Wednesday, November 28, 2007

அவ்வை சண்முகி‍ - தரமான நகைச்சுவைப் படமா???

முன்னுரை:

சாம்பார்வடை என்ற பதிவர் "நீங்கள் சிபாரிசு செய்யும் படங்கள்" என்று விடுத்திருந்த அழைப்பை ஏற்று பதிவர் கோவி.கண்ணண் அவர்கள் சிபாரிசு செய்த படங்களின் வரிசையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.அதில் அவர் குறிப்பிட்டு இருந்த படங்களில் அவ்வை சண்முகியும் ஒன்று.அக் கருத்தில் இருந்து மாறுபடுவதால் இந்தப் பதிவு.

கேள்வி‍ : அவ்வை சண்முகி தரமான நகைச்சுவைப் படமா?
என் பதில் : இல்லை.மூன்றாம் தரமான நகைச்சுவைப் படம்.

பொருள்:

படத்தைப் பற்றிக் கூறும் முன்பு படத்தின் கதையை சொல்ல வேண்டும் என்பது விதி.படத்தின் ஒன்லைன் "குழந்தைக்காக மனைவியை விட்டுப் பிரிந்த ஒரு ஆண்,பெண்ணாக மாறுவதால் ஏற்படும் குழப்பங்கள்".நன்றாகத் தான் உள்ளது(மிஸஸ் டவுட் பயரில் இருந்து சுட்டது ஆச்சே)

ஆனால் பட‌த்தை எடுத்திருக்கும் வித‌ம்.முழுக்க முழுக்க‌ ஆபாச‌ம்.இர‌ட்டை அர்த்த வ‌ச‌ன‌ங்க‌ளையும்,விர‌ச‌மான காட்சிஅமைப்புக‌ளாலும் ம‌ட்டுமே காட்சிக‌ளை நக‌ர்த்தி இருப்பார்க‌ள்.

தான் பெண்ணல்ல‌ ,ஆண் என்று மீனாவிற்கு க‌ம‌ல் சொல்லும் உச்சக் கட்ட‌ காட்சி ஒரு உச்ச‌க் க‌ட்ட‌ உதார‌ண‌ம்.இதே க‌தையை வைத்து சுரேஷ் ச‌க்க‌ர‌வ‌ர்த்தி எடுத்த‌ ச‌ன் தொலைக்காட்சி நாட‌க‌ம் (பதி சபாபதி)இதை விட‌ எவ்வள‌வோ பெட்ட‌ர்.

சுருளிராஜ‌ன்,வெண்ணிற‌ ஆடை மூர்த்தி வ‌கைய‌றாக்க‌ள் இருந்தாலும் நாம் அனைவ‌ரும் சிலாகிப்பது நாகேஷைப் பார்த்து தான்.

என்னுடைய‌ த‌ர‌மான‌ ந‌கைச்சுவைப் ப‌ட‌ங்க‌ளின் லிஸ்ட்:

1)காத‌லிக்க‌ நேர‌மில்லை.
2)இன்று போய் நாளை வா.
3)தேன்மழை.
4)ச‌பாபதி.
5)ச‌பாஷ்மீனா+வாலிப‌விருந்து=உள்ள‌த்தை அள்ளித்தா.

முடிவுரை:

இது என் க‌ருத்து. அனைவரும் ஏற்றுக் கொள்ள‌ வேண்டும் என்று இல்லை.மாறுப‌ட்ட‌ க‌ருத்துக்க‌ள் தான் வாழ்க்கையை சுவார‌சிய‌ம் ஆக்குகின்ற‌ன‌.

குறிப்பு:

1) நானும் க‌ம‌ல் ர‌சிக‌ன் தான்.
2) கோவிச்சுக்காதீங்க கோவி(இதான‌ முர‌ண்தொடை)

இக்க‌ட்டுரைக்கு எத்த‌ன‌ மார்க் கொடுப்பீங்க‌

15 comments:

கோவி.கண்ணன் said...

செல்வம்,

எனக்கு பிடித்ததைச் சொன்னேன். மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்று நினைப்பதில் தவறல்ல. பலே பாண்டியா கூட நல்ல நகைச்சுவை படம் தான். நான் தெரிவு செய்த படங்கள் அனைத்தும் கருப்பு வெள்ளை. இந்த காலத்தினருக்கு நீங்கள் சொல்லும் படங்களெல்லாம் நகைச்சுவையாக தெரியுமா என்று தெரியலை.

கவர்சி நாயகிகளின் குத்தாட்டத்தை, கதை நாயகிகளை வைத்தே குத்தாட்டம் போட இயக்குனர்கள் தள்ளியது முதலே எல்லா படமும் மூன்றாம் தர படங்கள் என்று சொல்ல முடியும்.

SubbuduDaasan said...

Hello!

It's a quality COMEDY FILM - suited for adults (same is true for "Panchatantiram" too!) The BIG problem with US is that we want every film to be watched with the kids!!! Then you can only take stories from Ambulimama!!! If there is violence, sex - that film is branded as a BAD one!! (How do you take a film about Mafia, serial killers but still make them so "PURE" that you can watch with your kids?!!!

I think we need to more open and enjoy the movies based on the theme - not based on your pre-conceived notions.

வற்றாயிருப்பு சுந்தர் said...

அவ்வை சண்முகி மூன்றாம்தரமான நகைச்சுவைப் படம் என்று நீங்கள் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - மன்னிக்க. ஒரு சில காட்சிகளை மட்டும் (நாஸர் பாண்டியைக் கண்டுபிடிப்பது, உச்சக்கட்ட காட்சி - இரண்டிற்கும் பொதுவான அம்சம் கமல் சட்டையைத் திறந்து காண்பிப்பது - அதிலும் அந்தப் பாத்திரம் பெண் (போன்ற) என்று அமைக்கப்பட்டிருப்பதால் ஆபாசமாகத் தோற்றமளிக்கிறது, மணிவண்ணனும் கமலும் 'நேருக்கு நேர்' படிகளில் மோதிக்கொள்வது போன்றவை) சற்று Subtle ஆகக் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்பது என் கருத்து. மற்றபடி படத்தில் ஏராளமான நகைச்சுவைக் காட்சிகளும் அற்புதமான நடிப்பையும் (நாகேஷ், மணிவண்ணன், மீனா, அந்தக் குழந்தை, ஜெமினிகணேசன், டெல்லி கணேஷ், ஏன் தலைவர் பாலு கூட ஒரே காட்சியானாலும் டாக்டராக வந்து அலம்பல் பண்ணுவார் - என்று வரிசை நீளம்) படம் நிறைய பார்க்கலாம்.

இப்படிச் சிறந்த கலைஞர்கள் கூட்டாக இணைந்து கடும் உழைப்பைத் தந்து உருவாக்கிய படத்தை எளிதாக 'மூன்றாம் தர நகைச்சுவைப்படம்' என்று சொல்லி விட்டீர்கள். படம் நெடுக ரெட்டை அர்த்த வசனம் என்று வேறு சொல்கிறீர்கள் - நான் குறிப்பிட்ட வெகுசில காட்சிகளைத் தவிர வேறு எதுவும் நெளியவைப்பதாக நினைவில்லை. Dialogues were actually sharp with great timing from everyone!

இது எனது கருத்தே. உங்கள் கருத்தை மதிக்கிறேன்.

நன்றி.

செல்வம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,கோவியார் அவர்களே.

//எனக்கு பிடித்ததைச் சொன்னேன். மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்று நினைப்பதில் தவறல்ல//

இது அப்படத்தைப் பற்றிய என் கருத்து. அவ்வளவே.

//கவர்சி நாயகிகளின் குத்தாட்டத்தை, கதை நாயகிகளை வைத்தே குத்தாட்டம் போட இயக்குனர்கள் தள்ளியது முதலே எல்லா படமும் மூன்றாம் தர படங்கள் என்று சொல்ல முடியும்.//

வழிமொழிகிறேன்.

