1.எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
திரையில் பார்த்த முதல் படம் அஞ்சலி. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு இயக்கம் என்ற எந்த எழவும் தெரியாத அந்த வயதில் பெரிய திரையில் படம் பார்த்ததே ஏதோ லீவு விட்ட சந்தோசத்தை ஏற்படுத்தியது.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
ராமன் தேடிய சீதை. சேரன் படத்திற்கு இனி போகலாமா?? வேண்டாமா??என்ற கேள்வி எழுப்பிய படம்.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
நேற்று கே.டிவியில் நந்தா பார்த்தேன். நடிப்பு, இயக்கம், வசனம், பாடல்கள், பிண்ணணி இசை, பாலா அனைத்தையும் தாண்டி கல்லூரிப் பருவத்தில் வந்த மறக்க முடியாத படம். எத்தனையோ முறை பார்த்த பின்பும், நேற்றும் பார்த்தேன்.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
தமிழ்சினிமாக்கள் என்று மாற்றிக்கொள்ளவும். காதலிக்க நேரமில்லையில் ஆரம்பித்து பொய் சொல்லப் போறோம் வரை ஏதோ ஒரு விதத்தில் தாக்கியும் ,சந்தோசப்படுத்தியும், துக்கப்படச் செய்தும் வருகிறது
5.அ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
பராசக்தி......நம் மக்கள்.....சண்டாளர்கள் என்ன படம் எடுக்கிறார்கள் என்று ஓடவிடாமல் செய்திருந்தால் சிவாஜியும், கலைஞரும் நமக்கு கிடைத்திருப்பார்களா என்பது சந்தேகமே.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
சமீபத்தில் தசாவதாரம். ஒரே காட்சியில் 4 கமல்கள் அசாதாரணமாக வருவதும், சுனாமிக்காட்சிகளும் சந்தோஷத்தைக் கொடுத்தது.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
வேறு என்ன வேலை...வாரமலர் எலீஸா தொடங்கி, ஆனந்தவிகடன் ராஜூமுருகன் வரை வாசித்து வந்திருக்கிறேன்.
7.தமிழ்ச்சினிமா இசை?
எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் ஆகியோர் மூத்த கலைஞர்கள் ஆகிவிட்ட நிலையில் , இன்றும் ஜேம்ஸ் வசந்தன்களும், விஜய் ஆண்டணிகளும் நம்மை மகிழ்ச்சிப் படுத்தி வருகிறார்கள்.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஆங்கிலத் திரைப்படங்கள் அவ்வப்போது பார்ப்பது உண்டு. டைட்டானிக், மெலீனா, பிளப்பர், பிரேவ்ஹார்ட், பைண்டிங் நிமோ,பைட்கிளப், தாரே சமீன் பர், லக்கான் போன்றவை.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நாம் என்ன நினைத்தாலும் ஆண்டிற்கு சுமார் 80 மோசமான படங்களும் 10 நல்ல படங்களும் வந்து கொண்டுதான் இருக்கும்.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
வேறு கலைகளில் ஆர்வம் அதிகமாகும். மக்கள் பிரச்சினை பற்றி சிறிது யோசிப்பார்கள். குடும்ப சண்டைகள் / உறவுகள் வளரும். நான் எழுதும் கொடுமையான விமர்சனப் பதிவுகள் நின்று போகும்.
குறிப்பு :
கேள்விகளுக்குப் பதில் எழுதி ரொம்ப காலம் ஆகிவிட்டதால் பதில்கள் சற்று மொக்கையாக இருப்பதற்கு நான் பொறுப்பல்ல.
தொடர் விளையாட்டில்,
1. சினிமா சிங்கம் முரளிகண்ணனையும்,
2. சிங்காரோ சமீன்
அவர்களையும் அழைக்கிறேன்.
7 comments:
Thanks for your invitation selvam.
I already played.
\\நாம் என்ன நினைத்தாலும் ஆண்டிற்கு சுமார் 80 மோசமான படங்களும் 10 நல்ல படங்களும் வந்து கொண்டுதான் இருக்கும்\\
nice comment
கண்ணை தொடசிக்கோங்க செல்வம்..அழப்புடாது....
சாரி முரளி....உங்கள் பதிவை படிக்கவில்லை. உடனே படித்து விடுகிறேன்.
..........................................................................................................................................
வருகைக்கு நன்றி விநோத்
//இந்தியப் பதிவுலகில் முதன்முறையாக..........என்னையும் இத்தொடர் விளையாட்டிற்கு விநோத் அழைத்த போது கண்களில் இருந்து கண்ணீர் தரதரவென வழிந்தது.//
அடப் பாவமே இதுக்கெல்லாமா அழறது????
அன்புடன் அருணா
வருகைக்கு நன்றி அருணா..
:-)))
இந்த நிலை கடந்த சில ஆண்டுகளாக மாறிவருகின்றாது என்று நினைக்கிறேன்.
ஹீரோயிசம் உச்சமாக காட்டப்பட்ட குருவி ஆழ்வார் உள்ளிட்ட படஙள் தோற்று, அது அறாவே இல்லாத நல்ல கடையம்மைபை மட்டுமே மையமாக கொண்டுவந்த சுப்ரமணியபுரம், சரோஜா, பொய் சொல்லப் போறோம், அலிபாபா போன்ற படங்கள் பலத்த கவனிப்பை பெற்றன
நீங்கள் படித்த புத்தகங்கள் பற்றியத் தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்..
உங்கள் பதிவுக்காக கத்திருக்கிறேன்..
Post a Comment