டீன் - ஏஜ் பருவத்தில் கையில் கிடைப்பதை எல்லாம் நான் படிப்பதைப் பார்த்து விட்டு என் அம்மா எனக்கு வேண்டிக்கொள்வதர்க்கு என்று கோயிலுக்கு செல்ல ஆரம்பித்தார்கள்.
நானும் நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக ராஜேஸ்குமார்,சுபா என்று வளர்ந்து வந்தேன்.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் என் நண்பனால் பாலகுமாரன் அறிமுகப்படுத்தப்பட்டார்.அவருடைய எழுத்து முழுவதுமாக என்னை ஈர்த்தது என்றே சொல்ல வேண்டும்.அவருடைய நாவல்கள் சுமார் 100ஐப் படித்து ஆஹா இவர் தான் நம் குரு என்று மனதில் வைத்துப் பூஜிப்பதற்குள் அவருக்கும்,வண்ணநிலவனுக்கும் நடந்த சண்டையைப் படித்ததில் மனதில் இருந்த பலூன் படீரென வெடித்தது(இருந்தாலும் உள்ளம் கவர்ந்த கள்வன், இரும்புக்குதிரைகள்,தாயுமானவன் போன்றவை இன்றும் நினைவில் உள்ளது).
விகடனால் பல எழுத்தாளர்கள் அறிமுகம் கிடைத்தது.சுஜாதா, எஸ்.ராமகிருஷ்னன், க.சீ.சிவக்குமார், போன்றோரின் படைப்புகளைப் படிக்க நேரிட்டது.
அதிலும் சுஜாதா தன் எழுத்து எனும் மந்திரக்கோலால் வசியம் செய்ய ஆரம்பித்தார்.அவருடைய சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் இவற்றோடு எனது பெரும் பொழுது போனது.
கல்கியின் பொன்னியின் செல்வன், புதுமைப்பித்தனின் சிறுகதைகள், எஸ்.ரா வின் துணைஎழுத்து, போன்றவை என் மனதைப் பெரிதும் கவர்ந்தவை.
இன்னும் நிறையப் படிக்க ஆசை.படிப்போம்,கிழிப்போம்.
4 comments:
சிறு பத்திருகைகள் படிக்கும் பழக்கம் உண்டா.? நல்ல பல எழுத்தாளர்களைப் படிக்கலாம். சுந்தர ராமசாமி, வண்ண தாசன், கலாப்ரியா, சாரு நிவேதிதா என நிறைய எழுத்தாளர்கள் சிறு பத்திரிகைகளின் மூலமாகவே எனக்கு தெரிய வந்தவர்கள்.
இணனயத்தில் நான் படித்ததில் பிடித்தது... வளர்மதி, சுகுணா திவாகர், அய்யனார், வா மணிகண்டன், ஜமாலன், அசுரன்.
நன்றி சுந்தர் அவர்களே, சிறுபத்திரிக்கை படிக்கும் பழக்கம் உண்டு.புதுமைப்பித்தன், கி.ரா, கல்கி, மனுஷ்யபுத்திரன், அ.மார்க்ஸ், சாரு, ஞாநி, போன்றோரின் எழுத்துக்கள் பிடிக்கும்.
உங்களது வாசிப்பனுபவம் மட்டுமல்ல பெரும்பாலும் எல்லாருடைய ஆரம்ப கால அனுபவங்களும் இப்படியேதான் இருக்கும் போல.
http://blog.nandhaonline.com/?p=12
கூடிய சீக்கிரம் இன்னும் தீவிர எழுத்தாளார்களின் படைப்புகளையும் ஆரம்பித்து விடுவீர்கள் என்று நம்புகிறேன்.
நல்ல பதிவு.
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நந்தா அவர்களே.
Post a Comment