இளைய திலகத்தின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் என்ன கொடுமை சார் இது ?
காப்பியச்சுற்று:
முதலில் நடுவர் நெல்லைக் கண்ணணின் ஆசிரியத்தனம்.சூப்பர் சிங்கரில் எப்படி நடுவர்கள் ராகம் சரியில்லை.........தாளம் சரியில்லை..........சுதி சேரவில்லை என்று சிந்துபைரவி JKB அண்ணா ரேஞ்சுக்கு சீன் போடுகிறார்களோ அதற்கு சற்றும் குறையாமல் நெல்லைக் கண்ணன் கம்பர், வள்ளுவர் என்று சீன் போடுகிறார்.
தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை பேச்சுப்போட்டி / ஒப்புவித்தல் போட்டி நடத்தும் ஆசிரியரிடம் விட்டது தவறுதான். விளைவு இந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்று மனசு சொல்லுது.......பாக்காதேன்னு புத்தி சொல்லுது.......
தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்களாக வேண்டும் என்றால், கம்பராமாயணமும், திருக்குறளும் தெரிந்தால் தான் ஆக முடியும் என்றால் அந்தக் கொடுமையை எங்கு போய் சொல்வது?????
நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால் ஒன்று புரியும். திருவள்ளுவர் திருக்குறளை சொந்தமாக எழுதித்தான் இவ்வளவு புகழ் பெற்றாரே தவிர மற்ற இலக்கியங்களை மனனம் செய்து புகழ் பெறவில்லை.இலக்கியங்களைப் பிரதி எடுக்கும் வசதி இல்லாத அந்தக் காலத்தில் வேண்டுமானால் மனனம் செய்வது புத்திசாலித்தனமாக இருந்திருக்கலாம்.சாகாவரம் படைத்த இணையம் போன்ற விடயங்கள் வந்த இக்காலத்திலும் மனனம் செய்வதையே உயர்த்திப்பிடிக்கும் தமிழ்த் தொண்டர்களை என்னவென்று சொல்வது???
தமிழில் பேசும் சுற்று:
தமிழில் தற்போது வைக்கப்படும் பெயர்களில் ஒரு அழகுணர்ச்சியே இல்லாததைக் காணலாம்.
உ.ம்
1) Pen - எழுதுகோல் - Writing Instrument.
2) Computer - கணிணி - Calculating instrument.
3) Cellphone - கைபேசி
என்று தற்போது வைக்கப்பட்ட இப்பெயர்களை சங்க காலத்தில் இருந்து புழங்கும் வார்த்தைகளோடு ஒப்பிட்டால் நம் நிலைமை புரியும்.
புயல்களுக்கே அழகுணர்ச்சியோடு காத்ரீனா, ரீட்டா என்றெல்லாம் பெயர் வைக்கும் மற்றவர்களோடு ஒப்பிட்டால்,
தமிழில் பெயர் சூட்டும் விசயம் ஒரு தவறான திசையில் செல்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
இந்த விசயங்களைப் பற்றியெல்லாம் நடுவர்களாக வந்தவர்களே யோசித்து இதுவரை ஒன்றும் செய்யாத நிலையில் போட்டியில் பங்கேற்க வந்தவர்களைப் போட்டுஎடுத்தது எந்த விதத்தில் நியாயம் ? ? ?
பேச்சு என்பது ஒரு கலை. தமிழைத் தவறாகச் சந்தைப்படுத்தும் ஒரு விஷயம் இல்லை.
பாட்டுப் போட்டியில் நன்றாகப் பாட வேண்டுமே தவிர....பாடலின் சிறப்புகளைப் பற்றிப் பட்டியல் போடக்கூடாது.அதே போல் கம்பர் என்ன சொன்னார்??? இளங்கோ என்ன சொன்னார் என்பதை விட நாம் என்ன சொல்லப் போகிறோம் என்பதே முக்கியம்.
கம்பராமாயணத்தைப் பக்கம் பக்கமாகப் பேசும் கம்பன் கழக பேச்சாளர்களை விட, அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கும் கலைஞரின் பேச்சு சிறந்தது என்பதில் யாருக்கும் (ஜெயலலிதாவிற்குக் கூட) மாற்றுக்கருத்து இருக்காது.
தமிழை உயர்த்திப் பிடிக்கும் வேலையை விட்டுவிட்டு
1) பேசுபவரின் கருத்து என்ன ????? கருத்தின் உண்மை என்ன ????
2) அதை எவ்வளவு சுவையாக கேட்கும் வண்ணம் பேசுகிறார்?????
3) எவ்வளவு சுருக்கமாகப் பேசுகிறார்?????????
போன்ற விசயங்களைக் கருத்தில் கொண்டால் உண்மையிலேயே நமக்கு மிகச் சிறந்த அடுத்த தலைமுறை பேச்சாளர்கள் கிடைப்பார்கள்..........
முக்கியக் குறிப்பு:
நண்பனோடு பேசிக்கொண்டிருந்த போது கிடைத்த கருத்துக்கள் இவை.....ஹி.ஹி... நல்லா இருப்பதெல்லாம் அவன் சொன்னது....மொக்கையாக இருப்பதெல்லாம் நான் சொன்னது :-))
No comments:
Post a Comment