செல்வம் said...

Thanks for your comment Mr.Subbududaasan.
என் கருத்து, அந்தப் படத்தை தரமான படம் என்று கூறினால்,நகைச்சுவைப் படம் என்றாலே டபுள்மீனிங் பேசுவது தான் என்பது போல் ஆகிவிடும்.பாலியல் நகைச்சுவை இல்லாமல் நாம் நிறைய நல்ல தரமான படங்கள் கொடுத்துள்ளோம்.கமலே கூட மைக்கேல் மதன காமராஜன் கொடுத்துள்ளார்.

செல்வம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுந்தர்.நீங்கள் சொல்லிய நல்ல விஷயங்கள் படத்தில் இருந்தாலும்,படத்தில் வரும் ஆபாசத்தையும் மறுக்க முடியாது.நான் என் நண்பர் ஒருவருடன் கமலா? ரஜினியா? என்று விளையாட்டாக விவாதம் செய்து கொண்டிருந்த போது கமல் சார்பில் பேசிய நான் இந்தப் படத்தை உதாரணமாக காட்ட அவர் சிரித்தார்.
ஏன் என்று கேட்ட போது அப்படத்தை ஒரு முறை

செல்வம் said...

பார்த்து விட்டு பின்பு பேசு என்றார்.அதன் காரணமாகவே இப்பதிவு

Radha Sriram said...

எனக்கும் நீங்க சொல்வது போல தான் தோணுது. அதாவது நகைச்சுவை ஆனா தரமான நகைசுவைன்னு சொல்லமுடியாது. சோகம் என்னனா தரமான நகைச்சுவைன்னா என்னன்னே மக்களுக்கு மறந்துருச்சு..இந்த மாதிரி ஜோக்க பாத்து பாத்து(பாலியல்) இதுக்குதான் சிரிக்கணூம் போல இருக்குங்கர மாதிரி ஆயிருச்சு.....ப்ச் உங்களோட லிஸ்டுல 'அறிவாளி 'யும் சேத்துக்கோங்க....

ஜோ / Joe said...

//நான் என் நண்பர் ஒருவருடன் கமலா? ரஜினியா? என்று விளையாட்டாக விவாதம் செய்து கொண்டிருந்த போது கமல் சார்பில் பேசிய நான் இந்தப் படத்தை உதாரணமாக காட்ட அவர் சிரித்தார்.
//
Annanum Thangachiyinnu sollikittu PorvaikkuLLa rettai artha vasanam pesina kudumpa padam ChandraMuki -ya avar uthaaranam sollaliya?

செல்வம் said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி Ratha sriram,
அறிவாளி படம் இதுவரை பார்த்ததில்லை.உங்கள் கருத்து என்னைப் பார்க்க தூண்டுகிறது.

செல்வம் said...

வாங்க ஜோ, நாங்களும் அதை சொன்னோம்ல.அவர் ஏற்றுக்கொண்டார்.ஆனா அவரு பாருங்க தில்லு முல்லு படத்தை சொல்றாரு

தில்லு முல்லு said...

//ஆனா அவரு பாருங்க தில்லு முல்லு படத்தை சொல்றாரு
//
பாவம் அவரு. சொல்றதுக்கு ஒரு படம் தான் இருக்கு. சொல்லிட்டாரு. ஆனா நீங்களும் பாவம் தான். சொல்றதுக்கு எவ்வளவோ படம் இருந்தும் ஒண்ணுமே சொல்ல தெரியல பாருங்க....

Anonymous said...

//SubbuduDaasan said...
Hello!

It's a quality COMEDY FILM - suited for adults (same is true for "Panchatantiram" too!) The BIG problem with US is that we want every film to be watched with the kids!!! Then you can only take stories from Ambulimama!!! If there is violence, sex - that film is branded as a BAD one!! (How do you take a film about Mafia, serial killers but still make them so "PURE" that you can watch with your kids?!!!

