படம் பார்க்க வருபவர்களை கவுரவப் படுத்தி அனுப்பியிருக்கிறார்.
தந்தைக்கும், மகளுக்குமான பாசப்பிணைப்பு என்பது படம் பூசை போட்ட அன்றே எல்லோருக்கும் தெரிந்துவிட்டபோதும், அழகியதீயே, பொன்னியின்செல்வன் (இது மட்டும் சற்று மொக்கை), மொழி கொடுத்த தைரியத்தில் படத்திற்குச் சென்றால், மிக அழகாக திரைக்கதையில் கலக்கியுள்ளார்.
சம்பவங்களின் தொகுப்புதான் கதை என்பது முடிவாகிவிட்ட பிறகு, அந்த சம்பவங்கள் பார்ப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படுத்தாதவாறு தேர்ந்தெடுப்பதே மிகப்பெரிய கலை தான்.
பாசமிகு நவீன தந்தையாக பிரகாஷ்ராஜ் நடிப்பில் அசத்தியுள்ளார். மகளைப் பள்ளியில் சேர்க்க நேர்முகத்தேர்வு
க்குத் தயார் ஆவது, பனியனோடு பெருமையாகத் தெருவில் நடப்பது, கடைசியில் ஐஸ்வர்யா அழுகும் போது
மவுனமாக சிரிப்பது, தாயிடம் மட்டும் மகள் அத்துனை உண்மைகளையும் சொல்லிவிட்டாள் என்றபோது லுக்குவது
என கலந்துகட்டி அடித்துள்ளார். காமெடி செய்யும் போது மட்டும் நிறைய இடங்களில் ரோவன் அட்கின்சனின் பாதிப்பு தெரிவதைத் தவிர்த்திருக்கலாம். பிருத்விராஜ் மகள் அளவிற்கு உள்ள ஒரு குழந்தை "இந்த அங்கிள் ஏம்மா Mr.Bean மாதிரி பன்றாறு?" என்று தியேட்டரில் கேட்டது சற்று உறுத்தியது.
(சிறு தகவல் : புதுப்புது அர்த்தங்கள் படத்தில் ஜனகராஜ் காரிலேயே தயார் ஆவது போல் அமைக்கப்பட்ட காட்சி கூச்சநாச்சமே இல்லாமல் Mr.Bean ல் அடிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சிகரம் எப்படித்தான் ஒத்துக்கொண்டாரோ?? :-)))
ஐஸ்வர்யா அம்மாவாக நிறைவாக செய்துள்ளார். எங்கே இக்கதையை கெடுத்து விடுவாரோ என்ற பயத்தைப் போக்கியுள்ளார் திரிஷா.
குமரவேல் படத்தின் முக்கியமான கதாபாத்திரம். நாம் என்னதான் தமிழ்சினிமாவைக் கேவலப்படுத்திக் கொண்டிருந்தாலும் மிகச்சிறந்த திறமைசாலிகள் வந்து கொண்டுதான் இருப்பார்கள் என்பதற்கு இவர் ஒரு மிகச்சிறந்த உதாரணம். மனிதர் கலங்கவைத்தும், சிரிக்க வைத்தும் கலக்குகிறார்.
இது தவிர மனோபாலா, தலைவாசல் விஜய், கனேஷ் வெங்கட்ராம் என நினைவில் நிற்கும் பாத்திரங்கள். ராதா மோகன் எடுத்திருந்த சர்தார்ஜி பின்புலமும், வடக்கத்திய கதாபாத்திரங்களும் சென்டிமென்டிற்காக சேர்க்கப்பட்டு இருந்தாலும்
ஓவர்டோஸ்.
வசனகர்த்தா விஜி இல்லாத குறையைப் போக்கியுள்ளார்கள் நாராயணன் / சுப்பிரமணியன். ஊட்டி பின்புலத்தோடு கண்ணுக்கு குளிர்ச்சியாகப் படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிரீத்தா.
வித்யாசாகர், வைரமுத்து கூட்டணி மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்கள். "மகள் படுக்கைக்கு தனியறை புகுவது
பிரிவுக்கு ஒத்திகை" என்ற வரியில் வைரமுத்து திடீரென மீண்டும் பளீச்சிடுகிறார்.
ஆங்காங்கே தெரியும் நாடத்தன்மை, சென்டிமெண்ட் ஓவர்டோஸ் இவைகள் மட்டும் படத்தின் திருஷ்டிப் பரிகாரங்கள்.
மொத்தத்தில் சண்டை இல்லாமல், "Where is the Party tonight?" இல்லாமல், வீரவசனங்கள் இல்லாமல் இவ்வளவு நல்ல படம் எடுத்ததற்கே ராதாமோகனுக்கு குஷ்பு கோவிலுக்கு பக்கத்தில் ஒரு செங்கல்லாவது வைக்கலாம்.
பின்குறிப்பு:
பரங்கிமலை ஜோதியில் திருவண்ணாமலை படம் (சத்தியமாங்கோ.........) பார்க்கப் போக வேண்டிய கோஷ்டி ஒன்று இந்தப் படத்திற்கு வந்து அவர்கள் கழுத்தை அறுத்துக் கொண்டது மட்டுமில்லாமல் நம் கழுத்தையும் அறுத்தது. அவர்களிடம் சென்று அட்வைஸ் செய்யலாம் என்றெல்லாம் தோன்றியது.
பயமாக உள்ளது. எனக்கு வயசாயிடுச்சோஓஓஓஓஓ :-((
3 comments:
padam pakkalama vendama cdla pakka lama
வாங்க தல இத்தனை நாள் ஆளையே காணும்...உங்கள் பதிவை பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தேன்...
//பயமாக உள்ளது. எனக்கு வயசாயிடுச்சோஓஓஓஓஓ :-(///
இதெல்லாம் உங்களுக்கெ புரியனும்...
prakash rajin bayangara over acting!
pitchaikaarana veetu valakkum cinemathanam!
Trishavin nadippu!
ithappathiyalaam enda ezhluthala
Post a Comment