1965 ல் எழுத ஆரம்பித்து சுமார் 42 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி வரும் சுஜாதா மீது எனக்கும் சில விமர்சனம் உண்டு.முதலில் அதைப் பார்க்கலாம்.
1) ஏராளமான, எலுமிச்சங்காய் அளவுள்ள போன்ற வர்ணணைகள், ஸ்பூன்லிங் ஜோக்ஸ் போன்ற பாலியல் வக்கிர எழுத்துக்கள்.
2) அயோத்தியா மண்டபம், "ஏழைப் பிராமண பையன் இட ஒதுக்கீடு காரணமாக 95% வாங்குவதற்க்குப் போராடி,போராடி ஓய்ந்து போனான்-அனிதாவின் காதல்கள்" போன்ற நுண்ணிய சாதீய எழுத்துக்கள் போன்றவற்றின் மீதெல்லாம் என்க்கும் விமர்சனங்கள் உண்டு.
இதையெல்லாம் தாண்டி அவர் தமிழில் ஒரு முக்கியமான எழுத்தாளர் என்பதை மறுக்க முடியாது.நல்ல இலக்கியம் என்பதை வானமாகக் கொண்டு எழுத்தாளர்களைப் படிகளாகக் கருதினால் சுஜாதா என்ற படியில் கால் வைக்காமல் அடுத்த படிக்கு நிச்சயமாக செல்ல முடியாது.
உதாரணமாகப் புதிதாக படிப்பதற்கு ஆசைப் படும் ஒரு பையனிடம் சென்று பின்நவீனம், கட்டுடைத்தல், நான்-லீனியர்,குறியீடு, படிமம் என்று கொடுத்தால் அவன் புத்தகத்தை மூடி வைத்து விட்டு சத்யம் தியேட்டருக்கு morning-show பார்க்கச் சென்று விடுவான்.அவன் ராஜேஸ்குமாரில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.பலரும் அப்படித்தான் ஆரம்பித்தார்கள்.
என்ன சிலர் சூழ்நிலை காரணமாகவோ, தீவிரமின்மை காரணமாகவோ, அந்த படிகளிலேயே அமர்ந்து விடுகிறார்கள்.
நாம் எல்லோருக்கும் ஹீரோ ஆக வேண்டும் என்று எண்ணம் இருக்கிறது.அதற்கு வலிமையான வில்லன் ஒருவர் தேவைப்படுகிறார். அவரைத் தாக்க பிராமணீய எதிர்ப்பு, எழுத்து வியாபாரம் போன்ற ஆயுததைப் பயன் படுத்திக் கொள்கிறோம் அவ்வளவுதான்.
இப்படி வைத்துக் கொள்வோம்.1965 ல் அவர் எழுத வருகிறார்.எழுத வந்தவுடன் புதுமைப்பித்தன் சரியில்லை, ல.ச.ரா சரியில்லை, தி.ஜா சரியில்லை என்று மட்டும் எழுதிக் கொண்டிருந்தால் இன்நேரம் அவரை மறந்து போய் இருப்போம்.
அவருடைய படைப்புகளில் கீழ்க்கண்டவற்றை மறுக்கவே இயலாது என்பது என் கருத்து.
1)சிறுகதைகள் - குதிரை யில் காணப்படும் அங்கதம், மாஞ்சு வில் காண்ப்படும் Narration, சில வித்தியாசங்களில் காணப்படும் முடிவு
2)நாவல்கள் - பூக்குட்டி, அன்று உன் அருகில், என் இனிய இயந்திரா போன்றவை.
3)கட்டுரைகள் - 70 வயது நிறைவுக் கட்டுரை, வயது வந்தவர்களுக்கு மட்டும், ஆப்பிரேசன் கட்டுரை, அனுபவக் கட்டுரைகள்(குறிப்பாக அவர் பாட்டி,அப்பா,மனைவி பற்றி எழுதியவை)
4) இது போக அவர் நல்ல இலக்கியங்களையும் அறிமுகப் படுத்த தவறியதே இல்லை.நா.முத்துக்குமார், மகுடேஸ்வரன், போன்றோரெல்லாம் அவரால் பிரபலப்படுத்தப்பட்டவர்கள் தான்.
