Friday, February 1, 2008

ஒரு எலியின் காறித்துப்பல்....மீள்பதிவு

சரி நம் கதைக்கு வருவோம்...அதற்கு முன் ஒரு விளம்பர இடைவேளை...
--------------------------------------------------------------------------------
இந்தியப் பதிவுகளில் முதன்முறையாக....
திரைக்கு வந்து ஒரு நாளே ஆன....
இந்திரலோகத்தில் நா.அழகப்பன் விமர்சனம் நாளை
உங்கள் கடலையூர் பதிவில்*....

வாங்கிவிட்டீர்களாஆஆஆஆஆஆஆ.....

சாரிபா இரண்டும் மிக்ஸ் ஆயிடுச்சு...

இதை உங்க‌ளுக்கு வ‌ழ‌ங்குப‌வ‌ர்க‌ள்.....

வ‌ழ‌க்க‌ம் போல‌ அப்பா குடுக்கிற‌ காசு தான்...

* condition apply...பட‌ம் பார்த்தால் தான்
-------------------------------------------------------------------------------------

இந்த வோல்டுலயே பிந்நவீனத்துக்கு அப்புறமா நான் அதிகம் பயப்படுவது எங்க வீட்டு எலிக்குத்தான்.இப்படித்தான் சமீபத்தில் 1965 ல் இல்லீங்க..2008 ல் தான் ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது அந்த எலி வந்தது.

"ஆஹா!பகலெல்லாம் நல்லா தூங்கிட்டு நைட்டு கரெக்ட்டா டூட்டி பாக்க வந்துடுச்சுடா"என்று மனதில் நினைத்து கொண்டே படாரென எழுந்தேன்

என்ன‌? என்றார் அம்மா.

"இல்லம்மா,அந்த‌ எலிய‌ அடிக்க‌ப் போறேன்" என்றேன்.

"சும்மா ப‌டுறா..நைட்டு டைம்ல‌ போய் காமெடி ப‌ண்ணிக்கிட்டு",என்றார் என்னைப் ப‌ற்றி ஏற்க‌ன‌வே தெரிந்து வைத்திருந்த‌ என் அம்மா.

மீண்டும் எலியின் உருட்ட‌ல்.அது என்னைப் பார்த்து சிரித்த‌தோ என்ன‌வோ??

ஒரு கையில் mob யும்,ஒரு கையில் தடியையும் எடுத்துக் கொண்டு சமயலறையில் நுழைந்தேன்.(அறுக்க மாட்டாதவன் கையில்... போன்ற பழமொழியெல்லாம் ஞாபகத்திற்கு வரக் கூடாது)

எலி என்னைப் பார்த்து "வாடா வாடா வாடா உன் ப‌ல‌த்துக்கும் என் ப‌ல‌த்துக்கும் சோடி போட்டுகிடுவோமா???வாடா வாடா "என்று கூப்பிட்ட‌து போல் இருந்த‌து.

கோபம் தலைக்கேற கண்ணை மூடிக்கொண்டு (பயத்துல தான்)ஒரே அடி.இரண்டாக உடைந்தது...அம்மா வாங்கி வைத்திருந்த பொங்கல் பானை.

மீண்டும் ஒரே அடி.இந்த‌ முறை வாங்கிய‌து நான்...அம்மாவிட‌ம்.ஏண்டா பொங்க‌ளுக்கு வாங்கி வ‌ச்சிருந்த‌ பானைய‌ யாராவ‌து உடைப்பாங்க‌ளா??நாந்தான் அப்ப‌மே சொன்ன‌னே..பேசாம‌ ப‌டுன்னு..கேட்டியா???

ந‌ல்ல‌ வேளை எலி என்னைப் பார்த்து காறி துப்பிய‌தை என் அம்மா பார்க்க‌வில்லை...

4 comments:

செல்வம் said...

தமிழ்மணம் நிர்வாகம் தலைப்பில் இருந்த பரபரப்புக்காக ஒரு குட்டு குட்டியுள்ளது.அதற்கு நான் அனுப்பிய‌ பதிலைக் கீழே கொடுத்துள்ளேன்..

யாரையேனும் புண்படுத்தியிருந்தால் sorrypaa......

அன்புள்ள தமிழ்மணம் நிர்வாகத்திற்கு,

பரபரப்புக்காகப் போடப்பட்ட என் இடுகைத் தலைப்புக்கு என் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எதிர் காலங்களில் இது நேராவண்ணம் பார்த்துக் கொள்கிறேன்.

த‌ற்போதைய‌ சூழ‌லை ப‌க‌டி செய்யும் பொருட்டே அந்த‌த் த‌லைப்பு.வேறு நோக்க‌ங்க‌ள் இல்லை.


செல்வம்

Anonymous said...

செல்வம் நான் மகி
நான் தான் தமிழ் மணம் நிர்வாகியிடம் முறையீடு செய்தவன்
மன்னிக்கவும். எனக்கு வேறு வழி இல்லை. சிறு பிள்ளைகள் வந்து போகும் இடம் அது தான்
நண்பன் மகி

செல்வம் said...

வாங்க மகி.நானும் யோசிக்காமல் இந்த சூழலை பகடி செய்வதற்காக அந்த தலைப்பை வைத்து விட்டேன்...குழந்தைகள் வந்து போகும் இடத்தில் நாம் தான் சற்று பொறுப்பாக இருக்க வேண்டும் என்று உணர்த்தியமைக்கு நன்றி மகி.இனி இந்தத் தவறுகள் நேராது பார்த்துக் கொள்கிறேன்.

Dharshan said...

நன்றி செல்வம்
நண்பன் மகி