Tuesday, April 8, 2008

யாரடி நீ மோகினி - திரை விமர்சனம்

தனுஷ் வேலைவெட்டி இல்லாத உருப்படாத இளைஞன்.அவருடைய பாசக்கார எதிரியான அப்பா ரகுவரன்.தீடீரென ஒரு நாள் வழியில் நயந்தாராவைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆகி அவர் வேலை பார்க்கும் மென்பொருள் நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்ந்துவிடுகிறார் தனுஷ்
:-)).தனக்குள் பற்றி எரியும் காதலை நயந்தாரவிடம் தனுஷ் சொல்ல "நோ" சொல்லிவிடுகிறார் நயன்.சிபாரிசுக்கு போகும் ரகுவரனையும் அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார்.ரகுவரன் இறந்துவிடுகிறார்.ம‌ன‌மாற்ற‌த்திற்காக‌ ந‌ண்ப‌ணின் திரும‌ண‌ம் ந‌ட‌க்கும் கிராம‌த்திற்குச் செல்கிறார் த‌னுஷ்.அங்கே ம‌ண‌ப்பெண் ந‌ய‌ன்....இடைவேளை.

ந‌ய‌னின் மிக‌ப் பெரிய‌ குடும்ப‌ம் த‌னுஷை ஏற்றுக் கொண்டார்க‌ளா?த‌னுஷ்,ந‌ய‌ன் ஜோடி இணைந்த‌தா என்ப‌து மீதிக்க‌தை.

என்ன‌ 3,4 த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ள் சேர்ந்து பார்த்தது போல் உள்ள‌தா? :-((

படம் முழுக்க இழையோடும் நகைச்சுவை படத்தின் மிகப்பெரிய பலம்.இந்த பழைய கதைக்கு செல்வராகவன் விறுவிறுப்பான திரைக்கதையும்,போரடிக்காத வசனங்களும் எழுதித் தந்துள்ளார்.

தனுஷ் பொல்லாதவனிற்கு பிறகு நடிப்பில் நல்ல முதிர்ச்சி.ஆனால் ஆங்காங்கே அவருடய‌ மாமனாரைக் காப்பியடிப்பது மட்டும் நெருடல்.

இப்ப‌ட‌த்தில் ந‌ய‌ந்தார‌வை ப‌ற்றி சொல்லாவிட்டால் புழ‌ல் சிறையில் தள்ளி விடுவார்க‌ள்.அவ்வ‌ள‌வு பாந்த‌மாக‌ இருக்கிறார்.ட‌ப்பிங் க‌லைஞ‌ரின் உத‌வியோடு ந‌ன்றாக‌ ந‌டிக்க‌வும் செய்துள்ளார்.

ர‌குவ‌ர‌ன் வ‌ழ‌க்கமான பிரெண்ட்லியான‌ அப்பா.ஆனால் வ‌ழ‌க்கமான‌ என்று சொல்ல‌ முடியாத‌ அள‌விற்கு பின்னியுள்ளார்.ப‌ட‌த்தில் அவ‌ர் இற‌க்கும் காட்சியில் ஏனோ க‌ண்க‌ளில் இருந்து த‌ண்ணீர் வ‌ந்த‌து.

த‌னுஷின் ந‌ண்ப‌ராக‌ ந‌டிப்ப‌வர், அலைபாயுதே ப‌ட‌த்தில் இருந்து த‌ன‌க்கு நிச்ச‌யிக்க‌ப்ப‌ட்ட‌ ஹீரோயினை ஹீரோவுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் வேலையை செய்து வ‌ருகிறார்.எப்போது தான் விடியுமோ பாவ‌ம் :-((

க‌ருணாஸ் ஒரு சீனில் ம‌ட்டும் சிரிக்க‌ வைத்து விட்டுப் பின் அவ்வ‌ப்போது த‌லையை ம‌ட்டும் காட்டுகிறார்.

பதினைந்து வயது பெண்ணின் காதல் எபிசோட் அபத்தம். அதிலும் அப்பெண்ணிற்கு முதலிரவுப் பாடல் கொடுத்ததெல்லாம் ஓவர்.என்ன.. முடிக்கும் போது மெச்சூராக முடித்து தங்கள் திறமையைக் காட்டியிருக்கிறார்கள்.கொடுமை..

முதல் பாதி விறுவிறுப்பு பின்பகுதியில் சற்று குறைவு தான்,

பாடல்கள் ந‌ன்றாக‌ உள்ள‌து.அத‌ற்காக‌ இப்ப‌டியா சொல்லிக்காம கொள்ளிக்காம‌ திடீர் திடீர்னு வ‌ர்றது.

