Monday, August 4, 2008

குசேலன் - 2 வருகிறது ஜாக்கிரதை...........

இடம் : குசேலன் 2 டிஸ்கசன் நடக்கும் இடம்

நேரம் : நம்ம எல்லோருக்கும் கெட்ட நேரம்......

இருப்பவர்கள் : விஜய், பி.வாசு, வடிவேலு, பேரரசு.

வரமறுப்பவர்கள் : பசுபதி, நயந்தாரா, ரஜினி

வாசு: என்ன எல்லோரும் வந்தாச்சா????? என்ன இது பாத்ரூம்ல யாரோ அழுகிற மாதிரி இருக்கு.

(விஜய் பாத்ரூமில் குமுறிக் குமுறி அழுது கொண்டிருக்கிறார்)

வாசு: விஜய் என்ன இது ? இன்னும் இந்தப் பழக்கம் உங்கள விட்டுப் போகலையா????? ஏன் அழறீங்க?? அட சொல்லிட்டு அழுங்க....

விஜய்: அது அது .......பூ பூபூ..........எல்லோரும் குசேலன் பாத்துட்டு இதுக்குக் குருவியே பரவாயில்லன்னு சொல்றாங்க.......எம் படத்துக்கு இப்படி திடீர்னு ஒரு பெருமை வரும்னு நான் நினைக்கவேயில்லை.......அதான்.......பூபூபூ...

வடிவேலு : ஏய் எங்கள வச்சு ஒன்னும் காமெடி....கீமெடி பண்ணலியே.........

விஜய்: ண்ணா....நான் ஏங்னா காமெடி பண்ணனும்...அதான் வாசு சார் குசேலன் படத்துல 13 ரீலு காமெடியா பின்னியிருக்காராமே.........(தனக்குள்ளேயே சிரிக்கிறார்)

வாசு: ஆஹா குசேலன் 2 எடுக்கலாம்னு பாத்தா விடமாட்டாங்க போலியே.....தம்பி விஜய் போப்பா....போ..போ....பிரபுதேவா கூப்புடுறாரு பாரு.....வில்லு வராமலா போயிடும்....அப்ப வச்சுக்கிறேன்...

வடிவேலு எங்க யாரையும் காணோம்....பசுபதி எங்க????

வடிவேலு : அய்யா!!!!! அவரு சைக்கோ கில்லருக்குப் பயந்துக்கிட்டு சென்னைய விட்டே ஓடிப் போயிட்டேன்னு சொல்ல சொன்னாருய்யா??????

வாசு : அப்ப நயந்தாரா???

வடிவேலு : அத ஏன்யா கேட்குறீங்க.....ஏதோ நெட்ல கசமுசா படம் வந்திருக்குன்னுப் போய் பாத்தா நம்ம குசேலன் பட சீன் தான் ஓடுதாம்யா...அதான் அந்தப் பஞ்சாயத்துக்குப் போயிருக்காங்க.....

வாசு : சரி அவங்கள விடுங்க ......முதல்ல உங்க காமெடி பார்ட்ட சொல்லிற்றேன்.....குசேலன் 2 ல உங்க பொண்டாட்டிய நீங்க........

வடிவேலு : அய்யா....மறுபடியுமா????? நீங்க விடுங்கய்யா????நான் என்னோட டீம வச்சே எழுதிக்கிறேன்......நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய......

(ரஜினி வீட்டில்)

ரஜினி : சத்தி....சத்தி.... மறுபடியும் பிராப்ளம் ஸ்டார்ட் ஆயிடுச்சு.......வாசு குசேலன் 2 டிஸ்கசனுக்குக் கூப்பிடுறார்....

சத்தி : என்னது மறுபடியுமா???? தலைவா ஏற்கனவே எல்லோரும் எதோ எழவு விழுந்தா மாதிரி போன் மேலே போன்.....இன்னும் பார்ட் 2 வந்தா கிளிஞ்சுரும்.....

ரஜினி : அப்ப நான் வேணா...."பாடம் கத்துக்கிட்டேன்....இனிமே இப்படி நடக்காது"ன்னு விளக்கம் கொடுத்துரட்டுமா????

சத்தி : தலைவா.....தயவு செய்து கொஞ்ச நாளைக்கு நீங்க எந்த விளக்கமும் கொடுக்காதீங்க....இப்ப கொடுத்த விளக்கத்துக்கே என்ன பிச்சுப் புடுங்குறாங்க....அதனால பேசாம ஒரு எட்டுப் போய்ட்டு வந்துருங்க......

