Monday, June 14, 2010

செம்மொழி மாநாடு - ஏன் புறக்கணிக்கக் கூடாது ?

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வரும் சூன் 23 தொடங்கி சூன் 27 வரை கோவையில் நடைபெற உள்ளது. இதில் கணிணித் தமிழ் சார்பில் அமைக்கப்படும் அரங்கில் கலந்து கொள்ளலாம் என்று என் பெயரினைப் பதிவு செய்துள்ள நிலையில், இந்த மாநாட்டைப் புறக்கணிக்கச் சொல்லி சில நண்பர்கள் மின்னஞ்சல்களிலும், வலைப்பதிவுகளிலும் கோரிக்கை விடுத்து விவாதம் செய்து வருகின்றனர்.

வலையுலகம் சார்பில் ஏன் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று என் பார்வையிலிருந்து எழுதுகிறேன்.

தமிழ் வலையுலகம் ஆரம்பிக்கப்பட்டு 6 முதல் 7 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்னும் இது பரவலாகப் பலரைச் சென்றடையவில்லை என்பதே உண்மை. சில நாட்களுக்கு முன் ”பிரபல”
என்ற வார்த்தை குறித்த சர்ச்சை வெளியான போது மூத்த வலைப்பதிவாளர் ஒருவர் கூறியிருந்த கருத்துக்கள் இங்கு நோக்கத்தக்கது. “இந்த தமிழ் வலையுலகில் மொத்தம் 4000 பேர் தேறினாலே பெரிய விடயம்”.

ஆம்...அது உண்மைதான் என்பது “பிரபல” பதிவுகளுக்கு வரும் ஹிட்சுகளை வைத்துச் சொல்லிவிடலாம்.

இன்றைய தமிழ் ஊடகங்களின் நிலையையும் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஆகச் சிறந்தது என்று சொல்லப்படும் ஊடகம் கூட தமிழகத்தின் செல்லக்குரல் அல்கா அஜித்தா? இல்லை ரோஷனா? என்று மக்களைப் பைத்தியங்கள் ஆக்கிக் கொண்டுவரும் இச்சூழலில் மக்கள் கட்டாயமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு ஊடகம் இந்த வலையுலகம்.

அடுத்த பத்தாண்டுகளில் இணையம் இன்னும் பரவலாக்கப்பட்டு வீடு தோறும் இருக்கப் போகும் சூழ்நிலையில், மக்களுக்கு இப்போதே வலையுலகம் குறித்த அறிமுகம் அவசியம்.

தி.மு.க அரசு நடத்தப் போகும் இந்த மாநாடு போன்றதொரு மாநாட்டை வேறெந்த வகையிலும் நாம் (பதிவர்கள்) நடத்தி விட முடியாது.

நம் கொள்கைகளோ / இயக்கமோ / கட்சியோ / நிறுவனமோ வளர வேண்டுமென்றால் பொதுஜனத்தொடர்பு மிகவும் அவசியம். இம்மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம் அத்தகைய மிகப்பெரிய பொதுஜனத் தொடர்பைப் புறக்கணிக்கிறோம். மாநாட்டிற்கு வரப்போகும் ஆட்சியாளர்கள் முதல் அடி மட்டத் தொண்டன் வரை நம் வலையுலகம் பற்றித் தெரிந்து கொள்ளட்டும்.

மாநாட்டில் பங்கு பெறுவோம். வலையுலகில் நிறைந்து கிடக்கும் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்காரிய, ஈழ, மாவோயிஸ, திராவிட, ஆன்மிக, பெண்ணிய, விமர்சன, இலக்கிய, மோதலிய, சர்ச்சைகளிய எழுத்துக்கள் அனைத்தையும் பொதுஜனத்திடமும் கொண்டு போய் சேர்ப்போம்.

9 comments:

வே.நடனசபாபதி said...

நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சரியே.

☼ வெயிலான் said...

ம்.... ரைட்.... ரைட்.....

செல்வம் said...

நன்றி...திரு நடனசபாபதி.

.....................................

தல...இது என்ன மாதிரியான ரைட்..ரைட்?

ஒன்னுமே புரியல உலகத்துல!

முரளிகுமார் பத்மநாபன் said...

செல்வம், உங்கள் கருத்தோடு முழுவதுமாய் ஒத்துபோகிறேன். புறக்கணிக்ககூடிய எத்தனையோ விஷயங்களோடுதான் தினமும் பயணித்துக்கொண்டிருக்கிறோம். ஆக செம்மொழி மாநாட்டில் மகிழ்ச்சியோடு கலந்து கொள்வோம்.
:)

பேரரசன் said...

செல்வம், உங்கள் கருத்தோடு முழுவதுமாய் ஒத்துபோகிறேன். புறக்கணிக்ககூடிய எத்தனையோ விஷயங்களோடுதான் தினமும் பயணித்துக்கொண்டிருக்கிறோம். ஆக செம்மொழி மாநாட்டில் மகிழ்ச்சியோடு கலந்து கொள்வோம்.
:)

repeeteey ..!

செல்வம் said...

நன்றி...முரளி

நன்றி...செந்தில்

ராஜ நடராஜன் said...

//“இந்த தமிழ் வலையுலகில் மொத்தம் 4000 பேர் தேறினாலே பெரிய விடயம்”.//

இதற்கான காரணங்கள் என்ன?சென்ற சட்டமன்றத் தேர்தலில் கணினி VS தொலைக்காட்சிக்கான போட்டியில் தொலைக்காட்சி வென்றதும் ஒரு காரணம்.

பள்ளிகள்,கல்லூரிகளுக்கும்,தனிமனிதர்களுக்கும் கணினி அறிவை,உலகவியலை,பதிவுகளை கூட தரமானதாக நம்மை வளர்த்துக் கொள்ளும் பட்சத்தில் கொண்டு செல்வது எளிதே.ஆனால் சுவர் இல்லாமல் சித்திரம் என்பது

உங்களுக்கு கொடுக்கப்படும் மணித்துளிகளை விட தனிமனித பாராட்டுக்களே மாநாட்டை முன்னிறுத்தும்.

மொழியும்,உணர்வும் இயல்பாக வருவது.அதற்கான அடிப்படை தகுதிகளையே இழந்து விட்டு மாநாட்டை மா நாடா க்குவதில் வருத்தம் கொள்கிறேன்.

பரிசல்காரன் said...

வழிமொழிகிறேன்..

சு.சிவக்குமார். said...

நமக்கான வாய்ப்புக்களை எவ்விதத்திலும் தவறவிடக் கூடாது.எனவே உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.யாருக்குத் தெரியும்,மாநாட்டுக்கு அப்புறம் மாநாட்டின் ஒரே ஆறுதல் இந்த முயற்சிதான் என்று யாராவது பதிவு கூட எழுதலாம்.