Sunday, November 4, 2007

நீயா?நானா?...ஒரு கண்டணம்

நேற்று அப்பாவை பஸ் ஏத்தி விட்டு விட்டு நீயா?நானா? பார்க்கலாம் என்று வேக வேகமாக வீட்டிற்கு வரும் போது மணி 9.40.சரி முடிவையாவுது பார்க்கலாமே என்று டி.வி.ஆன் செய்தேன்.

அதில் ஒரு பெண்,தான் ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்ததற்கு தான் மிகவும் பெருமைப்படுவதாகவும்,அது போன ஜென்மத்தில் தான் செய்த புண்ணியம் என்றும் கூறிக்கொண்டிருந்தது.இதைக் கேட்டவுடன் காலம் சில நூறாண்டுகள் பின்னோக்கிச் சென்றது போல் இருந்தது.

2000 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட "யாதும் ஊரே யாவருங் கேளிர்" என்ற கருத்து தான் இன்று வரை உலக அளவில் நம்மைப் பெருமைப் படுத்துவதாக உள்ளதேயன்றி 2007ல் சொல்லப்பட்ட‌"குறிப்பிட்ட ஜாதியில் பிறந்தது தான் செய்த புண்ணியம்" என்ற கருத்து பெருமைப் படுத்துவதாக ஆகாது.

இதில் தவறு அந்தப் பெண்ணின் மீது மட்டும் இல்லை.அதன் பெற்றோர் மீதும்,சமூகத்தின் மீதும் உள்ளது.இந்த நவீன வலைப்பதிவு உலகில் கூட ஒரு மூத்த வலைப்பதிவர் இதே கருத்துடன் உள்ளது நோக்கத் தக்கது.

இவர்களுக்கு எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம் என்ற கருத்து இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்கள் போது மட்டும் தான் தோன்றும் போல் இருக்கிறது.அது முடிந்த வுடன் இப்படி பிறந்ததற்குப் பெருமைப் பட ஆரம்பித்து விடுகிறார்கள்.

திரு.கோபிநாத் அவர்கள் அந்த பெண் அப்படி பேசிய போது ஒன்றுமே சொல்லாமல் இருந்ததும் கண்டிக்கத்தக்கது.ஒரே ஒரு பெரியவர் மட்டும் நச்சென்று அந்த மேடையிலேயே கண்டித்தது ஆறுதல்.

விஜய் டி.வி. தொலைக்காட்சி உலக குமுதம் ஆகிக் கொண்டே வருகிறது.அவர்கள் டி.ஆர்.பி க்காக எதை வேண்டுமானாலும் ஒளிபரப்பலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு உள்ளது போல் தெரிகிறது.இதற்கும் என் கண்டணங்களைப் பதிவு செய்கிறேன்.

15 comments:

- PKP said...

நான் இதை ஆமோதிக்கிறேன்

சீனு said...

நானும் பார்த்தேன். ஆனால் ஆந்த பெண் மீது பரிதாபம் தான் தெரிந்தது எனக்கு. Just ignore them. ஆனால், தாலி கட்டமாட்டேன் என்ற பெண்ணின் மீது அனைவரின் கண்டனம் விழுந்தது. அவளை போன்ற பெண்ணை மருமகளாக ஏற்க மாட்டேன் என்று சொன்னவர்களும் பின் அவளே தேவலை, ஏற்றுக் கொள்வேன் என்று சொன்னார்களே!!!

//திரு.கோபிநாத் அவர்கள் அந்த பெண் அப்படி பேசிய போது ஒன்றுமே சொல்லாமல் இருந்ததும் கண்டிக்கத்தக்கது.//

இதில் அவரென்ன செய்ய முடியும்?

Great said...

அந்தப் பெண் அவ்வாறு சொன்னது ஆச்சரியமில்லை. அவாள்கள் இப்படி எங்காவது பேசாவிட்டால் தானே ஆச்சரியம். இதில் கோபிநாத் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ரொம்ப சென்சிடிவான விஷயம் இது. அதுவும் நிகழ்ச்சி நடத்துபவர் மிகவும் கவனமாக பேச வேண்டும். மேலும் இது குறித்த அங்கு விவாதம் வந்தால் அது எடுத்துக்கொண்ட topic-ல் இருந்து விலக வாய்ப்புள்ளது.

செல்வம் said...

வருகைக்கும்,கருத்துக்களுக்கும் மிக்க நன்றி,திரு.சீனு, திரு.great,திரு.pkp.
கோபிநாத் இதை விட seriouச் விஷயங்களைத் திறமையாக சமாளித்துள்ளார்.இதில் அவர் மவுனம் சற்று ஏமாற்றமே.

Anonymous said...

You know one thing. கோபிநாத் கண்டித்திருந்தால் மட்டும் அந்த பெண்ணின் மனதில் என்னத்தை மாற்றியிருக்கவா முடியும்? வலைப்பதிவுகள் என்ன, அந்த டீவி விவாத்திலும் தெரிந்திருக்கும் எந்த தலைமுறையானாலும் ஜாதி என்பதை ஒழிக்க எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருக்குமென. நீங்கள் கோபிநாத்தின் வேலையை நன்று அறிந்திருக்க வேண்டும். என்னவென்றால் நீயா? நானா? வின் கான்செப்ட் பட்டிமன்றமோ இல்லை அரட்டை அரங்கமோ அல்ல. இரு குழுவினருக்கும் இடையை நடக்கும் கருத்து பறிமாற்றத்தை திறமையாக கையாளுவதும், வழிநடத்துவது மட்டும் தான் கோபியின் வேலை. தீர்ப்பு வழங்குவது அல்ல. அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் உங்களுக்கே தீர்ப்பை எடுத்துக் கொள்ளும் சாய்ஸை விட்டு விடுகிறார்கள். இதில் தான் இந்த நிகழ்ச்ச்சியின் வெற்றி அடங்கியிருக்கிறது என்பேன்.

