Tuesday, December 4, 2007

ஒன்பது ரூபாய் நோட்டு - விமர்சனம்

முதலில் கதை.

பத்திரக் கோட்டை கிராமத்தில் ஊர் மெச்ச வாழ்ந்து வரும் தம்பதிகள் மாதவபடையாச்சி,வேலாயி.அவர்களுக்கு 3 ஆண்குழந்தைகள்,2 பெண்குழந்தைகள்.விவசாயியாக இருக்கும் மாதவர் கொடையாளியாகவும் உள்ளார்.ஊர் மக்கள் பிரச்சினையை அவ்வப்போது பணம் கொடுத்தோ / கொடாமலோ தீர்த்து வைக்கிறார்.அவர் நண்பர் பாய்க்கு(நாசர்) தொழிலில் முன்னேற தம்பதிகள் இருவரும் முகம் சுளிக்காமல் பண உதவி செய்கிறார்கள்.அவரும் தோல் தொழில் வியாபாரம் ஆரம்பித்து முன்னேறுகிறார்.

பிள்ளைகள் வளர்கிறார்கள்.கல்யாணம் முடித்த முதல் இரண்டு பையன்களும் தங்கள் மனைவி மற்றும் மாமாவால் (நடன இயக்குநர் சிவசங்கர்)தூண்டப்பட்டு அப்பாவை எதிர்க்கிறார்கள்.(வழக்கமான தமிழ்சினிமா போலவே)

கடைசிப் பையன் ஊரில் துணி துவைக்கும் சாதியை சார்ந்த பெண்ணைக் காதலிக்கின்றான்.(வழக்கமான தமிழ்சினிமா போலவே)

இதனால் மனம் உடைந்த மாதவரும்,வேலாயியும் ஊரை விட்டே வெளியேறி ஆம்பூரில் இருக்கும் நாசரிடம் தஞ்சம் அடைகிறார்கள்.ஆடு மேய்க்கும் தொழிலை மேற்கொள்கிறார்கள்.

சில ஆண்டுகள் கழித்து கடைசி பிள்ளையை ஏதேச்சையாக பார்க்கும் மாதவர் பிள்ளை நிலை கண்டு வெதும்பி திரும்பி ஊருக்கே செல்ல முடிவு எடுக்கிறார்கள்.தீடீரென பாம்பால் தீண்டப் பட்டு வேலாயி இறந்துவிட ஊருக்குப் போகும் முடிவைக் கை விடுகிறார் மாதவர்.

நாசரும் உடல் நலிவுற்று பெங்களூரு சென்று விட,பிறகு நாசரின் உறவினர்களால் அவமானப்படுத்தப் பட்டு ஊருக்கே செல்கிறார்.அங்கு பிள்ளைகள் நிலை கண்டு மனம் வெறுத்து உயிர் விடுகிறார் மாதவர்.

சத்தியமா இதாங்க கதை.

பஸ் டிக்கெட்டிற்கு முழு பணம் இல்லாமல் பண்ருட்டி பஸ்ஸில் ஏறும் முதல் காட்சியிலேயே ஸ்கோர் செய்துவிடுகிறார் சத்தியராஜ்.திருடு போன பலாப்பழங்களைக் கண்டு பிடிப்பது, கால் மேல் கால் போட்டுத் தூங்குவது, கத்தும் குருவி என்னவென்று சரியாகச் சொல்வது, என மாதவராகவே வாழ்ந்து காட்டியுள்ளார்.விருதை மட்டும் நோக்கமாகக் கொண்டு நடித்தாரோ என்னவோ பல இடங்களில் இயல்பு மிஸ்ஸிங்.பத்திரக்கோட்டை சிலாங்கும் அங்கங்கே மிஸ்ஸிங்.

அர்ச்சனா எப்போதும் அழத் தயாராகவே உள்ளார்.முருகனையும், வாழுமுனி ஆண்டவனையும் அடிக்கடி கூப்பிட்டு நம்மைக் கடுப்பேற்றுகிறார்.