(மீண்டும் டிஸ்கசன் நடக்கும் இடம்)

பேரரசு : அண்ணே நான் எல்லாம் ரஜினிக்கு கதையே சொல்ல முடியாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன்.....ஆனா உங்க குசேலன் பாத்த பின்னாடி முடிவே பண்ணிட்டேன்...

வடிவேலு : என்னன்னு......

பேரரசு : ரஜினிய வச்சு பூஜை போட்டுறலாம்னு.....படம் பேரு "திருவேற்காடு". இது ஆடி மாசம் வேற‌. சும்மா கலெக்சன அள்ளிட்லாம்........

வடிவேலு : ஆஹா ஒரு குரூப்பாத்தான்யா அலயறாங்க......

ரஜினி பேரரசு நிற்பது போலவே காட்டிக் கொள்ளாமல் நேராக வாசுவிடம் வருகிறார்...பேரரசு ஏதோ முனுமுனுத்துக் கொண்டே சென்று விடுகிறார்.

ரஜினி : வாசு குசேலன் 2ன்னு ஒரு சப்ஜெக்ட் சொல்றேன்னீங்களே.....சொல்லுங்க.....

வாசு : "ஓப்பனிங் சீன்ல நான் உங்கள வச்சு அபூர்வராகங்கள் 2 சூட் பண்ணிக்கிட்டு இருக்கேன்"

வடிவேலு : இப்பத்தான் குசேலன் 2ன்னு சொன்னீங்க.....

வாசு : குறுக்க குறுக்க பேசுனீங்கன்னா இந்தப் படத்துல உங்களுக்கு 2 பொண்டாட்டின்னு கதை பண்ணிடுவேன் ஜாக்கிரதை..............

வடிவேலு : 2 வைபா.............

வாசு : அந்தக் காட்சில நீங்க ஒரு ஹெலிஹாப்ட்ரால முட்டிக் கதவ திறக்குறீங்க......

ரஜினி : என்னது ஹெலிஹாப்ட்ரல முட்டியா......

வாசு : அது ஒன்னும் பிரச்சினை இல்லை....சவுந்தர்யாகிட்ட சொல்லி ஆக்கர் ஸ்டுடியோல வச்சு சீ.ஜீ பண்ணிடலாம்....

வடிவேலு : யாரு ஆத்துல டால்பின் விட்டாங்களே அந்த அக்காங்களா????

(ரஜினி தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறார்))

கட்டாய டிஸ்கி :

இந்த சம்பவங்கள் கற்பனையே :-))

12 comments:

kanavukul oru ragasiam said...

NICE Selvam. en intha kolai veri ungaluku kuselan padam mela kuselan part 2 vimarsanam ezuthuringa,

i like your humour too ...
keep Rock

Regards

Chakku.

Badri Narayanan said...

sema comedy paa ...superrrrrrrrrrrrrr

செல்வம் said...

நன்றி....பத்ரி

செல்வம் said...

நன்றி ....சக்கு

ஸயீத் said...

சிரிக்க வைத்தது உங்கள் கற்பனை..

செல்வம் said...

நன்றி ஸயீத்

ராஜ நடராஜன் said...

குசேலன் 1 ஏ இன்னும் பார்க்கவிடாம பதிவர்கள் பயமுறுத்துறாங்க.அதுக்குள்ள 2 ஆ? நல்லவேளை ஜாக்கிரதை சொன்னதுக்கு நன்றி.

ஜோசப் பால்ராஜ் said...

குசேலன் படத்தோட ரெண்டாவது பகுதியெல்லாம் வந்தா , அந்த ஆண்டவணால கூட தமிழ் திரையுலக காப்பாத்த முடியாது.

Indian said...

//வாசு : அது ஒன்னும் பிரச்சினை இல்லை....சவுந்தர்யாகிட்ட சொல்லி ஆக்கர் ஸ்டுடியோல வச்சு சீ.ஜீ பண்ணிடலாம்....

வடிவேலு : யாரு ஆத்துல டால்பின் விட்டாங்களே அந்த அக்காங்களா????
//

சூப்பர்!!

ஸ்ரீதர் நாராயணன் said...

//யாரு ஆத்துல டால்பின் விட்டாங்களே அந்த அக்காங்களா????//

ஒரு சீன்ல தலை காட்டியிருப்பாங்க அக்கா:-))

ரஜினியை நண்பர்கள் மட்டும் அல்ல வாரிசுகளிடமிருந்தும் கூட காப்பாற்ற வேண்டியிருக்கும் போல :-))

ஜோ / Joe said...

:)))

Sen22 said...

//குசேலன் படத்தோட ரெண்டாவது பகுதியெல்லாம் வந்தா , அந்த ஆண்டவணால கூட தமிழ் திரையுலக காப்பாத்த முடியாது.//


Repeatttaiiiiii...

:))))