Friday, October 26, 2007

சன் டி.வி க்குக் கை நடுங்குகிறதா?????

அப்பொதெல்லாம் எங்கள் வீட்டில் டி.வி கிடையாது."பஞ்சு,பட்டு,பீதாம்பரம்", "ஒளியும் ஒலியும்", "சித்ரஹாரில் வரும் ஒரே ஒரு தமிழ்ப் பாட்டு", ஞாயிறு படம் இதை எல்லாம் பார்க்க வேண்டுமானால் தெருக் கடைசியில் உள்ள வீட்டிற்குத்தான் போக வேண்டும்.அவர்கள் வீட்டின் பெயரே டி.வி.காரர் வீடுதான்.அவர்களும் எங்களை விடாமல் துரத்துவார்கள்.நாங்களும் சளைக்காமல் அவர்கள் சன்னல் வழியே எட்டிப் பார்ப்போம்.அவர்கள் சன்னலையும் சாத்திய பிறகுதான் பக்கத்து தெருவில் ஒரு வீட்டில் சன்னல் சாத்தவில்லை என்பதை அறிந்து அங்கு ஓடுவோம்.

அப்பாவும் இதென்ன‌டா வ‌ம்பாப் போச்சே என்று த‌வ‌ணை முறையில் ஒரு Black and White டி.வி. ஒன்று வாங்கிக் கொடுத்தார்கள். டி.வி வந்ததில் இருந்து நான் தான் Antenna Operator.டி.வி யை ஆண்டெனாவுடன் connect செய்து விட்டு On செய்தால் விதவிதமாக புள்ளிகள் மட்டும் தெரிந்தது.படம் வரவில்லை.என் தம்பி ஏதோ ஒன்று சொல்லி அம்மாவிடம் அடி வாங்கினான்.பிறகு எலக்டீரிசியனைக் கூப்பிட்டு வந்து காட்டினால் அவர் தென்னை மரம் அருகே இருப்பதால் Antenna உயரம் பத்த வில்லை என்றார்.2 தென்னை மர உயர Antenna வைத்த பிறகுதான் டி.வி யில் புள்ளிகள் மறைந்து சச்சு தெரிந்தார்.ஆம் முதலில் நங்கள் பார்த்த பாடல் "ரோஜா மலரே ராஜகுமாரி" தான்.

90 க‌ளின் ஆர‌ம்ப‌ங்க‌ளில் cable t.v பழக்கத்தில் வந்து ஒரு நாளைக்கு 3 படங்கள் போட்டார்கள். எங்கள் வீட்டில் Cable connection கொடுக்காததால் மீண்டும் டி.வி.காரர் வீட்டு சன்னலை முற்றுகை இட்டோம்.அப்போது தான் சன் டி.வி. தனது ஒளிபரப்பு சேவையை தொடங்கியது.

இடையில் ஒரு நாள் நான் Antennaவை அங்கிட்டும், இங்கிட்டும் திருப்பி திருட்டுக் கேபிளில் பாசமலர் படம் தெரிந்த போது ஜான் பெயர்டு அடைந்த சந்தோசத்தை அடைந்தோம்.

பாச‌ம‌ல‌ர் ப‌ற்றி பேசிப் பேசியே அப்பாவை cable t.v connection கொடுக்க சம்மதிக்க வைத்தோம்.

சன் டி.வி அப்போது பல புதுமைகளால் ஈர்த்தது."சுரேஷ் சக்ரவர்தியின் டிக்,டிக்,டிக் கேம் சோ,பதி சபாபதி","ஜேம்ஸ் வசந்தனின் வார்த்தை விளையாட்டு","ரபி பெர்னாட்டின் நேருக்கு நேர்","டி.கே.வி ராஜனின் சினிமா குவிஸ்", "சாமியர்களின் சண்டை","வீரப்பனின் பேட்டி","இந்திய தொலைக்காச்சிகளில் முதன் முறையாக அவர்கள் போட்ட படங்கள்", "பயணிகள் ரயில்", "இந்த வாரம்... என்று கிளப்பிய ஆர்வம்", "Functionsஇன் Live coverage", "தூரன் கந்தசாமியின் குரல், "ஜென்மம் திகில் நாடகம்", "மெகா சீரியல்கள் அறிமுகம்" என்று அனைத்தும் நினைவில் நிற்பவை.