தாலி அணியமாட்டேன் என்று வாதிட்ட பெண்ணும் ஒரு அணியில் இருந்தனர். தான் பிறந்த ஜாதி மனிடத்தில் உயர்ந்தது என சொன்ன பெண்ணும் அதே அணியில் தான் இருந்தார். தாலி அணியமாட்டேன் என்ற சொன்ன பெண்ணுக்கு எழுந்த எதிர்ப்பு ஜாதி எதிர்ப்பு என்ற வகையில் வந்த போது வந்த ஆதரவை லவகமாக தொகுத்து சொன்னதில் நீயா?நானா? நிகழ்ச்சி எங்கோ சென்று நிற்கிறது.

கோபி எதிர்ப்பு சொன்னால் மட்டும் ஜாதி ஒழிந்து விடுமா?

செல்வம் said...

100% true. I agree with you anony

மங்கை said...

ஹ்ம்ம்ம் எனக்கு இந்த பெண்களைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருந்தது.. தாலி வேனுமா வேண்டாமா என்ற விவாதத்தை ஆரம்பித்ததே சரியில்லை... மாடர்ன்..ட்ரென்டி..பட்டிக்காட்டுத்தனம், மூடநம்பிக்கை, இது எல்லாம் என்ன என்ற அடிப்பபடை அறிவு இல்லாத பெண்கள் இவர்கள்... எங்கே பேசுகிறோம், எதைப்பற்றி என்ன பேசுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் பேசும் இவர்களுக்கு எல்லா விஷயத்திலும் இது மாதிரி அரைவேக்காட்டுத்தனமான, முதிர்ச்சியில்லாத அனுகு முறைதான்... நம் கல்வி முறை இவர்களை வேலைக்கு மட்டும் தான் தயார் படுத்திகிறது என்பதற்கு நேற்று நடந்த இந்த விவாதமே சான்று...

எனக்கு பிடிக்காத நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் வரும் இந்த விவாதங்கள் தான்..அதனாலேயே பார்ப்பதில்லை...அதுவும் வயதுக்கு மீறின, சம்பந்தம் இல்லாத கருத்து வெளிப்பாடுகள், குழந்தைகளை பேச விட்டு கை தட்டுவது...ம்ம்ம்.. டீவி யை உடைச்சுறலாம்னு இருக்கும்....

செல்வம் said...

//எனக்கு பிடிக்காத நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் வரும் இந்த விவாதங்கள் தான்..அதனாலேயே பார்ப்பதில்லை...அதுவும் வயதுக்கு மீறின, சம்பந்தம் இல்லாத கருத்து வெளிப்பாடுகள், குழந்தைகளை பேச விட்டு கை தட்டுவது...ம்ம்ம்.. டீவி யை உடைச்சுறலாம்னு இருக்கும்....//
nice.
thanks for your comment mangai

delphine said...

அந்த தொலை காட்சி நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். அந்த பெண் அவ்வாறு சொன்னது... எனக்கு ஒரு செக்கண்ட்.."திமிறு " என்று கத்த வேண்டும் போலிருந்தது... இப்படிகூட மக்கள்.
gopinath is a good compeer. But this is a very sensitive matter and I guess he was right in keeping quiet.

சீனு said...

//gopinath is a good compeer.//

நான் 'இல்லை' என்றே சொல்லுவேன். சில சமயம் அவர் one-sided ஆக பேசுவார், என்.டி.டி.வி பர்கா தத் மாதிரி.

தருமி said...

//திரு.கோபிநாத் அவர்கள் அந்த பெண் அப்படி பேசிய போது ஒன்றுமே சொல்லாமல் இருந்ததும் கண்டிக்கத்தக்கது.//

//இதில் அவரென்ன செய்ய முடியும்?//

// I guess he was right in keeping quiet.//

கோபிநாத் மெளனமாயிருந்தது அவர்மேல் இதுவரை நான் வைத்திருந்த மரியாதைக்கும், பாராட்டுக்கும் பொறுத்தமற்று இருந்தது.
he should have commented. such a stupid and arrogant comment deserved some reaction from the moderator. or, does he accept that statment?

செல்வம் said...

இதற்கு முன்பே பதில் அள்த்து உள்ளேன்.திரு.தருமி.அவர் அம்மாதிரி அமைதியாக இருந்தது எனக்கும் ஏமாற்றமே

Anonymous said...

How credible is the discussion done in the programme?

Does anyone know if the stuff said in the following link is true?

http://arataiarangam.blogspot.com/2007/07/blog-post.html

saha said...

Late in responding, just these discussions.

I go with "Mangai"'s words.

I am terribly against these "half baked"

But after some time i will be in sorrowful that it is their Ignorance.

It is dangerous our kids! to see this!

How to escape or face that situation??

Sahridhayan

raja said...

நான் இதை ஆமோதிக்கிறேன்

caste system should be demolished