சிவசங்கர், ராமலிங்கமாக வருபவர், ராமலிங்கத்தின் காதலியாக வரும் பெண், அழகியில் "ஒளியிலே தெறிவது" பாட்டிற்கு வருவாரே அவர், அனைவரும் பாத்திரங்களுக்கு ஏற்ற கச்சிதமான தேர்வுகள்.

படத்தில் குறிப்பிடத் தகுந்த மற்றோர் அம்சம் எடிட்டிங். B.லெனின் விளையாடியுள்ளார்.காமிராவும் அழகாக உள்ளது. இசை சுமார்.பல பாடல்கள் எங்கோ கேட்டது போன்ற உணர்வு.

குறைகளே இல்லையா?? இருக்கிறது.அது இல்லாமல் எப்படி.

சத்தியராஜ்,அர்ச்சனா வீட்டை விட்டு வெளியேறக் காரணமாக சொல்லப்பட்டு இருப்பது
சரியான சப்பை.குடும்ப வன்முறை ஜாஸ்தி.யாராவது யாரையாவது அடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

படம் முழுக்க சோகம்.மனிதனின் சோகங்களைப் பதிவு செய்வது தான் நல்ல படம் என்ற கருத்தை எப்போது தான் மாற்றுவார்களோ?? தெரியவில்லை.

இதிலும் 12ஆம் வகுப்பு படிக்கும் பெண் காதலிக்கிறது.லிப் கிஸ் கொடுக்கிறது.எல்லாமும் செய்கிறது.ஸ்கூல் பசங்களைக் கொஞ்சம் படிக்க விடுங்கப்பா ப்ளீஸ்.

படம் ரொம்ப நீளம்.அந்த ஊர் ஸ்லாங் பாதி பேத்துக்கு வரவில்லை.இருந்தாலும் மதுரை,நெல்லை, தேனி கிராமங்களையே பார்த்து வந்த நமக்கு பத்திரக்கோட்டை சற்று புதிது தான்.

கடைசி கிளைமாக்ஸ் ஒரு நல்ல‌ சிறுகதை.வாழ்த்துக்கள் தங்கர்.

பரிந்துரை ‍- பார்க்கலாம்(எல்லாரும் அல்ல)

பின்குறிப்பு:(தியேட்ட‌ரில் ந‌ட‌ந்த‌து)

1)இந்த‌ப் ப‌ட‌ம் வேணாம்,வேணாம்னு சொன்னேன் கேட்டியா?? (இர‌ண்டு டீனேஜ்க‌ள்)

2)இவ்வ‌ள‌வு டிக்கெட் வாங்கி வ‌ச்சிருக்கு,ஒர்த்த‌னும் வ‌ர‌ மாட்டேங்கிரானுங்க‌ளே(பிளாக் டிக்கெட் விற்ப‌வ‌ர்)

17 comments:

Anonymous said...

Heroine is not Saranya....it's Archana

மஞ்சூர் ராசா said...

அதி புத்திசாலிகளாக தங்களை நினைத்துக்கொண்டிருப்பவர்கள் இப்படித்தான் படம் எடுப்பார்கள். ஆனால் முக்கியமான விசயங்களை கோட்டைவிட்டுவிடுவார்கள்.

Kasi Arumugam - காசி said...

செல்வம்,
உங்க தலைப்பை மட்டும் பாத்துட்டு நான் எழுத நினைத்து வைத்திருந்த சிலதை எழுதி விட்டு வந்து படிக்கிறேன். பல விசயங்கள் ஒத்துப் போகின்றன. அப்படின்னா, தங்கருக்கு இதுவும் பணம் பண்ணிக்கொடுக்கப்போறதில்லை!

Anonymous said...

Ellaaam Saringa saranya....intha padathil nadithi irupathaaaga neengal kandu pidithu sonnatharkU nandri..avar peyar archana enbathaaga ninaivu...
romba unarchi vasapaTTU ezhuthividuvathaaaa???

---Myilvannan

aadumadu said...

ஐயா, படம் முழுவதும் டாகுமெண்டரி தனம்ம். ஒரு மணிநேரத்துக்கு எடுத்திருந்தால் ஒ.கே. ஆனா, இரண்டரை மணி நேரம் தாங்க முடியலை சாமி.

