Sunday, May 4, 2008

உங்க சம்பளம் என்ன...?? என்ன கொடுமை சார் இது??

உறவினர் ஒருவர் பத்திரிக்கை வைக்க வந்திருந்தார்.அவரைப் போற்றி பாதுகாத்து விருந்தோம்பி இருக்கையில் அமரவைத்த‌வுடன் அவர் கேட்ட முதல் கேள்வி..

"த‌ம்பி எங்க‌ வேலைபார்க்கிறான்???"

"Wipro வுல"

"சம்பளம் எவ்வளவு வரும்???"

"17000 வரும்."

"என்ன அவ்வளவுதானா??நம்ம சொந்தக்காரப் பய ஒருத்தன் அங்கன தான் சேந்திருக்கான்.30 தராங்களே...இது உண்மையிலேயே Wipro தானா..இல்ல ஏதாவது போலியா????நல்லா விசாரிச்சுத் தானே சேத்தீங்க??"

"இல்ல Campus Interview....

"சரி உனக்கு எவ்வளவு வரும்??"

"எனக்குத் திக் என்றது.என் தம்பிக்கே இந்தக் கதியென்றால் துகிலியல் துறையில் பணிபுரியும் என் கதி...."

"ஒரு 9000 வரும்."

"என்னது??9000...இதெல்லாம் ஒரு வேலைன்னு பாத்துக்கிட்டு இருக்க...பேசாம வுட்டுடு".

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருதிரு என்று விழித்தேன்.

சரி..சரி ஊருக்குப் போகனும்.பஸ்ஸுக்கு காசில்லை.ஒரு 250 ரூபாய் இருந்தாக் கொடு..கல்யாண‌த்துக்கு வரும் போது தந்திர்றேன்...

21 comments:

யாத்ரீகன் said...

hahahhahaa.. but on a seirous note.. what's the next generation going to do ?! all flood into IT ?!

>>> துகிலியல் துறையில் <<<

what is it ?

செல்வம் said...

வாங்க யாத்ரீகன்...வருகைக்கு நன்றி.நான் சொல்ல வந்தது துகிலியல் துறை VSமென்பொருள் துறை என்பதல்ல.

உங்க சம்பளம் என்ன??? என்று கேட்டு மட்டம் தட்ட ஆசைப்படும் உளவியலைத்தான்...

துகிலியல் துறை = டெக்ஸ்டைல்துறை

முரளிகண்ணன் said...

same blood

செல்வம் said...

வாங்க முரளிகண்ணன்...வருகைக்கு நன்றி.

//same blood//

என்ன பண்றது???

Sing in the rain....
I am soing in the rain...

G.Ragavan said...

இந்தச் சம்பளம் கேக்குறவங்கள என்னதான் செய்றது? ஒருத்தர் வந்து இப்பிடித்தான் கேட்டாரு. சொல்ல மாட்டேன்னு சொல்லீட்டேன். அவரு தோராயமாத் தொடங்கி இவ்வளவு இருக்குமான்னு கேட்டாரு. சொல்லவே முடியாதுன்னு திட்டவட்டமா மறுத்துட்டேன். அதான் நல்லது. கேட்டாச் சொல்ல முடியாதுன்னு சொல்லீர்ரதுதான் நல்லது. எவ்வளவா இருந்தா இவருக்கென்ன.

துளசி கோபால் said...

அடக் கடவுளே......
இப்படியெல்லாம் வேறயா?

செல்வம் said...

வாங்க ராகவன், துளசி மேடம்.நன்றி

மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். said...

மனித குலத்தின் மாமேதை வாழ்க.

அற்பவாதிகள மகிழ்ச்சி அடைய வக்கிறதுதாண்னே மிகப்பெரிய சந்தோசம். அந்த வகயில நீங்க பாராட்டுக்குறியவர் தாண்னே.

Jay said...

என்ன சம்பளமடா தம்பி என்று யாராவது கேட்டால் நான் ஏதாவது, எடக்கு முடக்கா பதில் சொல்லி தப்பிடுவன். உண்மைய சொன்னா, கொஞ்சம் குறைவு என்ன தம்பி என்பானுகள். நாதாரிப் பசங்க!

