அவர்கள் இருவரின் உறவுகுறித்த நையாண்டிகள் அக்கட்சி மேடைகளில் பலகாலமாக பேசப்பட்டாலும், சில வார்த்தைகளை பூடகமாகவே குறிப்பிடுவது வழக்கம். ஆனால் மிக பச்சையாக திருக்கடையூர் விவகாரம் குறித்து "வாலமீனுக்கும்,விலங்குமீனுக்கும்" என்றெல்லாம் வெற்றிகொண்டான் ரேஞ்சுக்கு எழுதியிருக்கிறார் லக்கி.
யாரோ மீது அவருக்கு ஏற்பட்டிருக்கும் அபிமானம் அவரது எழுத்தை தரமற்றதாக ஆக்கி வருகிறது என்பதை எப்போது தான் உணர்வாரோ? இந்த முறை தமிழ்மணத்தில் அவர் எழுதியுள்ள இடுகையை வாசிக்கும்போது ஒன்றுமே தோணவில்லை.
அதுமட்டுமல்லாமல் சம்பந்தமில்லாமல் அதே இடுகையில் "வாலமீனுக்கும்,விலங்குமீனுக்கும்" பாடலை லக்கி போட்டிருப்பது உச்சக்கட்ட ஆபாசம். லக்கியின் இந்த இடுகையை ஒரு சராசரி வாசகன் உடனடியாக அவர்கள் இருவரோடு இணைத்து தான் சிந்திப்பான். அவர்கள் இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் லக்கி அத்துமீறல் செய்திருக்கிறார் என்பதே தெளிவான உண்மையாகும்.
ஞாநி கிளப்பியது அவதூறா? அல்லது லக்கி இந்த கட்டுரையின் மூலம் கிளப்பியிருப்பது அவதூறா? என்பதை அக்கட்டுரை வாசித்த லட்சக்கணக்கான தமிழ்மணம் வாசகர்கள் அறியமுடியும்.
லக்கியின் கட்டுரையை எல்லோரும் வாசித்திருப்போம் என்பதால் சுட்டி கொடுக்கவில்லை.
குறிப்பு:
1)இது அப்பட்டமாக காப்பியடிக்கப்பட்ட லக்கியின் கும்மி ஸ்டைல்.என்னதான் எழுதினாலும் அவர் அளவிற்கு இல்லை என்பது நிதர்சனம்.
கடைசியாக கொசுறு கும்மி:
வலைப்பதிவுலகத்தின் ட்ரெண்ட் செட்டர்களில் ஒருவரான லக்கியின் புது ட்ரெண்ட்டிற்கு வாழ்த்துக்கள்.(ஒன்னும் தெரியாத பாப்பாக்களுக்கு...லக்கியின் பின்னூட்டங்களைப் பார்க்கவும்)
Wednesday, March 5, 2008
வாலமீனுக்கும்,விலங்குமீனுக்கும் - தமிழ்மணம் - லக்கிலுக் அவதூறு
Posted by
செல்வம்
at
5:46 AM
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment