தலைப்பப் பாத்த உடனே,இதென்னடா திருநெல்வேலிக்கே அல்வாவா?? அப்படினு தோணும்.இருந்தாலும் மனசில பட்டதை சொல்ல கடிதத்த விட சிறந்த ஊடகம் வேற இல்லனு தோணுது.
உங்கள எனக்கு ரொம்பப் புடிக்குங்க.ஏன்னா, கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம்னு ஒன்னு சொல்றாங்களே!!.அது இன்னும் இருக்கான்னு சந்தேகம் வரும் போது உங்க எழுத்துகளப் படிச்சாப் போதுமுங்க.படார்னு சந்தேகம் தீந்துடும்.
அப்புறம் உங்க நடை.அதாங்க எழுத்து நடை.சூப்பர் போங்க.உங்கள எழுத்துலக கவுண்டமணினே கூப்பிடலாம்.அவ்வளவு நக்கல்,அவ்வள்வு எள்ளல்.
எல்லாத்துக்கும் மேல உங்க தைரியம்.VIP கள எல்லோரும் இவரு நல்லவரு,தங்கமானவரு,தங்கமான தங்கமானவருனு மட்டும் சொல்லிட்டு இருக்கிற இந்த நாள்ல நீங்க குத்தங்களையும் சொல்றீங்க பாருங்க.simply great ங்க.
உங்க மேலயும் எனக்கு கொஞ்சம் விமர்சனங்கள் உண்டுங்க.பாருங்க நீங்க மணிரத்திணத்தப்
பத்தி, அவரு அஞ்சலி படத்துல E.T படத்தில இருந்து தட்டுனத மட்டும் சொல்றீங்க.ஆனா அந்தப் படத்தில 1 1/2 வயசு குழந்தைய ஏதோ ஃபுல் கதையையும் உள் வாங்கி நடிச்ச மாதிரி அந்தப் பிள்ளய நடிக்க வச்சிருப்பாரே, அத சொல்ல மாட்டேங்கிறீங்க.கெட்டத மட்டும் சொன்ன, நல்லத மட்டும் சொல்ற அவங்களுக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம்.
எல்லாத்தையும் படிக்கிறீங்க, கிழிக்கிறீங்க.ஆன பாருங்க குமுதத்தில எழுத்திலேயே பாடி காட்றாங்க.
ஒங்க கிட்ட ஒன்னே ஒன்னு தான் கேட்கிறேன்.திரையுலக தருமிக்கு கடிதம் எழுதும் போது நல்லது,கெட்டது ரெண்டையும் எழுதுங்க.இல்லையினா தருமியோட ஃபேமஸ் டயலாக் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியதுங்க.
எங்கள் தலைவர் கவுண்டமணியோட நக்கல் எல்லோருக்கும் பிடிக்குங்க.ஆனா அவரோட தனி நபர் தாக்குதல் தான் யாருக்கும் பிடிக்காது.இது உங்ளுக்கு தெரியாதது இல்ல.ஏன்னா உங்களுக்கும் தலைவரைப் பிடிக்கும்னு சொல்லி இருக்கீங்க.
நன்றிகளுடன்.
1 comment:
உங்க கேள்வியில அறியாமை/நியாயம் இருந்தாலும், பாமரனை வதைக்கிற நோக்கமில்லை. ஆனால், மணிரத்னம், சங்கர் போன்றோர் நல்ல இயக்குனர்களாக அறியப்பட்டாலும், அவர்களுடைய படங்களில் நுண்ணிய அரசியல் இருக்கு. சங்கர் இடஒதுக்கீட்டுக்கு எதிரா படம் எடுக்கிறார். மணிரத்னம் காஷ்மீரையும்,நாகாலந்தையும் ஏமாற்றி விழுங்கிய இந்திய தேசியத்தை ஆதரிக்கிறார். இவர்களால அவங்க சமூகத்துக்கு என்ன செய்ய இயலுமோ அதைச் செய்கிறார்கள். பாமரனால ஒரு எழுத்தாளனுக்குரிய கடப்பாட்டு உணர்வோடு அவைகளை அம்பலப்படுத்துகிறார். அவ்வளவே. 'மெய்ப்பொருள் காண்ப தறிவு'.
Post a Comment