மணிரத்னம் மௌனராகம், அஞ்சலி, தளபதி, நாயகன், அலைபாயுதே என்று எடுத்த வரையில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் தேசிய நீரோட்டத்தில் கலந்து இந்திய / உலக சந்தைகளுக்காகவும் சேர்த்து எடுக்கப்பட்ட ரோஜா, குரு, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களின் அரசியல் தான் உற்று நோக்கத்தக்கது.
ரோஜா படத்தில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகவும், இந்துவைக் கதாநாயகனாகவும் காட்டி மதசார்பின்மையைப்(!) போதிக்கத் துவங்கியதில் இருந்து தொடர்கிறது மணியின் அரசியல்.
குரு படத்தில் அம்பானியைக் கதாநாயகனாக்கி நம்முன் உலவவிட்டதற்கு சம்பளம் பிக் பிட்சர்ஸின் ராவணன்.
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ”அமுதா” வயதொத்த குழந்தைகள் கையில் துப்பாக்கியைக் கொடுத்து காட்சி அமைத்து நம்மிடையே சமாதானம் குறித்த வகுப்பும் எடுத்திருப்பார்.
ராவணன் திரைப்படத்தில், ராவணனைக் கதாநாயகனாக்கி, ராமனை வில்லனாக்கி, எம்.ஆர் ராதா, ஆர்.எஸ் மனோகருக்குப் பின்பு புரட்சிகலைஞராகி இருப்பார் நம் மணிரத்னம் என்று பார்த்தால்....
ராவணன் நல்லவனாகவே இருந்தாலும், அவன் அடுத்தவன் மனைவியைப் பார்த்தவுடன், அவள் சற்று வெள்ளையாக இருந்தவுடன் அவள் மீது காதல் வயப்படும் பலவீனன் என்பதை அழுத்தமாகக் காட்டியிருக்கிறார். இதைக் காட்டிய அளவிற்கு,ராவணன் நியாயமான விடயங்களுக்குத் தான் போராடுகிறான் என்பதை அழுத்தமாகக் காட்ட மணிக்கு தெரியாது என்றால் அதை நம்பத் தயாரில்லை.வெறும் மேட்டுக்குடி என்ற வார்த்தையை மட்டும் வைத்து ஒரு புரட்சியாளன் கதையை சொல்ல முடியும் என்று மணி நம்பியிருப்பதையும் நம்மால் நம்ப முடியவில்லை.
ராமன் என்னதான் மனைவி மீது சந்தேகப்பட்டாலும், அது ராவணனைப் பிடிக்க மேற்கொள்ளும் ராஜ தந்திரம் என்பதையும் மிக அழுத்தமாகக் காட்டியுள்ளார்.
அது மட்டுமில்லாமல், ராமபிரான் (கடவுள்) மீது வைக்கப்படும் விமர்சனமான மனைவியைச் சந்தேகப்படல் என்ற விடயத்தைக் கூட “சீதையும் மையல் கொள்வாள்” என்று மைல்டாகக் காட்டி ராம பக்தர்களையும் சந்தோசப்படுத்தியுள்ளார்.
இந்தியில் இந்த அரசியல்களுக்காகவும், தமிழில் மணிரத்னம் என்ற அறிவு ஜீவி பிராண்டிற்காகவும் நாம் கொடுக்கப்போகும் விலை சுமார் 120 முதல் 250 ஓவாக்கள்...
வாழ்க தமிழ்சினிமா..........
7 comments:
//கதை....(மல்லிச்சூ...அப்படி ஒன்றே விளம்பரத்தில் காணப்பட வில்லை)//
இந்த வரிகளைப்படித்தவுடன் என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. “கம்பக்ஷ்” என்று மணிரத்னத்தைத் திட்டவேண்டும் போல் தோன்றுகிறது.
naan 350 oova kutuththu paarthen
ஹலோ செல்வம், மணிரத்னத்தைவிட எப்போது பிரச்சனைக்குரிய தளங்களில் இயங்குவது நீர்தானும் ஓய்.....
வீராவிற்கு ராகினியின் தைரியத்தை பார்த்தே அவள் மீது மையல் வருகிறதென நினைக்கிறேன்.சரியா?
ராவணன் படத்தின் அரசியலை கண்டுபிடிச்சி சொன்ன மாதிரி, செம்மொழி மாநாட்டுக்கு போற வழியில, பெண் சிங்கத்தையும் பார்த்து அதன் அரசியல் என்னன்னும் சொன்னா ரொம்ப நல்லாருக்கும்
70 ரூவா கொடுத்தேன் செல்வம்! :)
நன்றி...செந்தாரப்பட்டி பெத்துசாமி
விநோத்... அப்ப நான் ரேட்டக் கொறச்சுதான் போட்டேனா...அவ்வ்வ்வ்வ்
முரளி...அடுத்தவன் மனைவி தைர்யமாக இருப்பது போல் நடித்தால்(ராகிணியே சொல்வது)காதல் வருமா? அது மட்டுமில்லாமல் உசிரே போகுது...உசிரே போகுது...ன்றது தைர்யத்தைப் பார்த்தா???
தல...70 அவுட்டா?. என்னைப் பொறுத்தவரை சிறிது நாட்கள் கழித்து 30 ஓவாவுக்கே பார்த்திருக்கலாம்
விசை...என் மேல என்ன கோபம் உங்களுக்கு???
Post a Comment