//சரண்யா எப்போதும் அழத் தயாராகவே உள்ளார்??//
யோவ். அது சரண்யா இல்லையா.அர்ச்சனா. முதல்ல மாத்துங்க.

செல்வம் said...

சோரி சோரி அது அர்ச்சனாதான்.ஒரு உணர்ச்சி வசப்பட்டு டைப்பிட்டேன்.ஹீரோயின் பேரு தெரியல இவன்லாம் விமர்சனம் பண்ண வந்துட்டானு நீங்க சொல்றது ஹெட்போனிலே கேட்குது.

செல்வம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு மஞ்சூர் ராசா.நீங்க சொல்றது சரிதான்.அவரு நல்ல படம் எடுக்க ரொம்ப தூரம் போகனும் வாய் பேசாம.ஆனா அவரு போற வழி நல்ல வழி தான்.அதுக்கு அவர வாழ்த்துவோம்.

செல்வம் said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஆடுமாடு.படம் கொஞ்சம் நீளம் தான்.
மாத்திட்டேங்கய்யா

செல்வம் said...

வாங்க திரு.காசி, உங்க பதிவ படிச்சிட்டு அங்க என் கருத்த பதிவு செய்யுறேன்.

//அப்படின்னா, தங்கருக்கு இதுவும் பணம் பண்ணிக்கொடுக்கப்போறதில்லை//

எனக்கும் அப்ப‌டித்தான் தோணுது.பாப்போம்

பிரதாப் குமார் சி said...

என்னது...? குத்துப்பாட்டு, பறந்து பறந்து ஃபைட், வடிவேலு காமெடி, டபுள் மீனிங் டையலாக் இப்படி எதுவுமே இல்லையா?
அப்படின்னா தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்காத வார்த்தை ஒன்பது ரூபாய் நோட்டு.

செல்வம் said...

வாங்க திரு.பிரதாப்குமார்.கருத்துக்கு நன்றி

த‌மிழ‌முத‌ன் said...

இப்படதில் பல மகிழ்ச்சியான காட்சிகள் இருக்கும் போது சோகம் மட்டுமே இருக்குன்னு சொல்லியிருக்கீங்க? இது மனித சோகத்த சொல்லியிருக்குற படம் இல்ல, வாழ்க்கைய சொல்லியிருக்கு. முக்கிய காதாபாத்திரதில் நடித்த நடிகையின் பெயர் கூட தெரியாமல் விமர்சனம் எழுதியிருக்கிரீர்கள்.
நான் பார்த்த தியேட்ட‌ரில் ந‌ட‌ந்தது

1. வேலயியின் அழுகையை தவிர வேரு இடங்களில் யாரும் பேசவில்லை.
2. அப்பா அம்மா வ கூட்டிட்டு வந்து இன்னுமொரு முறை பார்க்கனும்னு பேசிகிட்டாங்க.

tamil said...

இது ஓரு நல்ல படம். விமர்சனம் பண்ற அளவுக்கு முதிர்ச்சி உங்க கிட் இல்ல. ஆனாலும் ...
உங்க தொல்ல தாங்க முடியலடா சாமி.

Kosi said...

Good review...but i dont understand why so many review that i read, praising this movie like anything.
Thangar tried to show so many incidents in one movie..thats the mistake.. at the end, what he tries to convey?. only Ilayaraja can do justice to this sort of movie...could have taken better... everyone tried to give their best..Sathyaraj and Archana done well.. This sort of movie comes once in a while..thangar should have put more effort..i feel, one "kathai" wasted...

Anonymous said...

THIS FILM IS VERY SUPER

PRIYA SAMBANDAN said...

hai macha this film is super ya

ச.சங்கர் said...

"பல பாடல்கள் எங்கோ கேட்டது போன்ற உணர்வு.""

படம் பாக்கலை..ஆனாலும்
"மார்கழியில் குளித்துப்பாரு குளுரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும் "
பாட்டு வித்தியாசமாகவும் கேட்க நல்லாவும் இருந்தது