ஆனால் இன்று அவர்கள் சுய பரிசோதணை செய்து கொள்ள வேண்டும்.வெறும் சீரியல்களையும், படங்களையும் மட்டும் நம்பக் கூடாது.சீரியல் போர் அடித்து விட்டது. படம் 28 ரூபாய்க்கு விளம்பரம் இல்லாமல் பார்க்க முடிகிறது.விஜய் டி.வி.யும் தவிர்க்க முடியாத கட்டத்தை அடைந்து உள்ளது.

நீங்கள் மஸ்தானா,மஸ்தானா பண்ணுவதர்க்குள் அவர்கள் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சிற்கு சென்று விட்டார்கள்.

எனவே கலக்க போவது யாருவை காபி அடித்து அசத்தப் போவது யாரு என்று பண்ணாமல், புதிதாக உங்கள் முத்திரையோடு Programmes கொடுத்தீர்களேயானால் நாங்கள் பார்ப்பதற்க்கு தாயராக உள்ளோம்.

14 comments:

Anonymous said...

மற்ற எல்லா டீவிகளையும் விட சன் டீவியின் மீது எல்லாருக்கும் ஒரு தனிப்பட்ட பாசம் இருக்கும்.

ஏன்னா ஒண்ணுமே இல்லாம இருந்தப்போ, 6 மணியிலிருந்து 9 மணி வர்க்கும்னு மெதுவா ஆரம்பிச்சு கொஞம் கொஞமா எல்லா மக்களோட மனசில சன் டீவி இடம் பிடித்து விட்டது.

அதற்கப்புறம் வந்த ராஜ், ஜேஜே / ஜெயா, விஜய் எல்லாமே சன்னுக்கப்புறம் வந்தது தானேன்னு ஒரு நினைப்பு நம்ப மனசுல இன்னும் தொத்திக்கிட்டு நிக்கிறதாலதான், இன்னும் அடி மனசுல ஒரு இடம் இருந்துக்கிட்டு இருக்கு.

இன்னமும் டெக்னிக்கல் விஷயங்களில், மற்ற எல்லா டீவிகளுக்கும் சன்தான் முன்னோடியாக இருக்கிறது.

முதல் முதலில் பண்டிகைத் தினங்களில், மணீலாவிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்கிறோம் என்று விளம்பரம் செய்து, இப்போது இங்கிருந்துக் கொண்டே சர்வசாதாரணமாக தினமும் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். இது எல்லாம் ஜுஜூபி மேட்டராயிடுச்சு இப்போ.

இந்த மாதிரி பல விஷயங்களைச் சொல்லலாம். ஆனால் சமீப வருடங்களாக சன் டீவி என்றால் மெகா சீரியலும், ப்படங்கள் மட்டுமே என்ற நிலைக்கு வந்து விட்டது.

இது தொடர்ந்தால், வெகு சீக்கிரம் விஜய் முதலிடத்தை பிடித்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை.

செல்வம் said...

நந்தா said...

//மற்ற எல்லா டீவிகளையும் விட சன் டீவியின் மீது எல்லாருக்கும் ஒரு தனிப்பட்ட பாசம் இருக்கும்//

முற்றிலும் உண்மை.ஒரு காலத்தில் என் password கூட suntv என்று தான் இருந்தது.இந்தப் பதிவே ஒரு ஆதங்கம் தான்.

சீனு said...

