Friday, October 26, 2007

குழந்தைகள்...ஜாக்கிரதை

காலையில் குளிப்பதற்காக பக்கெட், சோப், சகிதமாக குளியலறை நோக்கி சென்று கொண்டிருந்தேன்.பக்கத்து வீட்டுப் பாப்பா(வயது 1 1/4)குளித்து முடித்து விட்டு ஆடையில்லாமல் நின்று கொண்டிருந்தது.நான் என்னுடைய குழந்தைப் பருவத்திற்கே போய் "ஷேம்,ஷேம் பப்பி ஷேம்" என்று சொன்னேன்.

அது என்னைப் பார்த்து முறைத்து ..தா போடா என்று மூன்று எழுத்து சென்னைக் கெட்ட வார்த்தையில் திட்டியது.நானும் அதிர்ந்து சரி கௌதம் மேனன் படம் பார்த்து வளர்ந்த குழந்தையாய் இருக்கும் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.

சரி நமக்கு மட்டும் ஏன் இந்த அவமானம் என்று எண்ணிய போது,"மூஞ்சினே, மூஞ்சி சில மூஞ்சிகளைப் பார்த்தலே இப்படியெல்லாம் தோணும்" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு குளிப்பதற்க்குச் சென்றேன்.

குளித்து முடித்து விட்டு வரும் போது, பக்கத்து வீட்டு தாத்தா(வயது 65) அவரும் அதே வார்த்தையை அக்குழந்தையிடம் வாங்கியிருந்தார்.எங்கள் இருவர் காதிலும் same blood

குழந்தைகள் நம்மை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.நாம் தான் அது தெரியாமல் குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறோம்.

ஒரு கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

என் மீது ஊர்ந்து கொண்டிருந்த எறும்பை
நசுக்கிக் கொன்றேன்
குழந்தைகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

7 comments:

நட்டு said...

இதற்கு பின்னுட்டமிடுவதற்கு ஒரு கணம் யோசித்து தொடருகிறேன்.மறைந்து அல்லது மறைத்துப் பேசும் சில தமிழ் வார்த்தைகள் இப்பொழுதெல்லாம் பகிரங்கமாகவும்,வெட்க நாணங்கள் இன்றி திரைப்படம்,ஊடகம்,இன்னும் பதிவுகள் வரை வலம் வந்து கொண்டிருக்கின்றன.மொழிப்பற்றும் உணர்வும் ஒரு பக்கம்,கூடவே பொதுவில் சொல்லக்கூடாதவைகளுக்கு தீனியும் போட்டுக்கொண்டு தமிழ் தவள்கிறது.

செல்வம் said...

தங்களின் கருத்து முற்றிலும் சரியே.தற்போது ஊடகங்களில் இயல்பு என்ற போர்வையில் இது போன்ற வார்த்தைகள் தாரளமாகப் புழங்குகின்றன.ஊடகங்களின் வீச்சும் மிக அதிகமாய் உள்ளது.எனவே இந்தப் பிரச்சினை.வருகைக்கு நன்றி

முத்துலெட்சுமி said...

ஆறுமாசம் நிதானமாக கவனித்துவிட்டு வந்திருக்கீறீர்கள்ள் என்கிறீர்கள் ரொம்ப பொறுமைதான்.. கடவுள் கவனிக்கிறார் பயம் கொள்ளுங்கள் என்றுபெரியவர்கள் சொல்லி வளர்த்தார்கள் இன்று நான் நினைக்கிறேன். ..குழந்தைகள் கவனிக்கிறார்கள் கவனமாய் இருப்போம் என்று தான்.அவர்கள் கற்றுக்கொள்ள பல கதவுகளை விஞ்ஞானம் திறந்து விட்டிருக்கிறது அது தான்பயமே.

செல்வம் said...

வருகைக்கும்,கருத்துகளுக்கும் நன்றி முத்துலட்சுமி அவர்களே.

ரசிகன் said...

அடப்பாவமே....ஆனா எனக்கு என்னவோ அந்த தாத்தா திட்டு வாங்கியதுக்கு நீங்கதா காரணமின்னு தோணுது.
நீங்க ..அப்பவே அந்த பசங்களோட பெத்தவங்ககிட்ட புகார் செஞ்சாலோ..இல்லை கோபமா (நடித்தாவது) காட்டியிருந்தாக்கா ..(லேசா சும்மாங்காட்டியும் தாங்க.. நெஜமா ஓவரா செஞ்சி மாட்டிக்காதிங்க) ..நிச்சயம் பயந்திருப்பாய்ங்க.. அடுத்து மறுபடியும் மத்தவங்களுக்கு செய்ய யோசிப்பாங்க..இல்லையா..

செல்வம் said...

வருகைக்கு நன்றி ரசிகன் அவர்களே.நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் அதற்கு திட்டினால் புரியுமா என்று தெரியவில்லை.வயது 1 1/4 தான்.அதனால் தான் எனக்கு எதுவும் செய்யத் தோண்வில்லை.

பாஸ்கரன் said...

குழந்தைகள் நம்மிடம் இருந்தே நல்லதையும் தீயதையும் அறிகின்றனர். தவறு அவர்களது அல்ல வளக்கும் நம் சமூக அமைப்பினது.