Thursday, March 27, 2008

பங்குச்சந்தை - ‍சில நியாமான கேள்விகள்...

சோம.வள்ளியப்பனின் அள்ள அள்ளப் பணம் (1,2)படித்தது,வீட்டில் தொலைந்துபோ என்று கொடுத்த 15000 ரூபாயை சந்தையில் முதலீடு செய்தது இதைத் தவிர எனக்கும் பங்குசந்தைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.இதற்கே "வாரன் பப்பட்"ரேஞ்சுக்குப் பேசி இப்போது வாயைத்திறந்தாலே "போதும்! அடங்கு!" என்று சொல்லப்படும் என் துர்பாக்கிய நிலை பற்றி இங்கு சொல்ல விரும்பவில்லை.:-((

வவ்வால் அவர்களின் பங்குசந்தை குறித்த சமீபத்திய பதிவினைப் படித்தேன்.அதில் அவர் "இந்தியாவின் gdp 8 சதவிகிதமாக இருக்கும் போது பங்குச்சந்தையின் வளர்ச்சி மட்டும் எப்படி 800 சதவிகிதமாக உள்ளது?" என்ற நியாயமான கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார்.

இதைப் படித்ததும் எனக்கும் பின்வரும் சந்தேகங்கள் தோன்றின.யாராவது விளக்குங்களேன் ப்ளீஸ்...

பங்கு சந்தையில் லாப / நட்டங்கள் 2 வழிகளில் வருகிறது.அவையிவை.

1)நாம் ஒரு நிறுவனத்தில் 100 ரூபாய் முதலீடு செய்கிறோம்.அவர்கள் அதை வைத்து உற்பத்தி மூலமாகவோ அல்லது சேவை மூலமாகவோ லாபம் ஈட்டுகிறார்கள்.எங்கள் Textile துறையில் 20% லாபம் வைத்து பொருளிற்கு விற்பனை விலை நிர்ணயிப்போம்.அதில் மற்ற செலவுகள் அனைத்தும் போக 9-10 % நிகர லாபம் வரும்.அதாவது 110 ரூபாய் நமக்கு கிடைக்கும்.

2)இரண்டாவது வழி அடுத்தவனை நஷ்டம் அடையச் செய்து நாம் லாபம் சம்பாதிப்பது.100 ரூபாய் பங்கு அதிகபட்சம் 110 ரூபாய் வரை போகலாம்.200 ரூபாய்க்கு எப்படிப்போகும்? பெரிய பெரிய முதலைகள் "இந்நிறுவனம் நன்றாக உள்ளது.எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக வரும் என்றெல்லாம் போங்கு ஆட்டம் ஆடி விலையை உயர்த்தி கொண்டே வருகின்றன.என்னைப் போல் அதி புத்திசாலிகள் அடடே...இப்படி ஒரு பங்கு இருப்பது நமக்குத் தெரியாம போச்சே!! என்று நினைத்து கொண்டு 200 ரூபாய் கொடுத்து வாங்குவோம்.அவ்வளவு தான்..விலை அப்படியே பேக் அடிக்க ஆரம்பிக்கும்.நம் பணம் கோவிந்தா...இது சரியா?

இது அரசாங்கத்தின் அனுமதியோடு நடத்தப் படும் சூதாட்டம் இல்லையா.நாம் முதலீடு செய்த நிறுவனம் நஷ்டம் அடைந்து அதன் காரணமாக நாம் நஷ்டம் அடைந்தால் பரவாயில்லை.ஆனால் எவனோ ஒருவன் பங்கு சந்தையில் லாபம் அடைய நாம் நஷ்டம் அடைவது என்ன நியாயம்?.

ஏற்கனவே 40% வட்டி தருகிறோம் என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட நிதிநிறுவனங்களில் எந்த கேள்வியும் கேட்காமல் முதலீடு செய்து மோசம் போன பாரம்பரியம் கொண்டவர்கள் நாங்கள்.எங்களிடம் வந்து "Fundamental Analysis, Technical Analysis "என்று பல டெக்னிக்கல் விஷயங்களப் பேசி கொள்ளையடிப்பது எந்த விதத்தில் நியாயம்?

15 comments:

Anonymous said...

கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரத்தை பற்றி பேசுகிறீர்கள்....

ஆனாலும் உங்கள் கேள்விகளையொட்டிய பதிவொன்றை நம்ம மங்களூர் சிவா எழுதியிருக்கிறார்...தேடிப்பிடித்து படித்துப் பாருங்கள்...

விளக்கங்கள் கிடைக்கும்.

Tech Shankar said...


See here you can get some more idea. This is the link for Soma. Valliappan's current series in kumudam. Thanks to : Kumudam.


Just I am posting his series from kumudam to my blog. I am not intented for any other special motive. People will get some more ideas about Share market with Share Guru. soma.valliappans' ideas.

Thankyou Kadalaiyur

மருதநாயகம் said...