ஆமாங்க. சன் டி.வி. ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை இரவு 8 மணி செய்தி என்பது எவராலேயும் அடிக்க முடியாத ஸ்லாட்டாக இருக்கிறது (ஒரு தலைப்பான செய்தியாக இருந்தாலும்).

//ஆனால் இன்று அவர்கள் சுய பரிசோதணை செய்து கொள்ள வேண்டும்.//

என்னதான் புது நிகழ்ச்சி என்றாலும் விஜய்யில் உள்ள சுதந்திரம் சன்னில் இல்லை. விஜய்யில் கிரியேட்டிவிட்டிக்கு முதல் மரியாதை. சன்னிலோ அதே பழைய டைப் நிகழ்ச்சிகளே. சன்னில் உள்ள ஒரு நல்ல பழக்கம் பாடல்களிலோ / படங்களிலோ உள்ள ஆபாசத்தை முடிந்தவரை வெட்டிவிடுவார்கள். பாய்ஸ் படத்தில் பல காட்சிகளுக்கு வெட்டு விழுந்தது. மேலும், மொபைலா பாடலிலும் அதிக இடங்களில் வெட்டும். ஆனால் மற்ற சேனல்களில் அப்படி இல்லை. ஒரே வருத்தம் சன்னை பே சேனல் ஆக்கியது தான்:(

இத்தனை வருடம் கட்டிக்காத்த முதலிடத்தை கலாநிதி மாறன் லேசில் விட்டுவிடுவாரா என்ன?

செல்வம் said...

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி திரு சீனு

வசந்தம் ரவி said...

அருமையான பதிவு

Athisha said...

இது என்ன தொலைக்காட்சி வாரமா எங்கு நோக்கினும் டிவி மலரும் நினைவுகள், ஆனா எல்லாமே நச்......... :)

Athisha said...

இது என்ன தொலைக்காட்சி வாரமா எங்கு நோக்கினும் டிவி மலரும் நினைவுகள், ஆனா எல்லாமே நச்......... :)

செல்வம் said...

வாங்க அதிஷா...இது பழைய ஞாபகம் மட்டும் இல்லை.பழைய பதிவும் கூட.ரவியின் பதிவில் பின்னூட்டம் இடும் போது லிங்க கொடுத்தது.வருகைக்கு நன்றி..

சரவணன் said...

நல்ல பதிவு. சிறிய திருத்தம்: ஒரே ஒரு தமிழ்ப்பாட்டு போடுற நிகழ்ச்சி 'சித்ரமாலா' என்று நினைவு. அதிலும் ரஞ்சன் கயிற்றில் தாவி வந்து பாடும் கருப்பு-வெள்ளைப் பாடலை இரண்டு, மூன்று முறை போட்டு வெறுப்பேத்தினார்கள். மோகன் ந்டித்த 'வானுயர்ந்த சோலையிலே' என்ற பாடலைப் பார்த்ததும் நினைவு உள்ளது. இன்று 24 மணி நேரமும் பாட்டு போட பல சேனல்கள் இருந்தாலும் இரவு 10 மணிக்கு மேல் விழித்து TV முன் அமர்ந்து 'அடுத்தது தமிழ் பாடலாக இருக்குமா' என்று எதிர்பார்த்த த்ரில் இதில் வருமா?

இந்தி பாட்டு போடும் சித்ரஹார் வாரம் இருமுறை இருந்தது. வெள்ளியன்று டெல்லியிலிருந்தும், புதனன்று பம்பாயிலிருந்தும் ஒளிபரப்பாகும். இதில் பாம்பே சித்ரஹார்தான் பெஸ்ட் என்று ஒரு கருத்து நிலவியது :-)

'புனியாத்' சீரியல் இரவு 9 மணிக்கு டெல்லியிலிருந்து வரும் (வாரம் இரு முறை) . அதற்கு ஐந்து நிமிடம் முன்னால் சென்னைத் தொலைக்காட்சியில் 'இன்றைய புனியாதின் கதைச்சுருக்கம்' என்று கூறுவார்கள்!