I think we need to more open and enjoy the movies based on the theme - not based on your pre-conceived notions.
//
Very nice comment!!!!!!!!!
We have to think...

வற்றாயிருப்பு சுந்தர் said...

//நீங்கள் சொல்லிய நல்ல விஷயங்கள் படத்தில் இருந்தாலும்,படத்தில் வரும் ஆபாசத்தையும் மறுக்க முடியாது//

மன்னிக்க. நான் மறுக்கிறேன். சுப்புடுதாசன் சொன்ன மாதிரி, நம் எல்லாவற்றையும் குழந்தைகள் 'பார்க்கும்படி' இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு படங்களின் தரத்தை மதிப்பிடுகிறோம் என்று நினைக்கிறேன்.

அந்த வகையில் ஒரு படம் கூட தேறாது.

"வயதுவந்தவர்களுக்கான" என்ற வகையில் எனக்கு எந்த ஆபாசமும் இந்தப் படத்தில் தெரியவில்லை.

இதற்கே ஆபாசம் என்றால் American Pie போன்ற படங்களை எந்த வகையில் சேர்ப்பீர்கள்?

மைக்கேல் மதன காமராஜனைக் கொடுத்திருக்கிறார் என்றால் அதில் வரும் சிவராத்திரி பாடலையோ சுந்தரி நீயும் பாடலையோ குழந்தைகளோடு பார்க்க முடியுமா?

குழந்தைகளுடன் பார்க்கவேண்டுமென்றால் சில காட்சிகளை வெட்டிவிட்டுத்தான் பேசும்படத்தைக் கூட காண்பிக்க முடியும்.

ஹே ராம் சிறந்த படம் என்று சொல்லப்போய் என் CEOவுடன் சண்டையே வந்துவிட்டது (அவருக்கு குழந்தை குட்டிகளுடன் போய் உட்கார்ந்துவிட்டு வெளியேறி வரவேண்டியதாயிற்று என்ற கோபம்).

Anyway, I just wanted to share my thoughts.

Thanks.

செல்வம் said...

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் சுந்தர்.உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன்.அதே நேரத்தில் குமுதம் "ஒரு நடிகையின் கதை" வெளியிடுவதற்கும்,கமல் அவ்வை சண்முகி வெளியிடுவதற்கும் வித்தியாசம் இல்லை என்று நினைக்கிறேன்.

சுப்புடுதாசன் குறிப்பிட்டு உள்ளது போல் நாம் எல்லா படங்களையும் குழந்தைகளுடன் தான் பார்க்க வேண்டியுள்ளது.வயது வந்தவர்களுக்கான பட‌ங்கள் இங்கு வெளியானாலும்
அதை சமூகத்திற்குப் பயந்து தான் பார்க்கவேண்டியுள்ளது.நான் ஜோதி தியேட்டருக்குப் போரேனு பெருமையா சொல்லிட்டுப் போக முடியாது.

அதைத் தான் க‌ம‌ல்,குமுத‌ம்,ச‌லூன்க‌டைக்கார‌ர்க‌ள் அனைவ‌ரும் ப‌ய‌ன் ப‌டுத்திக்கொள்கிறார்க‌ள்.

அவ்வைச‌ண்முகி ந‌ல்ல‌ ப‌ட‌ம் என்று ஒத்துக் கொண்டால் நீயு,பாய்ஸ் போன்ற‌வ‌ற்றையும் நாம் ஏற்றுக் கொள்ள‌ வேண்டும்.

இப்ப‌டியே போனால் ந‌ல்ல‌ நகைச்சுவை கொடுக்க‌ வேண்டும் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் கூட "பாலிய‌ல் ந‌கைச்சுவையே போதும்பா அதான் இப்போ ஹிட் ஆகுதுனு" சொல்ல‌க்கூடிய‌ வாய்ப்புக‌ள் உருவாகிவிடும்.

இதுவே என் க‌ருத்து