5)விஞ்ஞான வரிசையில் "ஏன் எதற்கு எப்படி", "கடவுள் இருக்கிறாரா", "வீட்டுக்குள்ளே ஒரு உலகம்" போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இதைஎல்லாம் விட ஸீரீரங்கத்து தேவதைகள் (பகுதி 1) அவருடைய படைப்பின் உச்சம் என்று கூட சொல்லலாம்.
மற்றோர் பிடித்த அம்சம் அவர் விமர்சனங்கள் காரணமாக எழுத்துத் துறையை விட்டு விலகியதும் இல்லை.நம் பதிவுலத்தோடு இதை நாம் ஒப்பீடு செய்யலாம்.
எதை எழுதினாளும் அதை சுவாரஸ்யமாக எழுதும் திறமை அவருக்கு வாய்த்து உள்ளது.சுஜாதா இல்லாத அந்த வெற்று இடத்தில் வேறு யாரை Replace செய்ய முடியும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். ஆரோக்கியமான விவாதங்களை எதிர் பார்த்து....
மா.செல்வம்
19 comments:
very true. i am reading his works since 1980s. and have met him twice in the past. and we can chat with him every saturday at ambalam.com at 11.30 A.M.
his booklet 'oru vingana paarvayilirunthu' is one of his important work (1984) based on tao of physics by capra.
and among his novels : 14 naatkkal, karayellan senbahappu, ratham ore niram, renukaa, etc are worth mentioning.
you forgot to mention his recent books in puthukkavidai format of sanga illakiyam like kalithohai, sillappadhiharam, thirukkural and puranaanuru. very good for beginners.
and in the 70s and 80s his books on tech and computers like kaasalavil oru ulagam, sillicon chillu purathci, etc were very useful for laymen.
he is not a male chauvinist and has written many many stories and novels based on women's rights and feminisism.
also his plays are too good. like 'krishna krishna' , marumanam, etc.
also his memorable 'kanyazhiyin kadaisi pakkangal' and many many such non-fiction like alwarhal oru eliya arimugam (i have presented it to many freinds).
and i am in touch with his sisya and compiler of all his recent works, Desikan (desikan.com).
வருகைக்கு மிக்க நன்றி திரு K.R.அதியமான்.ஞானி ஒரு முறை சொன்னார்.(மொழி திரைப்பட விழாவில்)நம் படைப்பாளர்களுக்கு திறமை உள்ளது.ஆனால் நேர்மை தான் இல்லை என்று.விமர்சகர்களுக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன்.சுஜாதாவின் விடுபட்ட படைப்புகளை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
thanks for the post abt my fav writer.
im sending this to sujatha, let us wait for his reply :)
dear karthick thanks for your comment.pls do keep in touch
நடுநிலையான பார்வை. ஏறத்தாழ என் கருத்துகளும் இஃதே. நன்றி.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பினாத்தல் சுரேஷ் அவர்களே
செல்வம்,
தலைப்பு ஏன் அப்படி? சுஜாதா மீது யாருக்குக் கோபம் வர இயலும்? (காழ்ப்புணர்ச்சியோ பொறாமையோ கோபத்தினால் வருவதல்ல; அது தான் பாராட்டினை விட உயர்ந்த அங்கீகாரம்). சகஜ, பாசாங்கற்ற, புரியும்படியான உரைநடை உலகிற்கு புதுமைப்பித்தன் ஒரு மைல்கல் என்றால் சுஜாதா அடுத்த மைல்கல்.
வருகைக்கு நன்றி rathnesh.குருஜி என்ற தேடு தளத்தில் சுஜாதா என்று உள்ளீடு செய்து பார்த்த போது அவர் மீதான பல விமர்சனங்களைப் படிக்க நேர்ந்தது.அதற்கு எதிர் வினையாகத் தான் இந்தப் பதிவு.
100% சரி.
அவர் எழுத்துலகுக்கு (சேவைன்னு சொல்லலாமா?) செஞ்சதை கட்டாயம் பாராட்டணும்.
He is the first person to write scientific article and science fiction story in tamil which reached the common people
I agree with you sir,thanks for your comment Mr.Sathukka bootham. I like your name very much.
