நிற்க.அவர் சுடப்பட்டு இறந்திருந்தார்.
விக்ரம் படத்தில் அம்பிகாவை நெற்றிப் பொட்டில் சுடுவார்களே.அந்த மாதிரி சுட்டிருந்தார்கள்.(சே இந்த நேரத்தில் கூட திரைப்பட ஞாபகமா??)
சுட்டவன் நல்ல வேலைக்காரானாக இருந்திருக்க வேண்டும்.சென்னையின் மையப்பகுதியில், ஞாயிற்றுக் கிழமையில், பட்டப் பகலில், தியேட்டரில் துப்பாக்கி சுடும் காட்சி வரும் சமயத்தில் சுட்டிருந்ததால் டி.டி.எஸ் எபக்டில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அந்த அசம்பாவிதத்தை உணரவில்லை.
சரி இப்போது நான் என்ன செய்வது?.கத்துவதா? தியேட்டர் மேனேஜர் ரூம் எங்கு இருக்கும்??
நண்பா நீ யார்? தியேட்டரில் வந்து சுடும் அளவிற்கு உன் எதிரி யார்? அவருக்கு நீ செய்த கொடுமை என்ன?
அசந்தர்ப்பமாக செல்போன் அடித்தது.
"சே முடிவைக் கூட படிக்க விடமாட்டேங்கிறாங்க" என்று சொல்லியவாறே அலுவலகக் கணிணியின் தமிழ்மண விண்டோவைக் க்ளோஸ் செய்தேன்.
குறிப்பு:
1)இது பதிவர் சர்வேசனின் நஒக விற்காக எழுதப்பட்டது.
2)இதற்கு முன்பு என்னால் எழுதப்பட்ட ஒரு சிறுகதை நண்பர்களிடம் அடி வாங்கித்தரும் அளவிற்குத் திறமையுடன் இருந்தது.இப்போது நண்பர்கள் யாரும் அருகில் இல்லாத தைரியத்தில் எழுதிவிட்டேன்.
8 comments:
கதை நல்லா நச்சுன்னு இருக்கு....
:)
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜெகதீசன்
நச்சுன்னு இருக்கு...
இன்னும் கொஞ்சம்..இழுத்திருக்கலாம்...
வாங்க tbcd. கருத்திற்கு நன்றி.
//இன்னும் கொஞ்சம்..இழுத்திருக்கலாம்//
உண்மைய சொல்லப் போனா எப்படி இழுக்கிறதுனு தெரியல.:)
கதை நச்சுனு இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.
கதை நல்லா இருக்குங்க
கதை நல்லா இருக்குங்க
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க நித்யா
Post a Comment