Sunday, June 15, 2008

தசாவதாரம் ‍- திரை விமர்சனம்

உலகையே அழிக்கக் கூடிய ஒரு பயோ‍ வெப்பன் தீவிரவாதிகளின் கையில் கிடைக்க விடாமல் செய்யும் நாயகனின் முயற்சி என்ற ஜேம்ஸ்பாண்டு / ஜாக்கிசான் வகைப்படக் கதைதான்.

(கமல் சார் நீங்க மட்டும் தான் இங்கீலீசு படம் பாப்பீங்களா?? நாங்களும் பாப்போம்ல ‍ உ.ம் நம்பி பாத்திரம் ஓம் நமோ நாராயாணாய நமக என்று சொல்வது மெல்கிப்சன் "சுதந்திரம்" என்று கத்துவதைத் தேவையில்லாமல் நினைவூட்டுகிறது.)

இதை அப்படியே எடுத்தால் மும்பை எக்ஸ்பிரெஸ் / ஆளவந்தான் போன்ற வெற்றிப்பட வரிசையில் சேர்ந்துவிடும் என்பதால் பத்து அவதாரங்கள்,நிறைய அரசியல் என்று ஜிம்மிக்ஸ் காட்டியுள்ளார்.

முதலில் கமலின் உழைப்பு."வந்தோமா...இரண்டு பஞ்ச் டயலாக் பேசுனோமா...4 பாட்டுப் பாடுனமா என்று இல்லாமல் (சத்தியமா குருவி பத்தி சொல்லலீங்கோ)என்று இல்லாமல் தேவைக்கு அதிகமாகவே உழைத்துள்ளார்.லக்கிலுக் சொன்னது போல் தேவையில்லாத அவதாரங்களையும் எடுத்துள்ளார்.உ.ம் நெட்டைப் பாத்திரம்.

கமலைப் பார்த்து பார்த்து கடைசியில் பக்கத்து சீட்டில் உட்காந்திருப்பவர் கூட கமல் தானோ என்ற சந்தேகம் வருகிறது.இருந்தாலும் மனதில் நிற்கும் பாத்திரங்கள்...

1) பூவராகவன்
2) போலீஸ் அதிகாரி ‍(தெலுங்கு பேசுப‌வ‌ர்.)
3) வில்ல‌ன் க‌ம‌ல் ‍ (மேக்க‌ப் த‌விர்த்து)
4) நம்பி பாத்திரம்

அசின் நன்றாக செய்துள்ளார்.இருந்தாலும் மோசமான பாத்திரப் படைப்பு.எனக்கு விஜய் டி.வி நீயா...நானாவில் பேசிய "குறிப்பிட்ட சாதியில் பிறந்ததற்காகப் புண்ணியம் செய்த பெண்" தான் நினைவுக்கு வந்தார்.க‌டைசி சீனில் த‌மிழ்சினிமாவின் இல‌க்க‌ண‌ங்க‌ளுக்கு ஏற்ப‌ கம‌ல் மீது காத‌லும் வ‌ந்து விடுகிற‌து.

எல்லா சீனிலும் கமலே வியாபித்து இருப்பதால் மற்ற நடிகர்களின் முக்கியத்துவம் மிகவும் குறைந்து விடுகிறது.இதை கமல் எப்போது நிறுத்துவாரோ...தெரியவில்லை.இந்த படத்தில் அப்படி வந்து போனவர்களுள் முக்கியமானவர்கள்....கபிலன்,நாகேஷ்,கே.ஆர்.விஜயா,மல்லிகா ஷெராவத் போன்றோர்.

படத்தின் குறிப்பிடத் தகுந்த அம்சங்கள் ஒளிப்பதிவு, கிராபிக்ஸ், எடிட்டிங், சில மேக்கப்கள் போன்ற டெக்னிக்கல் சமாச்சாரங்கள் தான்.அசத்தியுள்ளார்கள்....

ப‌ட‌த்தின் வ‌ச‌ன‌ங்கள் சில இடங்களில் சுஜாதாவையும், சில இடங்களில் கிரேசி மோஹ‌னையும் நினைவூட்டுகிற‌து.எதுக்கு வ‌ம்பு என்று க‌ம‌ல் த‌ன் பெய‌ரைப் போட்டுக் கொண்டாரோ???(என்ன‌ கொடுமை சார் இது?)

ஹிமேஷ் இசையில் உலகநாயகனே பாடலும், கல்லை மட்டும் பார்த்தால் பாடலும் ஓ.கே.

கே.எஸ் ரவிக்குமார் தன்னால் ஹாலிவுட் ரேஞ்சிற்கு மசாலா படங்கள் :-(( எடுக்க முடியும் என்று நிரூபித்துள்ளார்.

உலகத்தரம் என்ற வியாதியின் காரணமாக ஹாலிவுட் கதையையே அடித்திருப்பதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், இது தமிழ்சினிமாவின் அடுத்தக் கட்ட முயற்சி தான் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழ்சினிமாவின் அடுத்தக் கட்ட முயற்சியைப் பார்க்க விரும்புபவர்கள் அனைவரும் இந்தத் திரைப்படத்திற்குள் தாராளமாக நுழையலாம்.எந்தவித எதிர் பார்ப்பும் இன்றி...

பின்குறிப்பு :

அடுத்த பதிவு...கடலையூர் என்ற கிராமத்து ர‌சிக‌ர் பார்வையில் இருந்து தசாவதாரம் விமர்சனம்...

என்ன‌ ப‌ன்ற‌து...இந்த‌ வார‌ம் த‌சாவதார‌ம் வாரம்னு ஆகிப்போச்சுல‌..அது ம‌ட்டுமில்லாம‌ல் சிவாஜி ப‌ட‌த்திற்கு வ‌ந்த‌தை விட‌ த‌சாவதார‌ம் ப‌ட‌த்திற்கு அதிக‌ப் ப‌திவுக‌ள் கொண்டு வ‌ற்ற‌துன்னு குல‌ தெய்வ‌ம் கோயில்ல‌ வ‌ச்சு ச‌த்திய‌ம் வேற‌ ப‌ண்ணியிருக்கோம்...

3 comments:

rapp said...

//இந்த‌ வார‌ம் த‌சாவதார‌ம் வாரம்னு ஆகிப்போச்சுல‌..அது ம‌ட்டுமில்லாம‌ல் சிவாஜி ப‌ட‌த்திற்கு வ‌ந்த‌தை விட‌ த‌சாவதார‌ம் ப‌ட‌த்திற்கு அதிக‌ப் ப‌திவுக‌ள் கொண்டு வ‌ற்ற‌துன்னு //இதெல்லாம் ஒண்ணும் நல்லதுக்கில்லீங்க. எங்க தல ஜே.கே. ரித்தீஷ் படம் நாயகன் மட்டும் வெளிவரட்டும், தமிழ்மணமே சும்மா அதிர்ந்துடும்ல!

உண்மைத்தமிழன் said...

//ப‌ட‌த்தின் வ‌ச‌ன‌ங்கள் சில இடங்களில் சுஜாதாவையும், சில இடங்களில் கிரேசி மோஹ‌னையும் நினைவூட்டுகிற‌து.எதுக்கு வ‌ம்பு என்று க‌ம‌ல் த‌ன் பெய‌ரைப் போட்டுக் கொண்டாரோ???(என்ன‌ கொடுமை சார் இது?)//

-)))))))))))))))

Athisha said...

ஹிஹி...

;-)

கமல் மீதான இந்த கொலைவெறியை நிறுத்திக்கோங்க அவ்ளோதான்

இல்லனா காலி பண்ணிருவோம்