மாதம் ஒரு தடவை காட்டப்பட்ட 'திரைமலர்' என்ற நிகழ்ச்சியும் ஆவலோடு பார்க்கப்பட்டது.

இதற்கெல்லாம் முன்பாக, தென் மாவட்டங்களுக்கு தொலைக்காட்சியை அறிமுகம் செய்தது இலங்கை ரூபவாஹினி. அதற்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. அப்போதெல்லாம் தெரிந்தவர், அறிந்தவர், சொந்தக்காரர், நண்பர், தெருக்காரர் என பாகுபாடில்லாமல் யார் வேண்டுமானாலும், யார் வீட்டில் வேண்டுமானாலும் TV பார்க்கலாம். ரூபவாஹினியில் பஞ்சாயத்துத் தேர்தல் முடிவுகள் அறிவித்த ஒருநாளில் ஜெமினி நடித்த 'சுடரும், சூறாவளியும்' படத்தை அந்தமாதிரி ஓசியில் பார்த்து, இரவு நீண்ட நேரமாகியும் முடியாததால் ஏக்கத்தோடு திரும்பிவந்தோம்...இன்று வரை அப்படத்தை முழுதும் பார்த்ததில்லை.

கடலையூர், உங்க பதிவ விட என் பின்னூட்டம் நீண்டுவிட்டது...'தேவைப்பட்டால் கடிதங்களைச் சுருக்க ஆசிரியருக்கு உரிமை உண்டு' என்ற தைரியத்தில்,

அன்புடன்
சரவணன்.

செல்வம் said...

வாங்க சரவணண்...அதற்கு பெயர் சித்ரமாலாவா?.சாரி சரியாக நினைவில்லை.:-)

ரூபவாஹினி பற்றி முதல் முறையாக கேள்விப்படுகிறேன்.வருகைக்கும்,கருத்திற்கும் மிகவும் நன்றி சரவணண்.

Anonymous said...

செல்வம், நல்ல பதிவு.

சரவணன், நீங்க என் செட்டு...கடலையூரார் நமக்கு அடுத்த செட்டு :-)

ரூபவாஹினியின் புதன்கிழமைத் திரைப்படங்களை மறக்க முடியுமா? அதேநேரத்தில் சென்னைத் தொலைக்காட்சியின் ஐ லவ் லூசி வரும்...

இக்கினூண்டு கிளிப்பிங்குக்காக தவமிருந்து பார்த்த பெருசுகளின் மலரும் நினைவுகள் நிகழ்ச்சி? அடுத்தவாரப் படத்தின் பெயரைத் தெரிந்து கொள்வதற்காகவே பார்த்த எதிரொலி? இதெல்லாம் உட்டுட்டீங்களே?

Anonymous said...

ரூபாவாஹினி தெரியாதா?
திருச்சி முதல் கன்னியாகுமரி வரை அந்த காலத்தில் ஆண்டனாவை 360' வரை திருப்பும் போது கொடைக்கானல் அலைவரிசைக்கு அருகிரில் (அதாவது ஆண்டனா திருப்பும் வேகத்தில்)கிடைக்கும் அலைவரிசை அது,

தமிழ் செய்தி. ஞாயிறு தோறும் பொன்மாலை பொழுதில் தமிழ் பாடல்கள் அப்புறம் ரயில் சிநேகம் தொடர்..ஆங்கில night rider , super man தொடர்.. அதெல்லாம் மறக்க முடியுமா??

அந்த கால தமிழ் தூர்தர்சன் (இபோதைய பொதிகை) நாடங்கள், குறிப்பாக ஜீனோ தொடர் ஆகா அது ஒரு பொற்காலம்..