இந்தப் பதிவுக்கு ஒரு எதிர்வினை கூட வராதது ஆச்சரியமளிக்கிறது :)
சுஜாதாவிடமுள்ள ஒரு குறை..எந்தக் கதையானாலும் அவரால் "பிராமண பாஷை" சொல்லாடலை விட முடியாது.பழக்க தோஷமாக இருக்கலாம்..சந்தேகமெனில் எந்தக் கதையையாவது எடுத்து இந்தக் கண்ணோட்டத்தில் படித்துப் பாருங்கள் :)
உலகில் எந்த மனிதனும் முழுக்க 100 சதம் முழுமையானவர்களில்லை,இது எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.
எழுத்தாளர்களில் பொதுவாக இருவகை உண்டு,தங்கள் வாழ்க்கை,சூழல் சார்ந்த எழுத்திகளால் பெயர் அடைந்தவர்கள்,அவர்களால் வேறு பாணியில் எழுதவே முடியாது.(எ-டு)கி.ரா.
மற்று சிலர் புரியாத மொழியில் பின்,புண் நவீனத்துவங்கள் எழுதி மண்டையை உடைக்கும் ஒரு வகை.
இரண்டிலும் சாராத அவரவர் பாணிக்குள்ளேயே எழுதும் லாசரா போன்றோரும் உண்டு.
ஆனால் அறிவியல்,பொழுதுபோக்கு,சிறுகதை,நாவல்,
கட்டுரை,விஞ்ஞானம்,
இணையம்,இலக்கியம்,
திரைஉலகம் என கை வைத்த எல்லாத்துறையிலும் முத்திரை பதித்த எழுத்தாளர் எவரும் உண்டா?
மற்றபடி பெண்ணையும்,காமத்தையும் பற்றி புகழ்பெற்ற எழுத்தாளர் அனைவருமே எழுதியிருக்கிறார்கள்.
இன்று இணையப் பதிவுகளில் எழுதுபவரில் 100 க்கு 90 பேரிடம் சுஜாதாவின் எழுத்தின் படிமமோ,பாதிப்போ இல்லாதிருக்காது.
இதை நேர்மையுடன் ஒத்துக்கொள்ள அவர் பிறந்தகுலம் பலரின் மனதில் நெளிந்து தடுக்கிறது.
இப்படி எழுதுவதால் என்னை பிராமண விசுவாசி என் முத்திரை குத்த பல நண்பர்கள் துடிப்புடன் வருவார்கள் என அறிந்தே இதை எழுதுகிறேன்.
super
i second u...!!!!!!!!
wealthydating websites [url=http://loveepicentre.com/]identify value date dating fender jazz bass[/url] missouri dating http://loveepicentre.com/ guardian dating
http://webhealthcentre.in/anafranil/anafranil-ocd
[url=http://webhealthcentre.in/cordarone/cordarone-injection]pharmacy decorations[/url] offshore pharmacy tadalafil [url=http://webhealthcentre.in/altace/altace-1-per-day-call-doctor]altace 1 per day call doctor[/url]
list of places where you can buy drugs and shit http://webhealthcentre.in/health-mag/plans-group-health-insurance
[url=http://webhealthcentre.in/topamax/hormonal-headache-will-not-stop-with-topamax]below normal levels of creatinine in urine drug screens[/url] prescription drug abuse among teens [url=http://webhealthcentre.in/propecia/propecia-picture-results]propecia picture results[/url]
sperm drug comparison http://webhealthcentre.in/rosuvastatin/compare-rosuvastatin-with-atorvastatin-on-apo
[url=http://webhealthcentre.in/prinivil]celebrity drug overdose death[/url] information on muscle enhancement drugs [url=http://webhealthcentre.in/rythmol/side-effects-oif-rythmol]side effects oif rythmol[/url] strcutural factors lead to sell drugs drugs [url=http://webhealthcentre.in/amoxil/bottle-tube-250mg-tabs-ped-susp-amoxil-5gr-50ml-envelopes]bottle tube 250mg tabs ped susp amoxil 5gr 50ml envelopes[/url]
Hi In my opinion you are wrong. Let's discuss it.
Hello I do not agree ...
Post a Comment