ஒருவருடைய சம்பளம் அவருடைய தனிப்பட்ட விசயம் என்பதை எப்பத்தான் இந்த பசங்க உணருவானுகளோ?

செல்வம் said...

வாங்க ஒரிஜினல் மனிதன்...வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி.(இதுல உள்குத்து எதுவும் இல்லயே)

செல்வம் said...

வாங்க Mayooresan...

இது பரவாயில்ல...எங்க அப்பாவுக்கு நடந்தது இன்னும் கொடுமை.எங்க அப்பாகிட்ட ஒருத்தரு சம்பளம் என்னனு கேட்டாரு.சொல்ல விரும்பாத எங்க‌ அப்பா செலவுக்கு சரியா இருக்குன்னு சொல்லியிருக்காங்க...

அப்ப‌டின்னா ஒரு 60000 வ‌ருமான்னு அந்த‌ விடாக்க‌ண்ட‌ன் கேட்டிருக்காரு.

க‌டுப்பான‌ எங்க‌ப்பா ஏப்பா உங்க‌ வீட்டுல‌ எல்லாம் மாச‌ம் 60000 தான் செல‌வாகுதா??? என்று கேட்க‌ பார்ட்டி க‌ப்சிப்.

67ygjg said...

உங்க சம்பளம் என்னன்னு கேக்குரவங்கள எல்லாம் கிரகம் கடத்தினா எப்படி?

மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். said...

மனித குலத்தின் மாமேதைன்னு
காரல் மார்க்ஸ சொன்னேணே..

இன்னிக்கு அவரோட பொறந்த நாளு.

வந்த படம் , வராத படத்துக்கெல்லாம்
விமர்சனம், ஆராய்ச்சிக்கட்டுரைனு பதிவு போடுறாங்க. இந்த செய்தியையும் யாராச்சும் பதியுவாங்கன்னு பாத்தேன். ஒண்னும் தட்டுப்படல.எனக்கு பதிவு போடத்தெரியாதுண்னே.அதனால பின்னூட்டமாவது போடலாமுன்னு போட்டேன்.

நீ எதுவும் தப்பா நெனைச்சுகிறாதண்னே.

இலவசக்கொத்தனார் said...

மாசம் ஒத்த ரூபாதான் சம்பளம்ன்னு சொல்லிடலாமா? :)

Santhosh said...

நீங்க சொல்லியிருப்பது ரொம்ப சரி.. நிறைய பேரை அடுத்த வேலைக்கு தாவ வெக்குறதுல இந்த மாதிரியான ஆளுங்களுக்கு பெரிய பங்கு இருக்கு..

Anonymous said...

உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா ?

பொண்ணு கொடுக்கும் போது இன்னும் இருக்கு (எல்லாம் அனுபவம் தான் )

அன்புடன்
கே ஆர் பி

http://visitmiletus.blogspot.com/

செல்வம் said...

வாங்க கார்த்திக்....எதுக்கு பூமியைக் கெடுத்ததே போதுமே...இன்னொன்னையுமா???

செல்வம் said...

வாங்க ஒரிஜினல் மனிதன்...எனக்கும் அவங்களையெல்லாம் படிக்கணும்னு ஆசையிருக்கு.தகவலுக்கு நன்றி.

செல்வம் said...

வாங்க இலவசக்கொத்தனார்...

//மாசம் ஒத்த ரூபாதான் சம்பளம்ன்னு சொல்லிடலாமா?//

இதுக்கு தமிழ்நாட்டுல அர்த்தமே வேற..:-)))

செல்வம் said...

வாங்க சந்தோஷ்...மிகச் சரியான கருத்து.

செல்வம் said...

வாங்க‌ KRP

இன்னும் ஆகலை.ஆமா பொண்ணு கொடுப்பாங்கல்ல ?..

ஏற்கனவே காதல், கீதல் எதுவும் கை கூடல.:-((