Wednesday, October 24, 2007

முதலில் ஒரு அறிமுகம்

அனைவருக்கும் வணக்கம். இது என்னுடைய முதல் பதிவு.முதலில் என்னைப்பற்றி ஒரு சிறு அறிமுகம். நான் பிறந்தது கடலையூர் எனும் சிறு கிராமம். அப்பாவிற்கு மாற்றல் ஆகும் பணி என்பதால் வரிசையாக வைகை ஆறு,தாமிரபரணி ஆறு, பிறகு திருமணிமுத்தாறு ஆகிய ஆற்றங்கரைகளில் வசித்து வந்தோம் (ஒரு ஆசை தான்). படித்தது சென்னையில்.படித்து முடித்த பின் சென்னை "என்னைப் போடா வெண்ணை" எனறது. படித்தது டெக்ஸ்டைல்.பிறகு திருப்பூரில் 2 வருடங்கள் வேலை.இப்போது மீண்டும் சென்னையில்.

முதலில் எங்கள் ஊர் பற்றி சொல்லி விடுகிறேன்.எங்கள் ஊருக்குப் பக்கத்தில் தான் பாரதியார் ஊர்(எட்டையபுரம்).ஸாரி கொஞ்சம் ஓவர் ஆயிடுச்சில.பாரதி ஊருக்குப் பக்கத்து ஊர் தான் எங்கள் ஊர்.ஆனாலும் கூட எங்கள் ஊரில் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் கூட இல்லாதது எங்கள் ஊரின் தனிச்சிறப்பு.கழுதை வயதாகியும் ஊரின் வாசம் இன்னும் நினைவுகளில் உள்ளது ஆச்சரியமான ஒன்று.

பள்ளிப் படிப்பு முடியும் வரை எங்கள் கல்லூரி வழக்கில் சொல்ல வேண்டும் என்றால் சரியான பண்டு.10 ம் வகுப்பில் மாவட்ட அளவில் 2 ஆம் இடம்.கலைஞர் கையால் பரிசு.உலகமே காலுக்குக் கீழ் என்று நினைத்தால், இல்லை.12 ம் வகுப்பில் குறைவான மதிப்பெண்.கிடைத்தது அண்ணா பல்கலையில் டெக்ஸ்டைல்.

முதல் செமஸ்டரில் அனைத்துப் பாடத்திலும் பாஸ் செய்வதற்குள் டவுசர் கிழிந்து விட்டது.(நன்றி-லக்கிலுக்)."படிக்கவா எடுத்தோம் பிறப்பு" என்று திடீர் ஞானம் வந்தததில், பரீட்சைக்கு மட்டும் படிக்கும் பழக்கம் வந்தது.ஒரு வழியாக 8 செமஸ்டரையும் பெயிலெ ஆகாமல் படித்தது கின்னஸ் புத்தகதில் வரும் என்று எதிர்பார்த்து, எதிர்பார்த்து கண்கள் பூத்து விட்டது.எங்கு போய் இந்த கண்டணத்தைப் பதிவு செய்வது என்று தெரியாததால் இன்று வரை செய்ய முடிய வில்லை.

பிழைப்பு தேடி மீண்டும் சென்னைக்கு வந்த போது அறிமுகமானவை தான் தமிழ்மணமும், தேன்கூடும்.நான் வந்த போது பதிவுலகமே அதிர்ந்து கொண்டிருந்தது(6 மாதங்களுக்கு முன்பு).
பிராய்டு சொல்லுவார்,மனிதனுக்கு இயல்பாக இருப்பது செக்ஸ் மற்றும் அக்ரெசன் இரன்டும் தான் என்று.வலைப்பதிவின் அக்ரெசனால் ஈர்க்கப்பட்ட நான் 6 மாதம் ஜாலியாக வேடிக்கைப் பார்த்து வந்தேன்.என்னுள் நிறைய மாற்றங்கள்.நிறைய புரிதல்கள்.நிறைய குழப்பங்கள்.இதை மேலும் வளர்க்கவே இந்த பதிவு முயற்சி. வாங்க பழகலாம்.

நன்றிகளுடன்.
மா.செல்வம்

19 comments:

Anonymous said...

this is a test comment

Ravi said...

http://poorna.rajaraman.googlepages.com/home

visit this page to read how to add thamizmanam karuvippattai.
u can't reach thamizmanam without karuvippattai.
welcome to blogspot......nice katturai ....

கோவி.கண்ணன் said...

திரு செல்வம்,

இயல்பான எழுத்துநடையுடன் எழுதுகிறீர்கள். நகைச்சுவை உணர்வும் நன்றாக இருக்கிறது.

பாராட்டுக்கள்.

மேலும் மேலும் எழுத்தில் சிறக்க வாழ்த்துக்கள்

செல்வம் said...

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.கோவியாரே

செல்வம் said...

Mr.Raviraj
Thanks for your information.please do keep in touch

ஜெகதீசன் said...

வாழ்த்துக்கள்!!!!!
:)

செல்வம் said...

மிக்க நன்றி திரு.ஜெகதீசன்

துளசி கோபால் said...

பதிவுலகில் கலந்ததுக்கு வாழ்த்து(க்)கள்.
ஊரே கடலைதானா? :-))))

theevu said...

இயல்பான எழுத்துநடை .வாழ்த்துக்கள்

வடுவூர் குமார் said...

வருக! வருக!

செல்வம் said...

நன்றி துளசி கோபால் அவர்களே,ஊர் மட்டும் தான் கடலை.

செல்வம் said...

நன்றி theevu அவர்களே

Anonymous said...

வலைப்பூ தலைப்பின் வரிகளில் "அ" என்று உள்ளது. அது "ஆ" வாக இருந்தால் நன்றாக இருக்கும்.

welcome to Blog world. :)

செல்வம் said...

தங்கள் comment புரியவில்லை.Mr.Johnson

வல்லிசிம்ஹன் said...

நல்வரவு செல்வம்.
அழகாக எழுது கிறீர்கள்

நன்கு வளர வாழ்த்துகள்.

செல்வம் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வல்லிசிம்ஹன் அவர்களே.

நாகை சிவா said...

வாங்க... வாங்க...

உங்க வரவு நல்வரவாகட்டும் :)

காயத்ரி சித்தார்த் said...

வாங்க செல்வம்... வாழ்த்துக்கள்!

cheena (சீனா) said...

அடடே செல்வம் - நானும் ஆக்ஸ்டு 2007ல் தான் இந்தப் பக்கம் வந்தேன் - என்னோட வலைப்பூ ஆரம்பிச்சது 2007 ஆகஸ்டு 22 புதன் கிழமை.

அறிமுகம் சூப்பர் - நல்லாருப்பா

நல்வாழ்த்துகள் செல்வம்
நட்புடன் சீனா