//ஏற்கனவே 40% வட்டி தருகிறோம் என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட நிதிநிறுவனங்களில் எந்த கேள்வியும் கேட்காமல் முதலீடு செய்து மோசம் போன பாரம்பரியம் கொண்டவர்கள் நாங்கள்.எங்களிடம் வந்து "Fundamental Analysis, Technical Analysis "என்று பல டெக்னிக்கல் விஷயங்களப் பேசி கொள்ளையடிப்பது எந்த விதத்தில் நியாயம்?//

நாம் இன்னும் மாறவில்லை என்ற நம்பிக்கையில் தானே இந்த சூதாட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது

வவ்வால் said...

//1)நாம் ஒரு நிறுவனத்தில் 100 ரூபாய் முதலீடு செய்கிறோம்.அவர்கள் அதை வைத்து உற்பத்தி மூலமாகவோ அல்லது சேவை மூலமாகவோ லாபம் ஈட்டுகிறார்கள்.எங்கள் Textile துறையில் 20% லாபம் வைத்து பொருளிற்கு விற்பனை விலை நிர்ணயிப்போம்.அதில் மற்ற செலவுகள் அனைத்தும் போக 9-10 % நிகர லாபம் வரும்.அதாவது 110 ரூபாய் நமக்கு கிடைக்கும்.
//

செல்வன்,
சரியாக நான் சொன்னதை புரிந்துக்கொண்டு விட்டீர்கள், இதை கணக்கில் வைத்தே அப்படி உற்பத்தி வளர்ச்சி 8 சதம் ஆனால் பங்குகள் மட்டும் எப்படி 800 சதம் போச்சுனு கேட்டேன்.

100 ரூபாய் பங்கினை அந்த நிறுவனத்தின் வளர்ச்சி ,செயல்பாடு வைத்து பார்த்தால் 110-120 தான் இருக்கணும் ஆனால் 1000- 2000 ரூபாய் எல்லாம் எப்படி போகுது. இதுல காமெடி என்ன தெரியுங்களா , கம்பெனி பெர்பார்மன்ஸ் எல்லாம் பார்த்து தான் ஷேர் வாங்கனும்னு இந்த நிபுணர்களே சொல்வாங்க, அப்போ எந்த பெர்பார்மண்சுக்கு அவ்வளவு லாபம் வருது?

அதனால தான் virtual money market னு இதை சொல்லி இருந்தேன்.

ஒரு ஷேர் எந்த விலைக்கு வாங்கினாலும் அதை ஒரு வருஷம் கைல வச்சிருந்தா... நமக்கு கம்பெனி மூலம் லாபத்தின் போனஸ் தரப்போ முகமதிப்பு- face value அடிப்படையில் தான் தருவாங்க, அந்த முகமதிப்பு 10 ரூபாய் போல தான் இருக்கும், அதுக்கு 10% 1 ரூபாய் தான் உண்மைல கொடுப்பாங்க, ஆனால் அந்த ஷேரை 1000 ரூபாய்க்கொடுத்து வாங்குவோம், எல்லாம் இல்லாத மதிப்பு! :-))

யாரோட பணமோ, யாருக்கோ தாரை வார்க்கப்படுவது தான் பங்கு சந்தை!

Anonymous said...

ஏண்டாப்பா.... வாங்க உழைத்து சாப்பிடலாம் என்று கூப்பிடுவார் யாருமே இல்லையா?

செல்வம் said...

வாங்க இரண்டாம் சொக்கன்...வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.அவசியம் படித்துப் பார்க்கிறேன்.

செல்வம் said...

வாங்க தமிழ்நெஞ்சம்...வருகைக்கும்,தகவலுக்கும் நன்றி.அவசியம் படித்துப் பார்க்கிறேன்.

செல்வம் said...

வாங்க மருதநாயகம்...

//நாம் இன்னும் மாறவில்லை என்ற நம்பிக்கையில் தானே இந்த சூதாட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது//

சரியாகச் சொன்னீர்கள்.ஆசை யாரை விட்டது.

செல்வம் said...

வாங்க வவ்வால்...உங்க பதிவைப் படித்ததால் எழுதிய பதிவுதான் இது.ஆனாலும் இவர்கள் பங்குச்சந்தைக்கு கொடுக்கும் பில்டப் சற்று ஓவர்தான் என்று நினைக்கிறேன்.

//யாரோட பணமோ, யாருக்கோ தாரை வார்க்கப்படுவது தான் பங்கு சந்தை!//


இது ந‌ச்:-))

செல்வம் said...

வாங்க அனானி...கருத்திற்கு நன்றி

மங்களூர் சிவா said...

:)

செல்வம் said...

வாங்க சிவா...ஏதாவது சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்.ஸ்மைலியோடு விட்டுட்டீங்களே:-((

kovaitamilan said...

plz try now .invest and good return..
read stock market books. first u will try paper trading and next try LIVE TRADING
========>ALL THE BEST<==============

kovaitamilan said...

hi you start now trading and learn market. ALL the best

kovaitamilan said...

plz try now .invest and good return..
read stock market books. first u will try paper trading and next try LIVE TRADING
========>ALL THE BEST<==============