குவாரியில் வில்லன்களால் அடிமைபடுத்தப் பட்டு இருக்கும் தந்தையையும்,மற்றவர்களையும் விஜய் காப்பாற்றுவது தான் கதை.
படம் ஆரம்பித்த முதல் 10 நிமிடங்களில் தரணி தூள் படத்தை ரீமேக் செய்துவிட்டாரோ??என்ற பயம் மனதில் எழுகிறது.திரிசாவை இழுத்துக் கொண்டு விஜய் ஓடும் காட்சிகளில் கில்லி தேவையில்லாமல் ஞாபகம் வந்து தொலைக்கிறது.(ஒரு படம் பார்த்தா பார்த்த அன்னிக்கே மறந்து போற சக்தியக் கொடு இறைவா!!!!!)
விஜய் ஒரு கமர்சியல் படத்திற்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்துள்ளார்.(பொண்ணுன்னா அடக்க ஒடுக்கமா இருக்கனும் என்ற அறிவுரை உட்பட).விஜயை சூப்பர்(காமெடி)மேனாக மாற்றியுள்ளார்கள்.வில்லன்கள் படம் முழுக்க சுட்டும் ஒரு குண்டு கூட மேலே படவில்லை.அடுத்த முறை சுடறதுக்கு நல்லா ட்ரெயினிங் எடுங்கப்பா...(ஹி..ஹி துப்பாக்கியைச் சொன்னேன்)
திரிசா...டிட்டோ....பலபடங்களில் செய்தது தான்.
விவேக் இன்னும் எத்தனை நாளுக்குத்தான் க்ராஸ் ஆகும் பெண்களை அசிங்கமாகப் பேசி காமெடி செய்வாரோ? அவருக்குத்தான் வெளிச்சம்.இந்தப் படத்தில் டபுள்மீனிங் தூக்கல் தான்.
வில்லன்களாக சுமன், ஆசிஷ்வித்யார்த்தி போன்றோர்.வில்லன்களாக அறிமுகமாகி காமெடியன்களாக முடிந்திருக்கிறார்கள்.
பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டன.அதுவும் அனுராதா ஸ்ரீராம் பாடியிருக்கும் மொழ..மொழன்னு பாட்டிற்கு விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது.வித்யாசாகர் பின்னியுள்ளார்.
பரதன் இல்லாத குறை வசனங்களில் தெரிகிறது.வெறும் பில்டப்புகள் படத்தின் முதல் வாரக் கலெக்சனுக்கு மட்டுமே உதவும் என்பதை வசனகர்த்தா உணர்வார் என நம்புவோம்.
கோபிநாத்தின் காமிரா படத்தைப் பிரம்மாண்டமாக காட்டியுள்ளது.
தரணியின் படங்களில் இருக்கும் புத்திசாலித்தனமான காட்சிகள் படத்தில் இல்லாதது பெறும் குறை.அதிலும் இரண்டாம் பகுதி முழுவதும் சண்டைகளால் நகர்கிறது.
சங்கர் எப்படி நாட்டைத் திருத்தும் கதைகளில் சிக்கிக் கொண்டாரோ அதுபோல் தரணியும் இந்த வகைக் கதைகளில் சிக்கிக் கொண்டாரோ என்று தோன்றுகிறது..
மொத்ததில் படம் பரவாயில்லை.ஆனால் கில்லி போல் இல்லை.:-((
7 comments:
மிக்க நன்றி நல்ல செய்திக்கு!
சிவா...
Thanks Siva
TOP SECRET REVEALED...
I got a NEWS now from the producer stating that, if he spend 20 crore in 10 days he will get 500 crores (like namma THALAIVAR's ARUNACHALAM) so he used the IDEA what THALAIVAR used in ARUNACHALAM (PRODUCING A FILM, SENTHIL AS HERO)
Sameway to WASTE 20 crores in 10 days, the only way is to PRODUCE a FILM IN WHICH "ANNAN" ILAYA THALAPATHY IS HERO.
PRODUCER WILL GET 500 CRORES in this week and the next movie will be with our THALA directed by GOWTHAM MENON.
உங்க விமர்சனம் வரும் வரை காத்திருந்தேன், அந்த சத்யராஜ் பாணி எழுத்துக்காக ;-)
கலக்கல்
//வித்யாசாகர் பின்னியுள்ளார்//
இது ஓவருங்கோ, அவர் எங்கே பின்னினார், தன்னுடைய பழையசோற்றையே கொடுத்தார்.
வாங்க அனானி.மேலான ரகசியங்களுக்கு நன்றி.(நம்ம மொழி பெயர்ப்பு கரெக்ட்டா)
நன்றி கானா பிரபா...
F.M Radio புண்ணியத்துல எல்லா பாட்டும் ஏற்கனவே ஹிட் ஆயிடுச்சே.
//இது ஓவருங்கோ, அவர் எங்கே பின்னினார், தன்னுடைய பழையசோற்றையே கொடுத்தார்.//
அவரு மட்டும் என்ன செய்வார் பாவம்.தூள், கில்லி மாதிரி பாட்டு வேணும்னு கேட்டிருப்பாங்க.
ஒரு சின்ன லாஜிக்...
இருட்டுக் கடை அல்வா மாதிரி வேணும்னு கேட்டா இருட்டுக்கடையில தான வாங்கி கொடுக்கனும்.:-))
padam parava illya.???
ada paaavi manusha
Post a Comment