உங்கள் பதிவில ஒரு குற்றம் உள்ளது

பாசமலர் படத்தை முதலில் போட்டது தூர்தர்சன் தான்.. படத்தை கட் பண்ணாமல் 9 மணி வரை போட்டு விட்டு பின் கடைசி க்ளைமேக்ஸ் அரை மணி நேரம் தேசிய ஒளிபரப்புக்கு பின்னர் வரும் என்று சொல்லி எங்கள் குடும்பமே இரவு 12 மணி வரை முழித்து இருந்தது ஞாபகத்துக்கு வருகிறது

அடிக்கடி வரும் தடங்கலுக்கு வருந்துகிறோம் சிலைடும்..நேயர் கடிதங்களுக்கு படு சமாளிப்போடு பதில் தரும் அந்த பெயர் மறந்த மனிதரும் :))

ஆகா தூர்தர்சன் :))

சன் ஆரம்ப காலம் அட்டகாசம் தான்
ஆனால் இன்று விஜயே அமர்களம் செய்கிறது.

இடையில் கலைஞரின் வந்தனம் வேறு

எனக்கு இன்று குழப்பமான மனநிலை

ஆனால் சன் சச்சின் போல finalலில் அடித்து ஆடி கோப்பையை பிடித்து விடும் போலதான் தெரிகிறது

செல்வம் said...

வாங்க பிரகாஷ்...

//அடுத்தவாரப் படத்தின் பெயரைத் தெரிந்து கொள்வதற்காகவே பார்த்த எதிரொலி//

எதிரொலியை ம‌ற‌க்க‌ முடியுமா?அதிலும் நீங்க‌ள் சொல்வ‌து போன்று அடுத்த‌வார‌ம் ப‌ட‌ம் என்ன‌ என்று தெரிந்து கொள்வ‌தும்,ப‌ட‌ம் ஆர‌ம்பிக்கும் போது ச‌ண்டைப்ப‌யிற்சி என்று வ‌ருவ‌தைப் பார்த்து," இந்த‌ப் ப‌ட‌த்துல‌ ச‌ண்டை வ‌ரும்டா.தைரிய‌மா பாக்கலாண்டா"என்று ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் "க‌ண்டுபிடித்து" :) சொல்வ‌தும் ....
ம்ம்ம்ம்ம்

செல்வம் said...

வாங்க ரசிகன்...நாங்க அப்போ நெல்லையில் இருந்தோம்.இது பற்றி தெரியாது.

//உங்கள் பதிவில ஒரு குற்றம் உள்ளது

பாசமலர் படத்தை முதலில் போட்டது தூர்தர்சன் தான்..//

நாங்கள் பார்த்தது "திருட்டுக் கேபிளில் :)

//படத்தை கட் பண்ணாமல் 9 மணி வரை போட்டு விட்டு பின் கடைசி க்ளைமேக்ஸ் அரை மணி நேரம் தேசிய ஒளிபரப்புக்கு பின்னர் வரும் என்று சொல்லி எங்கள் குடும்பமே இரவு 12 மணி வரை முழித்து இருந்தது ஞாபகத்துக்கு வருகிறது.//

போன‌வார‌ம் த‌ம்பியிட‌ம் ச‌ண்டை போட்டு பாச‌ம‌ல‌ர் பார்த்தேன்.நான் அந்தப் படத்தின் சிறப்பையெல்லாம் சொல்லிக் கொண்டேவர.."நீயெல்லாம் ஒரு ம‌னுஷ‌னா?என்று எழுந்து போய்விட்டான்.:(

//ஆனால் சன் சச்சின் போல finalலில் அடித்து ஆடி கோப்பையை பிடித்து விடும் போலதான் தெரிகிறது//

ம‌றுப‌டியும் ஏதோ காவிய‌த்திரைப்ப‌ட‌ங்க‌ள் என்று ஆர‌ம்பித்துவிட்டார்க‌ள் போல‌..

வ‌ருகைக்கு ந‌ன்றி ர‌சிக‌ன்.