சந்தோஷ் சுப்ரமணியம் டிக்கெட் இருக்கா என்று கேட்டதற்கு ஒருவர்.."வேணும்னா குருவி இருக்கு பாக்குறியா? என்றார்.தியேட்டர் என்றும் பாராமல் அவர் காலில் விழுந்து திடுத்திடுவென ஓடி ரோஹிணி வந்து சேர்ந்தேன்.50 நாட்களைக் கடந்த பின்னும் ஏறத்தாழ முழு திரையரங்கும் நிரம்பி இருந்தது.
படம் பற்றி பல பதிவுகள் வந்துவிட்டதால் மீண்டும் அதையே சொல்லி மொக்கைப் போட விரும்பவில்லை.படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த காட்சி கேரம்போர்டு விளையாடும் காட்சி தான்.
தந்தைக்கும், மகனுக்கும் இடையே உள்ள பிரச்சினைகளை மிக அழகாக சொல்லியிடுக்கிறார்கள்.
இந்தப்படமும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.ஆபாசம் இல்லை...வன்முறை இல்லை... பஞ்ச் டயலாக்குகள் இல்லை...பறந்து போய் ரயிலைப் பிடிக்க வில்லை...பின் எப்படி ???மக்களுக்கு மறை கழண்டு விட்டதா??? ஏதோ பீம்சிங் காலத்து படம் மாதிரி இருக்கு..இது எப்படி ஓடுது??? என்று கோடம்பாக்கத்துக்காரர்கள் ரூம் போட்டு மண்டையைப் பிடித்துக் கொண்டிருப்பதாகக் கேள்வி...
மக்கள் பார்க்கிறார்கள்...நாங்கள் கொடுக்கிறோம் என்ற கேனைத்தனமான வாதம் இனி எடுபடாதோ என்ற பீதி எழுந்துள்ளது.
ஞாநி இயக்குநர் அமீருடனான விவாதத்தில் ஒரு மிகச் சிறந்த கருத்தைச் சொன்னார்."ஒவ்வொரு மனிதனிடமும் நல்ல எண்ணங்களும்,வக்கிர எண்ணங்களும் சரிபாதியாக உள்ளது.மொழி போன்ற படங்கள் நல்ல எண்ணங்களுக்கு தீனி போடுகின்றன...பருத்திவீரன் போன்ற படங்கள் வக்கிர எண்ணங்களுக்கு தீனி போடுகின்றன" என்றார்.
மற்றொரு விஷயம்,வக்கிர எண்ணங்களுக்கு தீனி போடுவது என்பது எளிதான வேலை.நல்ல விஷயங்களுக்கு தீனி போடுவது தான் கடினமான வேலை.ஒவ்வொரு ஆண்டும் 100 படங்கள் வந்தாக வேண்டிய நிலையில் எல்லாப் படங்களும் நல்ல எண்ணங்களுக்குத் தீனி போடும் வகையில் எடுப்பது என்பது பணவீக்கத்தைக் குறைப்பதை விட கடினமான வேலை.
ஆனா இப்படி காப்பி அடிச்சாவது அப்பப்ப நல்ல எண்ணங்களுக்கும் தீனி போடுங்கப்பா...
7 comments:
அப்போ எங்க இளைய தளபதி படம் வக்கிர எண்ணங்களை உருவாக்குதுன்றீங்களா..
டேய்... கூப்பிடுறா ஆட்களை... எட்றா ஆட்டோவை...
அ.உ.வி.ர.ம
/ஆனா இப்படி காப்பி அடிச்சாவது அப்பப்ப நல்ல எண்ணங்களுக்கும் தீனி போடுங்கப்பா/
Excellent idea.
Ramya
//.."வேணும்னா குருவி இருக்கு பாக்குறியா? என்றார்.தியேட்டர் என்றும் பாராமல் அவர் காலில் விழுந்து திடுத்திடுவென ஓடி //
இதுதான் கடலையூர் டச் சும்மா நச்...!
ஓடியாங்க...ஓடியாங்க குருவி படத்த பாக்க ஆட்டோவுல ஆள் வராங்க...
எங்கள் இளைய தளபதிக்கு ஆட்டோவில் தான் ஆட்கள் வருவார்கள் என்பதைக் கண்டித்து.....
யாருட அங்க...எடுறா லாரிய...
A.U.V.R.M
நன்றி ரம்யா...நாடோடி இலக்கியன்
பின்னே எங்க தலைவர் (டாக்டர்தாங்க) படத்தை ஓட்ட நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டு ஆள் பிடிக்கறோம். நீங்க இப்படி சொல்லிட்டீங்களே???
ரித்தீஸ் ரசிகர் மன்றத்திலே துண்டு போட்டு வெச்சிருக்கேங்க.. அவரோட ஒரே ஒரு படம் வரட்டும்.. மத்த எல்லாரும் துண்ட காணோம் துணிய காணோம்னு ஓடப்போறாங்க....
Post a Comment