முதலில் ஒரு சின்ன ஃபிலாஷ்ஃபேக்.நான் பிறந்த உடன் என்னுடைய பாட்டி என்னைக் கூட கேட்காமல் என் அப்பாவின் பெயரையே எனக்கும் வைத்து விட்டார்கள்.அம்மா கூப்பிட முடியாது என்பதால் செல்வம் என்றும் பெயர் வைத்தார்கள்(நாங்க எல்லாம் எப்படி பேரு வாங்கி இருக்கோம் பாத்தீங்கல).பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் போதும் M.Marimuthu@selvam என்றே கொடுத்து விட்டார்கள். கல்லூரியில் சேரும் போது தான் பிரச்சினையே(ஆமா பெரிய காவேரி பிரச்சினை).
அண்ணா பல்கலையில் computer application form ல் பெயர் entry செய்து கொடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.எப்படியோ எனது பெயரை M.Marimuthu A Selvam என்று அண்ணா பல்கலையில் register செய்து விட்டார்கள். எந்த ஆசிரியர் வந்து பாடம் எடுத்தாலும் என் பெயரை வைத்து காமெடி செய்த பிறகே பாடம் எடுக்க ஆரம்பிப்பார்கள்.நாளடைவில் அதுவே பழகிப் போனது.
இப்போது பாஸ்போர்ட் எடுக்க சென்ற போதும் பிரச்சினை தான்.பெயரை மாற்றி விட்டு வர சொல்லி விட்டார்கள்.எனவே பெயர் வைக்கும் போது எதற்கும் யோசித்து வையுங்கள்.இல்லை என்றால் உங்கள் பிள்ளைகளும் வந்து பதிவு போடும் ஜாக்கிரதை
1 comment:
அன்பின் செல்வம்
உண்மை உண்மை - பல ஆவணங்களில் பல பெயர்கள் - நிரூபிப்பதற்குள் படும் பாடு - அப்பப்பா
நலல் இடுகை நல்வாழ்த்துகள் செல்வம்
Post a Comment