Wednesday, January 23, 2008

"கனா காணும் காலங்கள்"கதாசிரியருக்குக் கல்தா???

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் "கனா காணும் காலங்கள்".பள்ளிப் பருவத்து சம்பவங்களை மிகக் கச்சிதமாக தொடராக மாற்றியிருப்பார்கள்.

மிகைப்படுத்துதல் இருந்தாலும்,சுமார் 2 டசன் கதாபாத்திரங்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு குணாதிசியங்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு பின்புலம் என்று புகுந்து விளையாடியிருப்பார்கள்.

நடிகர்களின் நடிப்பு ஆகட்டும், கேமரா, பிண்ணணி இசை, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் சமாச்சாரங்கள் ஆகட்டும் ஒரு நேர்த்தி இருக்கும்.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக திரைக்கதையும், வசன‌ங்களும் இருக்கும்.பிரம்மா என்பவர் எழுதி வந்தார்.இப்போது பார்த்தால் திடீரென அந்த நாடகத்தின் உயரதிகாரியின் பெயர் (ரமண கிரிவாசன் executive producer)வருகிறது.

ஏற்க‌ன‌வே இய‌க்குந‌ர் பிர‌புக‌ண்ணாவிற்குப் ப‌திலாக‌ ராஜா என்ப‌வ‌ரை மாற்றினார்க‌ள்.நாட‌க‌ம் நொண்டிய‌டிக்க‌த் தொட‌ங்கிய‌து...

இப்போது க‌தாசிரிய‌ரையும் மாற்றி விட்டார்க‌ள் .... பார்ப்போம் என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்று??

(நாங்க‌ளும் ரிப்போர்ட்ட‌ர் ஆயிட்டோம்ல‌)

4 comments:

Anonymous said...

பிரம்மாவை யாரும் அனுப்பவில்லை. அவர் சன் டிவிக்காக புதிய சீரியல் ஒன்றை எழுதி, இயக்கிக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்..

செல்வம் said...

ஓ?அப்படியா சங்கதி.....

தருமி said...

உள் விவகாரங்கள் எல்லாம் தெரிஞ்சு இருக்கு உங்களுக்கு. பரவாயில்லையே. ஆனாலும் பாருங்க உங்களுக்கே செய்தி சொல்றவரு அனானியா வர்ராரு... அதான் ஏன்னு புரிய மாட்டேங்குது. ஒருவேளை ப்ரம்மாவே வந்த் சொல்லியிருப்பாரோ...?

செல்வம் said...

//அதான் ஏன்னு புரிய மாட்டேங்குது. ஒருவேளை ப்ரம்மாவே வந்த் சொல்லியிருப்பாரோ...?//

அது எனக்கும் புரியல தருமி சார்...வருகைக்கு மிக்க நன்றி