தவறா? என்ற குழப்பம் இருவருக்கும் தீர்வதற்குள் அனைவரும் ஒரு பேருந்தில் கல்விச் சுற்றுலா செல்கிறார்கள்.இவர்கள் காதல் நண்பர்களுக்குத் தெரியவரும் வேளையில்....தியேட்டரில் நிசப்தம்.அனைவரும் கனத்த மனதுடன் வெளியே வருகின்றனர்.(அப்பாடா கிளைமேக்ஸ் என்னன்னு சொல்லல)
படத்தின் ஆரம்பத்தில் வரும் பஸ் பாடல் காட்சியிலேயே நம்மைக் கல்லூரி மூடிற்கு கொண்டு வந்து விடுகிறார் பாலாஜி சக்திவேல்.
படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இயல்பாகவே உலவ விட்டிருப்பது படத்தின் சிறப்பு.எல்லோரும் சினிமாத்தனமாக இல்லாமல் நிசத்தில் நாம் பார்க்கும் மனிதர்கள் போலவே இருக்கிறார்கள்.
அகிலும்,தமன்னாவும் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளார்கள். கயல்விழியாக வரும் பெண் பட்டய கிளப்பி உள்ளார்.குடும்ப நிலை உண்ர்ந்து படிப்பது, தப்பு செய்பவர்களின் சட்டையைப் பிடிப்பது, தமன்னா தன் காதல் பற்றி சொல்லும் போது அதைப் புரிந்து கொள்வது என அத்தனையும் அழகு.
ஆதிலட்சுமியாக வரும் பெண், சரவணணாக வரும் பையன் அகிலின் தங்கை, தமன்னாவை ஒரு தலையாக லவ் பன்னும் சீனியர் என அனைவரும் நம் நினைவில் நிற்பார்கள்.
ஒரே காட்சியில்,9 மாணவர்களின் குடும்ப கஷ்டங்களையும் உறுத்தாமல் காட்டியிருப்பது கவிதை.
இரட்டையர்களாக வந்து "ஏங்க நீங்க சொல்லுங்க? ஏன் நீங்க சொல்லக்கூடாதா" என்ற ஒரு டயலாக் மட்டும் வைத்துக் கொண்டு படம் முழுக்க வந்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்கள் இரண்டு பேர்.
பாலாஜி சக்திவேல் காட்சிகளால் கவிதை வடிக்கிறார் என்றால்,நா.முத்துக்குமார் கவிதைகளால் காட்சி அமைக்கிறார்.(சரியா? தவறா? பாடல் மிகச் சிறந்த உதாரணம்.)பாடல்கள் அத்தனையும் அருமை.
செழியனின் கேமரா இயல்பாக உறுத்தாமல் எல்லாவற்றையும் படம் பிடித்துள்ளது.
ஹைகோர்ட்டில் தூக்குத் தண்டணை உறுதியாகி உள்ள இந்த சூழலில், ஆந்திர அரசியல் போல் காட்டினாலும் அந்த சம்பவத்தை அழுத்தமாக காட்டியுள்ளது இயக்குநரின் துணிச்சல்.(ஐயையோ கிளைமேக்ஸ சொல்லிட்டேனா???)
இவ்வளவு இருந்தும் படம் சற்று மெதுவாக நகர்வது போன்ற உணர்வு.படத்தில் சில காட்சிகள் திரும்பத் திரும்ப வருகின்றன.(உ.ம் கயல்விழி கோபிப்பது, இரட்டையர்கள் காட்சி)
கதையும் ஏப்ரல் மாதத்தில்,பிரியாத வரம் வேண்டும் போன்ற கல்லூரிகளில் பார்த்தது தான்.(காதல் படத்தில மட்டும் கத புதுசோ??)
நம் உணர்ச்சிகளை வைத்து இவர்கள் வியாபாரம் செய்வது மட்டும் நெருடல்.
பரிந்துரை:
எல்லோரும் பார்க்கலாம்.
3 comments:
கிளைமாக்ஸ் சோகமாக இருக்க வேண்டும் என்பதற்க்காக இணைத்தது போல் இருந்தது :-(
கிளைமாக்ஸ் நிகழ்வை நேரில் பார்த்தது போல் இருந்தது.
படம் ரொம்ப மெதுவாக செல்கிறது.
ஓரிரு முறை பார்க்கலாம்.
நன்றி,
அமர்
வாங்க விக்னேஷ், ஸ்மைலிக்கு நன்றி
//கிளைமாக்ஸ் சோகமாக இருக்க வேண்டும் என்பதற்க்காக இணைத்தது போல் இருந்தது //
வழிமொழிகிறேன்.கருத்துக்கு நன்றி திரு.அமர்
Post a Comment