சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கும் நண்பனை பல காரணங்களுக்காகக் காணத் தவிக்கும் ஏழை முடிதிருத்தும் நண்பன் பற்றிய கதை.
திரைக்கதை:
இந்தக் கதையையே திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி எழுதிக்கொள்ளவும்.
வசனம்:
ரஜினியின் புகழ் பரப்பும் வசனங்களைச் சொன்னால் மட்டும் போதும் படம் 100 நாட்கள் ஓடி விடும் என்று சொன்ன ஜோசியக்காரனை பி.வாசு மாற்றி விடுவது நல்லது.
பசுபதி:
அவரும் என்ன தான் செய்வார் பாவம். திருப்பி திருப்பி ஒரே காட்சியையே படமாக்கியுள்ளதால் தன் கூத்துப்பட்டறை பயிற்சி முழுவதையும் காட்டியும் எடுபடவில்லை.
மீனா:
படத்தில் ஓரளவு நன்றாக செய்துள்ள ஒரே ஜீவன்.
நயந்தாரா:
காட்டு காட்டு என்று காட்டியிருக்கிறார். அதுவும் வடிவேலு மறைந்திருந்து பார்க்கும் காட்சி ஒரு தேர்ந்தெடுத்த..........சரி அடுத்த விசயத்துக்கும் போவோம்.
வடிவேலு:
யூ டூ வடிவேலு.........சமீபத்தில் வந்த எந்தப் படங்களிலும் இந்த அளவு கொத்தியதாக ஞாபகம் இல்லை. தியேட்டரில் மொத்தம் 1 1/2 இடத்தில் மட்டுமே சிரித்தார்கள்.
லிவிங்ஸ்டன் / சந்தானபாரதி / பாஸ்கர்/வையாபுரி/சந்தானம்:
இந்த கோஸ்டியைத் தவிர்த்து இருந்தாலே பாதி சேதாரத்தைத் தவிர்த்து இருக்கலாம்.
பிரபு:
போலீஸ் ட்ரெஸ்ஸில் வந்த போது அனைவரும் அசந்தர்ப்பமாக சிரித்தார்கள். செந்தில் என்ற பழைய சந்திரமுகி பெயரை சூட்டினால் மட்டும் போதுமா. என்ன கொடுமை சார் இது ?? என்று பி.வாசுவைக் கேட்டிருக்க வேண்டாமா??
கேமரா:
அது என்ன சூப்பர்ஸ்டார் வரும் காட்சிகள் மட்டும் வீடியோகேம்ஸ் பார்ப்பது போல் உள்ளது.
Technology has improved so much???????
இசை:
வெயில் / பொல்லாதவன் போன்ற படங்களுக்கு இசையமைத்த G.V பிரகாஷ் பெயரை வைத்துக் கொண்டு குசேலன் படக் குழுவினரை யாரோ ஏமாற்றி விட்டதாக
தீவிர வதந்தி ஒன்று பரவியுள்ளது.
வாசு:
நடிகன் மாதிரி காமெடி படம் எடுத்த வாசுவா இது??? அழுத்தமான கிளைமாக்ஸ் அதனால 13 ரீல்கள் சும்மா செம காமெடியா எடுத்துருக்கோம்னு ஒரு பேட்டில இவரு சொன்ன போது கண்களில் இருந்து என்னையும் அறியாமல் நீர் வந்தது.
ரஜினி:
யாருப்பா அது. அவர் இந்தப் படத்துல இருக்காரா ??? போங்கப்பா ??? பொய் சொல்றீங்க. அண்ணாமலை - 2 , சந்திரமுகி - 2 எல்லாம் நல்ல வேளை வரவில்லை. தப்பித்தோம்.
கிளைமேக்ஸ் :
இது மட்டும் நல்லா இருந்தா போதுமா??? முதல் 2 1/4 மணி நேரம் யாரு உக்காற்றது??
ரசிகர்கள்:
இவர்களுக்கு ஒரு அன்பான எச்சரிக்கை. உங்க தலைவர் சொன்னது தான்....
வேண்டாம்.......நொந்துடுவே.....
9 comments:
//மீனா:
படத்தில் ஓரளவு நன்றாக செய்துள்ள ஒரே ஜீவன்.//
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். :-))))))
நல்லாயில்லேங்கிறீங்க ஆனா எல்லோரும் போயிருறீங்களே
கண்டனத்தை ஏற்றுக் கொள்கிறேன்.
:-((
வாங்க முரளி....படம் பார்க்கும் வரை விமர்சனங்கள் படிக்க வேண்டாம் என்ற என் கேவலாமான கொள்கைக்குக் கிடைத்த தண்டனை....வேறென்ன சொல்ல!!!!
:-((
செல்வம் ரோகிணிலயா பாத்திங்க
தியேட்டர்லயே டிக்கெட் கூப்பிட்டு குடுத்தாங்க
அப்பவே புரிஞ்சிருக்க வேண்டாமா
வாங்க அதிஷா.....ரோஹிணிக்குத் தான் போனேன். நீங்க சொன்ன மாதிரி டிக்கெட்ட கூப்பிட்டுத்தான் கொடுத்தாங்க......ஆனா கடமை கண்ணை மறைச்சிட்டதால நேராப் போய் விழுந்துட்டேன்.
அதிஷா நீங்களுமா? தமிழ்மணம் தாங்காது
படத்த பார்த்ததுக்கு: :(:(:(
விமர்சனத்துக்கு : :):):)
அப்படி என்ன ஐயா அவர் மேல கோபம்?
Post a Comment