ஜ‌வ‌ஹர் முத‌ல் ப‌ட‌ம் என்ற‌ சுவ‌டே தெரியாம‌ல் ந‌ன்கு இய‌க்கி உள்ளார்.

ப‌ரிந்துரை:

ஒரு முறை பார்க்கலாம்.

எச்சரிக்கை:

படத்தின் நாயகியின் குடும்பப் பிண்ணணி காரணமாக தமிழ்மணத்தில் டவுசர் கிழியும் வாய்ப்பு உள்ளது.:-))

18 comments:

ச்சின்னப் பையன் said...

எங்கள் இதய தெய்வத்தின் ( நயன்) ஒரு படம்கூட போடாமல் ஒரு விமர்சனமா??? இது கொஞ்சம் கூட நல்லாயில்லே!!!

செல்வம் said...

வாங்க ச்சின்னப்பையன்..வருகைக்கு நன்றி.ஹி.ஹி....படம் காட்டத் தெரியாது.வேற ஒன்னுமில்ல‌

Anonymous said...

//படத்தின் நாயகியின் குடும்பப் பிண்ணணி காரணமாக தமிழ்மணத்தில் டவுசர் கிழியும் வாய்ப்பு உள்ளது.:-))//

பு த செ வி

வால்பையன் said...

//எங்கள் இதய தெய்வத்தின் ( நயன்) ஒரு படம்கூட போடாமல் ஒரு விமர்சனமா??? இது கொஞ்சம் கூட நல்லாயில்லே!!!//

அதானே

வால்பையன்

கானா பிரபா said...

//த‌னுஷின் ந‌ண்ப‌ராக‌ ந‌டிப்ப‌வர், அலைபாயுதே ப‌ட‌த்தில் இருந்து த‌ன‌க்கு நிச்ச‌யிக்க‌ப்ப‌ட்ட‌ ஹீரோயினை ஹீரோவுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் வேலையை செய்து வ‌ருகிறார்.எப்போது தான் விடியுமோ பாவ‌ம் :-((//

;-))

kalakkal vimarsanam

செ. நாகராஜ் said...

அப்ப படம் பார்க்லாம்னு சொல்றீங்களா.

அதிஷா said...

so nice

செல்வம் said...

வாங்க அனானி...ஏற்கனவே கல்லூரி திரைப்படத்திற்கு கிழிந்த டவுசர் தான்.புதிதாக ஒன்றும் இல்லை.அது சரி எப்படி இப்படி குறி பார்த்து அடிக்கிறீங்க :-((

செல்வம் said...

வாங்க வால்பையன்...அதான் அப்ரூவர் ஆகிட்டேனே...

ச்சே...தமிழ்மணத்துல பசங்கெல்லாம் கெட்டு அலையிராங்கப்பா....:-(((

செல்வம் said...

வாங்க பிரபா....நன்றி

செல்வம் said...

வாங்க நாகராஜ்...ஒரு முறை தாராளமாகப் பார்க்கலாம்.

செல்வம் said...

வாங்க அதிஷா...நன்றி

சுகுணாதிவாகர் said...

நானும் செல்வராகவனை நினைத்து இப்படம் பார்த்து ஏமாந்தேன். தெலுங்கில் செல்வராகவன் இயக்கிய படத்தைப் பார்த்திருக்கிறீர்களா, அதன் பெயரென்ன?

செல்வம் said...

வாங்க சுகுணா..வருகைக்கு நன்றி.அந்தத் தெலுங்குப் படத்தின் பெயர்
"அடவரி மடலகு அர்த்தலே வெருளே".நானும் அதைப் பார்க்கவில்லை.

லக்கிலுக் said...

படம் மொக்கையாக இருந்தது. நகைச்சுவை வறட்சியும் கூட :-(

செல்வம் said...

வாங்க லக்கி...அப்படியா சொல்றீங்க.

சாரி..ல‌க்கி.கொஞ்ச‌ம் நாளா இந்த‌ப்ப‌க்க‌மே வ‌ர‌ல‌.அதான் தசாவதார‌ம் ப‌ட‌ம் மாதிரி க‌மெண்ட் ரீலீஸ் ப‌ண்ண லேட் ஆயிடுச்சு..

:-)))

Anonymous said...

ஒருவருடன திருமணம் நிச்சயிக்கட்ட பின்பு அடுத்தவன் மீது காதல் கொண்டலையும் நாயகி....

ஆகா ! அற்புதம்.....

இதெல்லாம் ஒரு கதையினு படமெடுக்க வந்தரானுக...

- அறவியன்

MP3 e MP4 said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the MP3 e MP4, I hope you enjoy. The address is http://mp3-mp4-brasil.blogspot.com. A hug.