Wednesday, July 9, 2008

கதம்பசாதம்-சுப்ரமணியபுரம்,இப்படிக்கு ரோஸ்,புதுப் பண்பலை

சுப்ரமணியபுரம்:

அடிச்சுப் பிடிச்சு விமர்சனம் எழுதலாம்னு பாத்தா தலைகள் எல்லாம் ஏற்கனவே எழுதிட்டதால, ஒரு விமர்சன சுருக்கம்.

ஏற‌த்தாழ‌ அனைவ‌ருமே அறிமுக‌ம்.இருந்தாலும் ப‌டத்தைப் போர் அடிக்காம‌ல் எடுத்துள்ளார்க‌ள்.எல்லோரும் போற்றும் "ராசாத்தி ச‌வுண்டு ச‌ர்வீஸ்", க‌ழுத்தைக் க‌ற‌ க‌ற‌வென‌ அறுக்கும் வ‌ன்முறை இவைகளைத் த‌விர்த்துவிட்டுப் பார்த்தால் உல‌க‌த் தர‌ம் என்று எல்லாம் ப‌ய‌முறுத்தாம‌ல் ஒரு ந‌ல்ல‌ ப‌ட‌த்தை த‌ந்துள்ளார்க‌ள்.

ம‌துரை....வாக்கிங் நேர‌க் கொலை போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ளையெல்லாம் ல‌க்கிலுக் த‌ன் விம‌ர்ச‌ன‌த்தில் த‌விர்த்த‌து ஏன்??? என்பது மில்லிய‌ன் யூரோ கேள்வி.

.............................................................................

"இப்ப‌டிக்கு ரோஸ்" அதிக‌ம் எதிர்பார்க்க‌ப்ப‌ட்டு என்னை ஏமாற்றிய‌ ஒரு நிக‌ழ்ச்சி.உண‌ர்ச்சிக‌ளை வைத்து வியாபார‌ம் செய்வ‌து போல் தோன்றும்.(உ.ம்.. அவ‌ர் தூக்கு போட்ட‌ போது உங்க‌ளுக்கு எப்ப‌டி இருந்துச்சு????).உண‌ர்ச்சிக‌ளை வைத்து வியாபார‌ம் செய்யும் ஒரு ப‌ழைய‌ தொழில் ம‌ட்டும் அனைவ‌ராலும் எதிர்க்க‌ப்ப‌டுவ‌து ஏன் என்று தெரிய‌வில்லை????.

அதில் க‌ட‌ந்த‌ நிக‌ழ்ச்சியில் பில்லிசூன்ய‌ம், மாந்ரீக‌ம் ப‌ற்றிய‌ ஒரு அறிமுக‌ம் கொடுத்தார்க‌ள்.நன்கு க‌வ‌னித்துப் பார்த்தால் பில்லிசூன்ய‌ம் செய்யும் ஜெய‌ராம‌ன் கையில் அனைத்து விர‌ல்க‌ளிலும் மோதிர‌ம் போட்டுள்ளார்.விக்ர‌வாண்டி ரவிச்ச‌ந்திர‌னும், சாஸ்திரிக‌ளும் கூட‌ செல்வ‌செழிப்போடுதான் உள்ளார்க‌ள்.பாம‌ர‌ன் சொன்ன‌து போல் "த‌மிழ்நாட்டிற்கு எந்த‌ சாமியும் தேவையில்லை...ஈ.வெ.ராம‌சாமியைத் த‌விர‌".
BTW பாமரன் குமுதத்தில் எழுதுவதில்லையே ஏன்...ஒருவேளை ஞாநிகளுக்கு மட்டுமே தெரியுமோ???

...............................................................................

சென்னையில் முத்தூட் நிறுவத்தினர் Chennai - Live என்ற பண்பலையை ஆரம்பித்துள்ளார்கள்.இதன் துவக்க நிகழ்ச்சி செவ்வாய் அன்று தாஜில் நடந்தது.இதன் சிறப்பம்சம் சென்னையின் முதல் Talk FM என்று சொன்னார்கள்.நிறைய விவாத நிகழ்ச்சிகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் நடத்தப்படும் என்று சொன்னார்கள்.வரவேற்போம்....

3 comments:

rapp said...

//பாமரன் குமுதத்தில் எழுதுவதில்லையே ஏன்...ஒருவேளை ஞாநிகளுக்கு மட்டுமே தெரியுமோ???//
எனக்கும் அதே சந்தேகம்தான், கேட்டா நெறைய புதுப் பகுதிகள் சேத்திருக்கோம்பாங்க

சரவணகுமரன் said...

பாமரன் பகுதி ஒரே மாதிரி இருந்திச்சிங்க. வார வாரம் எல்லாத்தையும் நக்கல் பண்ணிட்டு குதர்க்கமா பேசிட்டு. ஆரம்பத்துல பாமரன் கடிதம் எழுதும் போது புதுசா இருந்திச்சி. இப்பதான் நிறைய பேரு இதுக்கு இருக்காங்களே. ஒரு தீர்வோ, முடிவோ இல்லாததும் அவ்வகை கட்டுரையின் மைனஸ்.

Joe said...

theervaiyum, mudivaiyum solvadhu oru columnist-in velaiyalla. Pamaran was doing a good job, even though I didn't agree with some of his comments/columns, I did enjoy reading his articles in Kumudam.

I'm sure he will find a better place to write next!