பாடம் 1 :(எந்த படத்திற்கும் அதிக எதிர்பார்ப்போடு செல்லக்கூடாது)
சினிமாவில் சாதிக்கத்துடிக்கும் இரண்டு இளைஞர்கள்."என்ன செய்தாலும் சரி, நடிகனாக ஆகியே தீருவேன்" என்று பிரகாஷ்ராஜும்,"தரமான இயக்குநராகத்தான் ஆவேன்"என்று பிருத்விராஜும் சினிமா என்ற மாய உலகை சுற்றி சுற்றி வருகின்றனர்.
பிருத்வியின் கதையைத் திருடி ஹீரோவாகிறார் பிரகாஷ்.படமும் ஓடி உச்சநடிகராகிறார்.பிருத்விக்கு அவர் கதை திருடப்பட்டதால் இயக்குநராகும் வாய்ப்பு பரிபோகிறது.
இடையே நடிகையான கோபிகாவிற்கும்,பிருத்விக்கும் காதல்.கோபிகா தன் அண்ணணோடு சண்டை போட்டுக் கொண்டு பிருத்வியைத் தீடீரென மணம் முடிக்கிறார்.
"நடிகையின் கணவர்"என்ற சாயல் பிருத்வி மீது விழுந்ததும் அவர் சினிமா முயற்சியில் ஒரு தொய்வு ஏற்படுகிறது.இதை உணர்ந்து கோபிகா அவரை விட்டுப் பிரிகிறார்.
மனம் வெறுத்த பிருத்வி தன் கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டு பிரகாஷ்ராஜை வைத்து கமர்சியல் படம் ஒன்றை ஆரம்பிக்கிறார்.அதில் அவர் சந்திக்கும் பிரச்சினை என்ன என்பதே கிளைமாக்ஸ்.
பிரகாஷ்ராஜ் "நடிகன்" கதாபாத்திரத்தில் அருமையாக ஸ்கோர் செய்திருக்கிறார்.ஆரம்பக்காட்சிகளில் அலப்பறையாக ஆரம்பிக்கும் பிரகாஷ்,போக போக சுணங்கி விடுகிறார்.
பிருத்வி அநியாயத்திற்கு "Under Play"செய்திருக்கிறார்.தன் கதையை ஒருவன் திருடினாலும்,மனைவியே தன்னை விட்டுப் பிரிந்தாலும் ஒரே மாதிரியான ரியாக்சன்.படம் பார்ப்பவர் மனதில் எதுவும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
பாடம் 2:அதிகமான "Under play"வும் ஆபத்து.
M.S பாஸ்கர்,சரத்பாபு,சார்லி முஸ்தபாவாக வருபவர்,அனைவரும் தங்கள் அனுபவத்தை காட்டியிருக்கிறார்கள்.
வசனங்கள் படத்தின் மிகப் பெரிய பலம்.விஜி வசனங்களில் செலுத்திய கவனத்தை திரைக்கதையிலும் செலுத்தியிருக்கலாம்.
பாடம் 3 :நல்ல வசனங்கள் மட்டும் ஒரு படத்தை ஓட வைக்காது.
G.V பிரகாஷ் இசையில் ஒரு பாடல் O.K.
சன் டி.வி பாணியில் சொல்வதானால் வெள்ளித்திரை இன்னும் மின்னியிருக்காலாம்.
No comments:
Post a Comment