Saturday, May 14, 2011

அழகர்சாமியின் குதிரை



முதலிலேயே சொல்லி விடுகிறேன்.”அழகர்சாமியின் குதிரை” கதையை நாயகனாகக் கொண்டு எடுக்கப்பட்ட அற்புதமான முயற்சி.இந்த அழகான முயற்சியை விமர்சித்து நார் நாராகக் கிழிப்பது எனது நோக்கமல்ல.படம் குறித்த எனது புரிதல்களின் பகிர்தல்களே இந்தப் பதிவு.

வெண்ணிலா கபடிக்குழு போலவே திருவிழாவோடு துவங்குகிறது படம்.தேனி மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தின் தெய்வமாகிய அழகர்சாமியின் திருவிழாவை நடத்த முடியாமல் தவிக்கிறது ஊர்.”எப்படியாவது திருவிழாவை நடத்தி விடுங்கள்...அப்போது தான் ஊரில் மழை பெய்யும்” என்று ஊர் கோடாங்கி சாமி வந்து (வராமல்)சொல்லிவிட, ஊரும் பகீரத முயற்சி எடுக்கும் வேளையில் அழகர்சாமியின் குதிரை காணாமல் போகிறது.என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அப்புக்குட்டியின் குதிரை ஊருக்கு வந்து சேர்கிறது. அதன் பின் திருவிழா நடந்ததா???அப்புக்குட்டிக்கு குதிரை கிடைத்ததா???மழை வந்ததா??? என்பதே இரண்டாம் பகுதி.

படத்தின் முதல் பகுதி முழுதும் இழையோடும் இயல்பான நகைச்சுவை படத்தின் மிகப்பெரிய பலம். அதுவே இரண்டாம் பகுதியில் அந்த நகைச்சுவை இல்லாத போது ஜீரணிக்கவே முடியவில்லை.

”படத்தின் காலகட்டத்தை 1982 என அமைத்தது”, ”பல இடங்களில் மூட நம்பிக்கையை சாடியுள்ளது”,கதைக் களத்தையும், கதை மாந்தர்களையும் நம் மனதில் பதிய வைத்தது” என சுசீந்திரன் படத்தில் பல விடயங்களை அநாயசமாக செய்துள்ளார்.

படத்தில் நடித்துள்ள அத்துணை நடிகர்களும் குறிப்பிடத்தகுந்தவர்களே.

பாஸ்கர்சக்தியின் இயல்பான கதை, வசனம் படத்தின் மிகப் பெரிய பலம்.

தேனி ஈஸ்வர் தேனியை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

குதிரைக்குட்டி பாடலில் இளையராஜாவின் குரல் அட்டகாசம். ஆனால் மற்ற பாடல்களிலும், பின்னணி இசையிலும் வழக்கம் போலவே ஏமாற்றிவிட்டார்.”வெண்ணிலா கபடிக்குழு படத்தின் ”லேசா பறக்குது மனசு” என்ற பாடலுக்கு ஈடாக படத்தில் ஒரு பாடலும் இல்லை. இத்தனைக்கும் படத்தில் ஒரு தனி லவ் ட்ராக்கும் இருக்கிறது.

இடைவேளை வரை மேலே மேலே போகும் படம், இடைவேளைக்குப் பிறகு கீழே, கீழே இறங்குகிறது.

அப்புக்குட்டியின் பெண் பார்க்கும் படலம் + காதல், குதிரை போய் கெட்டவர்களையெல்லாம் அழிப்பது என இரண்டாம் பாதியில் நாடகமாக்கமாகி விட்டது.

படத்தின் விறுவிறுப்பைக் கூட்டி, நாடகமாக்கலையும் தவிர்த்திருந்தால் தமிழ்சினிமாவின் மைல்கல் சினிமாக்களில் ஒன்றாக இருந்திருக்கும் அழகர்சாமியின் குதிரை.

5 comments:

அன்பேசிவம் said...

the right view.....
செல்வம் பாராட்டப்பட வேண்டிய முயற்சி, ஆனால் பாராட்டப்படவேண்டிய படைப்பு அல்ல..

Hari har ashram said...

http://livewithpeacebyhindhuism.blogspot.com

சின்ன கண்ணன் said...

அருமையான விமர்சனம்

வலிப்போக்கன் said...

அதெப்படி, பிடிக்கலைன்னா பிரன்ஸ்சா
இருக்கிறது.கொஞசம் சொல்றிகளா?

செல்வம் said...

வலி போக்கன்...

நமக்கும்,யாருக்கும் எந்த வித வாய்க்கத் தகறாறோ இல்லாத போது நமக்குள் ஏற்படப் போவது வெறும் கருத்து மாறுபாடு தான். அதற்கும், நட்புக்கும் சம்பந்தம் இல்லை என்பதே பொருள்.

இந்த வரிகளையும் மதித்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு பொருள் கேட்கிறீங்களே. கண்ணுல இருந்து தண்ணியா வருது. :-)