தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு வரும் பழிவாங்கல் கதையை, டாக்டர் விஜய் / நயந்தாராவின் எல்லை மீறிய கவர்ச்சி / வடிவேலுவின் மொக்கைக் காமெடி / பிரகாஷ்ராஜின் காமெடியான வில்லத்தனம் / பார்த்து சலித்த சென்டிமென்ட்ஸ் / வந்துவிடக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்த பிளாஷ்பேக் என்று படம் பார்க்க வரும் எல்லோரையும் ஒரு கை பார்த்துவிடுவது என்று எத்தனை நாள் நினைத்துக்கொண்டிருந்தீர்கள் பிரபுதேவா?
புதியகீதை படத்தில் ஆறு விரல்கள் வைத்து கெட்டப் மாற்றி நடித்தபிறகு இதில் தான் கெட்டப் மாற்றியுள்ளார் (மீசையை சற்று முறுக்கிவிட்டுள்ளார்) டாக்டர் விஜய். விஜய் சண்டை போடுகிறார், பாட்டுபாடுகிறார், நயந்தாராவுடன் காதல் என்ற பெயரில் ஏதோ செய்கிறார், வடிவேலுவுடன் காமெடி என்ற பெயரில் ஏதோ செய்கிறார். மொத்தத்தில் தியேட்டரில் பின்ட்ராப் சைலன்ஸ். யாருக்காக இதையெல்லாம் செய்கிறார் என்று தான் தெரியவில்லை.
நயந்தாரா படம் முழுக்க கவர்ச்சி காட்டுகிறார்.அதிலும் படத்தின் ஆரம்பக்காட்சிகள்......ஒரு வேளை திரையரங்கக் கோளாரா ? என்று தெரியவில்லை. நான் பார்த்தது பரங்கிமலை ஜோதியில்.
பிரகாஷ்ராஜின் வில்லத்தனம் பிட்டுப் படம் போல் ஆங்காங்கே சேர்க்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கும் போது வடிவேலு காட்சிகளை மிஞ்சிவிடுகிறது விஜய் -வில்லன்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள்.
வடிவேலு இந்திரலோகம் படத்திற்குப் பிறகு இதில் தான் இவ்வளவு சீரியஸாக மொக்கைப் போட்டுள்ளார். வரவர குசேலன், வில்லு என்று பயமுறுத்திக்கொண்டே வருகிறார்.
"போக்கிரி" ஓடியது என்பதற்காக அதில் வரும் பல காட்சிகளை ஜெராக்ஸ் எடுப்பது எந்தவிதத்தில் நியாயம்?
உ.ம் வடிவேலு ஹிட் பாடலுக்கு ஆடும் காமெடி நடனம், இன்ட்ரோ சாங்கில் பிரபுதேவா ஆடுவது...
தேவிசிரிபிரசாத்தின் பாடல்களுக்கு விஜய் படுத்து எழுந்து , படுத்து எழுந்து நடனமாடியுள்ளார். அதுக்கு?
ரவிவர்மன் கலர் கலராக ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிரபுதேவா இந்த "அபூர்வசகோதரர்கள்"காலத்திய கதையை இவ்வளவு ரிச்சாக எடுத்திருக்கத்தேவையில்லை.
மற்றபடி யாரும் அவசரப்பட்டு அவதிப்பட்டு துன்பப்பட்டு....................
7 comments:
அப்படியே என்னோட விமர்சனத்தையும் பாருங்க
குடுகுடுப்பை: வில்லு - ஒரு முன் பழமைத்துவ காவியம்.
ராணுவ உடையில் விஜய் எப்படி இருக்கிறார் என்று சொல்லவில்லையே?
வாங்க குடுகுடுப்பை...பதிவு அருமை
முரளி...ராணுவ உடையை விட மேஜர் மீசைதான் சூப்பர்.மற்றபடி விஜயகாந்த் படம் பார்த்த திருப்தி.
விஜய் ரசிகர்கள் மன்னிக்க வேண்டும். டாக்டரின் தனித்திறமையும் உள்ளது
பாட்டு,டான்ஸ் பத்தியெல்லாம் எழுதவே தோனலை.இப்படி ஒரு கதை உள்ள படத்துக்கு.
அருமையான விமர்சனம். உடனே படத்தை பாத்துடறேன்.. நன்றி..
இது ஒரு அப்பட்டமான தற்க்கொலை முயற்ச்சி
Post a Comment