Friday, April 4, 2008

உற்சாகமான மனிதர்கள்...உற்சாகமான தருணங்கள்...வேறென்ன சொல்ல..(பதிவர் சந்திப்பு - 30/3/2008 கொஞ்சம் லேட்டான பார்வை).

தாழ்தளப் பேருந்தில்(Automatic Door)சென்றபடியால் காந்திசிலை சிக்னலில் இறங்க முடியாமல் கண்ணகி சிலை நிறுத்தத்தில் சென்று இறங்கினேன் :-((

ஆடி அசைந்து நான் செல்வதற்குள் கூட்டம் களைகட்டத் துவங்கியிருந்தது.

கூச்சத்தோடு என்னை அறிமுகம் செய்தவுடன் வினையூக்கி உங்கள் விமர்சனங்கள் படித்துள்ளேன்...தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கம் கொடுத்தார்.

பதிவர் நித்யகுமாரன் அருகில் அமர்ந்து அவருடன் பேசும் போது நானாகவே "ஹி..ஹி எனக்கு இது கொஞ்சம் புதுசு.இவ்வுலகிற்கு வந்து 6 மாசம் தான் ஆகிறது" என்று சொன்னேன்.அதற்கு அவர் "நான் வந்து 2 மாசம் தான் ஆகிறது..ஒன்றும் பிரச்சினை இல்லை"என்று பதிலிறுத்தார்.

"கூட்டத்திற்கு நம் ஆதர்ஷ நாயகன் வவ்வால் வந்திருக்கிறார்",என்ற வதந்தி கிளம்பிய போது,"ஒருவேளை அவரா இருக்குமோ..ஒருவேளை இவரா இருக்குமோ...ஒருவேளை அப்படி இருக்குமோ...ஒரு வேளை இப்படி இருக்குமோ என்றெல்லாம் குழம்பி,ஒருவேளை அது நானாகவே இருக்குமோ என்ற முடிவுக்கு வரும் அளவிற்குத் தெளிவாக இருந்தேன்.:-((

"This cat ம் Milk Drink மோ "என்றவாறு மூஞ்சி வைத்திருந்த குசும்பன் வழக்கம்போல் எல்லோரையும் வாரிக்கொண்டும்,வாரப்பட்டுக் கொண்டும் இருந்தார்.

அப்போது அங்கு வந்த டோண்டு சார் சுமார் 30 அடி உயரத்தில் குதித்து தான் ஒரு 65 வயது இளைஞர் என்று நிரூபித்தார்.(3 அடியை 30 அடி என்று எக்ஸாஸ்ஜிரேட் செய்வது சங்க காலத்து மரபு :-))

மா.சிவக்குமார் இணையத்தில் மட்டுமில்லை, விசைப்பலகையிலும் தமிழை ஏற்றியே தீர வேண்டும் என்று தமிழ் ஒட்டியையும்(ஸ்டிக்கர்),மென்பொருள் குறுந்தகடு ஒன்றையும் விநியோகித்தார்.

சுகுணாவிற்கும்,அதியமானிற்கும் உலகமயமாக்கல்,சந்தைப்பொருளாதாரம்,கோககோலா,மாப்பிள்ளை விநாயகர் சோடா கம்பெனி என்றெல்லாம் விவாதம் வந்த போது நான் "ஆத்தாடி !!!" என்று எதிர்திசைக்கு வந்து விட்டேன்.

எதிர்திசையில் லக்கி கலக்கிக் கொண்டிருந்தார்.பாலகுமாரன்,சாரு,ஜெயமோகன்,சுஜாதா,பாட்ஷா,முகவரி பட வசனங்கள்,பதிவுலகம் என்று அனைவரும் கலந்துகட்டி பேசியது அந்தக் காலத்து குமுதம் படிப்பது போல் இருந்தது.

வெங்கட் என்ற நண்பரோடு பேசிக்கொண்டிருந்த போது "சுஜாதாவைப் பிடிக்காதவர்கள் இருக்கலாம்...ஆனால் படிக்காதவர்கள் இருக்கமுடியாது"என்றெல்லாம் சுஜாதாவின் இரங்கல் கூட்டத்தில் பேசினார்கள் என்று சொன்னார்.

முர‌ளிக்க‌ண்ண‌ண்,ல‌க்கிலுக்,அதிஷா ஆகியோர் குழ‌ந்தைக‌ளுக்கான‌ ஒரு ரூபாய் புத்த‌க‌ம் வெளிக்கொண்டு வ‌ருவ‌து ப‌ற்றி பேசினார்க‌ள்.மிக நல்ல முயற்சி.

பார்த்த முதல் நாளே வா..செல்வம் என்று தோள் மீது கை வைத்து உரிமையோடு அழைத்துச் சென்ற பாலா,

வீட்டிற்கு வாங்க அங்க பழகலாம் என்று அன்போடு கூப்பிட்ட அதிஷா மற்றும் அவர் நண்பர்,

பெயர் சொன்னவுடன் "நீ தானா அது??" என்று கேட்ட வரவனை,

"ஐ.டி துறை,டெக்ஸ்டைல் துறை, ஈழத்தமிழர் பிரச்சினை",என்றெல்லாம் பேசிய நண்பர் பாரி,

இருட்டில் கூட நான் கூலிங்கிளாஸ் அணிவதை நீங்கள் எல்லோரும் பார்த்தே தீர வேண்டும் என்று அடம்பிடித்த அபிஅப்பா,

சாந்த சொரூபிகளாக காட்சியளித்த உண்மைத்தமிழன்,பைத்தியக்காரன்,சுந்தர்,ஆடுமாடு என வந்திருந்த அனைவரும்

உற்சாகமான மனிதர்கள்...உற்சாகமான தருணங்கள்..வேறென்ன சொல்ல...

அடுத்த சந்திப்பை ஆவலோடு எதிர்பார்த்து......

4 comments:

பேரரசன் said...

உற்சாகமான மனிதர்கள்...உற்சாகமான தருணங்கள்..வேறென்ன சொல்ல...

அடுத்த சந்திப்பை ஆவலோடு எதிர்பார்த்து......

நானும் தான்...

அதுதான் என்னோட முதல் சந்திப்பா இருக்கும்...

ஆவலுடன்

நித்யகுமாரன் said...

உற்சாகமான மனிதர்கள்...உற்சாகமான தருணங்கள்..வேறென்ன சொல்ல...

* * * * * * *

இது புதுசு கண்ணா புதுசு...

லேட்டான பார்வையும் கூரிய பார்வையாகவே உள்ளது.

அன்பு நித்யகுமாரன்

ஜிங்காரோ ஜமீன் said...

அது சரிங்ண்ணா.. ஞாயிறு பதிவர் சந்திப்பு பற்றி எப்போ எழுத போறீங்க?

செல்வம் said...

வாங்க அதிஷா....சாரி ஜிங்காரோ...எதுக்கு வம்பு?? ஜிங்காரோ@அதிஷா...

நீங்க ஏற்கனவே சந்திப்புக்கு வற்றதுக்கு முன்னாடியே கலாய்ச்சிட்டதால, நாங்க ஜகா வாங்கிக்கிறோம் தலைவா!!!!